<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="31/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,702,957,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Oct 31 2026 03:45:11 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261031T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="31102026-MDU-04" position.sequence="04" ex-ref="31102026-MDU-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="48">   </lang>
	</hl2>
<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="73">தேர்தல் போர்க்களத்தில் டிஜிட்டல் வாளும் கேடயமும்!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup959234_04_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="20">தோ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ழர்­களே.. மிக மிக அவ­ச­ரம்” – யுத்­தக்­க­ளத்­தில் வெளி­யான முதல் கட்­டளை இது. தோழர்­கள் ஆயத்­த­மா­கி­விட்­டார்­கள். அடுத்­த­டுத்த கட்­ட­ளை­கள் வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“அதற்­குள் யாரும் உறங்­கப் போய் விடா­தீர்­கள்”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“போன களத்­தில் நம்மை எந்த ஆயு­தத்­தால் வீழ்த்­தி­னார்­களோ, அதே ஆயு­தத்­தால் அவர்­க­ளின் சதியை முறி­ய­டித்து நாம் வெற்­றி­பெற்றே ஆக வேண்­டும்”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“நம் திட்­டத்தை நிறை­வேற்­றும்­வரை சாப்­பாடு எது­வும் கிடை­யாது. அந்த நினைப்­பும் வரக்­கூ­டாது.’‘</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“இன்­னும் ஒரே­யொரு பணி பாக்­கி­யி­ருக்­கி­றது. அதன்­பி­றகு இன்­றைய நம் அணி­வ­குப்­பி­லி­ருந்து நாம் கலைந்து செல்­ல­லாம்.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">–ஒவ்­வொரு கட்­ட­ளை­கள் வரும்­போ­தும் தோழர்­கள் உத்­வே­கம் அடைந்­த­னர். முன்­னி­லும் வேக­மா­கக் களத்­தில் நின்­ற­னர். திட்­டத்­தைக் கச்­சி­த­மாக முடித்­துக் காட்­டி­னர். ஆனால், இது இரத்­தம் சிந்­தும் யுத்­தக்­க­ள­ மல்ல. சூழ்ச்­சி­களை வெல்­லும் ஜன­நா­ய­கத் தேர்­தல் களம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தென் அமெ­ரிக்­கா­வில் உள்ள பிரே­சில் நாட்­டின் அதி­ப­ரைத் தேர்ந்­தெ­டுக்­கும் தேர்­தல் 4 ஆண்­டு­க­ளுக்கு ஒரு முறை நடை­பெ­றும். அதி­ப­ருக்­குப் போட்­டி­யி­டு­ப­வர்­க­ளில் யார் 50% வாக்­கு­க­ளுக்கு மேல் பெறு­கி­றார்­களோ அவர்­களே வெற்றி பெற்­ற­வர்­க­ளா­வர். ஒரு­வேளை, யாரும் அந்­த­ளவு வாக்­கு­கள் பெறா­விட்­டால், முத­லி­ரண்டு இடங்­­ களுக்கு வந்­த­வர்­க­ளுக்கு மட்­டும் மீண்­டும் தேர்­தல் நடக்­கும். அதில் 50% வாக்­கு­க­ளைக் கடந்து வெற்றி பெற வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">2026 அக்­டோ­பர் 4 அன்று பிரே­சி­லில் அதி­பர் தேர்­தல் நடை­பெற்­றது. முதன்­மைப் போட்டி என்­பது லிப­ரல் பார்ட்­டி­யின் ஃப்ளாவியோ பொல்­ச­னோ­ரா­வுக்­கும், இட­து­சா­ரித் தலை­வ­ரும் பிரே­சி­லின் வலி­மை­மிக்க அதி­ப­ராக 3 முறை இருந்­த­வ­ரும் உழைப்­பா­ளர் கட்­சி­யின் தலை­வ­ரு­மான லூயிஸ் இனா­சியா லுலா டி சில்­வா­வுக்­கும் ­தான். லுலா என்­றால் அவரை உல­கம் அறி­யும். இவர்­கள் இரண்டு பேர் தவிர மேலும் சிலர் போட்­டி­யிட்­ட­னர். அவர்­க­ளில் பெரும்­பா­லா­ன­வர்­கள் வல­து­சாரி சிந்­தனை கொண்­ட­வர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஃப்ளாவி­யோவை அமெ­ரிக்க அதி­பர் டிரம்ப் வெளிப்­ப­டை­யாக ஆத­ரித்­தார். டிரம்ப்­பின் பிர­தி­நி­தி­யா­கவே பிரே­சி­லில் ஃப்ளா வியோ களத்­தில் இறங்­கி­னார். இவ­ரது அப்பா சீனி­யர் ப்ளோச­னாரோ ஏற்­க­னவே அதி­ப­ராக இருந்து குற்ற வழக்­கு­களை எதிர்­கொண்டு வரு­ப­வர். அமெ­ரிக்­கா­வின் பல­மான ஆத­ர­வு­டன் கள­மி­றங்­கிய ஃப்ளாவியோ முதல் சுற்­றுத் தேர்­த­லில் 47.03% வாக்­கு­கள் பெற்­றார். லுலா பெற்­றவை 45.16% வாக்­கு­கள்மட்­டுமே. அமெ­ரிக்­கா­வின் விருப்­பப்­படி, ஃப்ளாவியோ அதிக வாக்­கு­கள் பெற்­றா­லும்,அதி­ப­ரா­வ­தற்­கான 50%க்கு மேலான வாக்­கு­க­ளைப் பெற­வில்லை. அத­னால், முத­லி­ரண்டு இடங்­க­ளைப் பிடித்த ஃப்ளாவி­யோ­வுக்­கும் லுலா­வுக்­கும் அடுத்த சுற்­றுக்­கா­னத் தேர்­தல் அக்­டோ­பர் 25 அன்று நடை­பெ­றும் என அறி­விக்­கப்­பட்­டது. களத்­தில் போட்­டி­யிட்ட மற்ற வேட்­பா­ளர்­கள் போட்­டி­யி­டும் தகு­தியை இழந்து வெளி­யே­றி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உழைப்­பா­ளர் கட்­சி­யின் தலை­வ­ரான லுலா தனது கட்­சி­யின் முதல் சுற்­றுத் தேர்­தல் பரப்­பு­ரை­யில் இருந்த பல­வீ­னத்தை அறிந்­து­கொண்­டார். அதனை சரிப்­ப­டுத்­தி­னால்­தான் மீண்­டெழ முடி­யும் என்­ப­தில் தெளி­வாக இருந்­தார். பிரே­சி­லின் பொரு­ளா­தார உறு­தித்­தன்மை, ஏழை­க­ளுக்கு அர­சின் சார்­பில் சீரான பண உதவி, கடன் நிவா­ரண அறி­விப்­பு­கள், தொழில்­மு­னை­வோ­ருக்­கான வாக்­கு­று­தி­கள் என உழைப்­பா­ளர்­கள் மற்­றும் பொது­மக்­க­ளின் எதிர்­பார்ப்­பு­க­ளுக்­கு­ரிய வகை­யில் தன் வியூ­கத்தை வகுத்­தார். அத்­து­டன், தன்னை எதிர்ப்­ப­வர்­கள் எந்த ஆயு­தத்­தைப் பயன்­ப­டுத்­து­கி­றார்­கள் என்­பதை உணர்ந்து, அதை எதிர்­கொள்­ளும் வகை­யில் உரு­வா­னது லுலாப் படை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த லுலாப் படை என்­பது முழுக்க முழுக்க டிஜிட்­டல் தளத்தை அடிப்­ப­டை­யா­கக் கொண்­டது. லுலாப் படை என்ற வாட்ஸ்­ஆப் சேனல் உரு­வாக்­கப்­பட்­டது. அதனை உரு­வாக்கி நிர்­வ­கிக்­கும் பொறுப்பை உழைப்­பா­ளர் கட்­சி­யின் பிர­தி­நி­தி­யான ஆன்ட்ரே ஜோனோ­னஸ் ஏற்­றி­ருந்­தார். ஃப்ளாவி­யா­வின் லிப­ரல் பார்ட்­டி­யும் மற்ற வலது சாரி கட்­சி­க­ளும் வாட்ஸ்­ஆப் மற்­றும் டெலி­கி­ராம் ஆகிய டிஜிட்­டல் தளங்­க­ளில் வலி­மை­யாக இருந்து பிரச்­சா­ரம் செய்­தன.ஃபேஸ்­புக்–­இன்ஸ்­டா­கி­ராம்–­வாட்ஸ்­ஆப் உள்­ளிட்­ட­வற்றை நிர்­வ­கிக்­கும் மெட்டா நிறு­வ­னம் பிரே­சில் தேர்­த­லில் முதல் சுற்­றில் எந்­த­ள­வுக்கு ஒரு­த­லைப்­பட்­ச­மாக நடந்­தி­ருக்­கி­றது என்­பதை லுலாப் படை கண்­ட­றிந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">செயற்கை நுண்­ண­றிவு எனப்­ப­டும் ஏ.ஐ. மூல­மாக, அமெ­ரிக்­கா­வின் ஆத­ரவு பெற்ற ஃப்ளாவி­யோ­வும் மற்ற வல­து­சாரி வேட்­பா­ளர்­க­ளும் பல போஸ்­டர்­களை உரு­வாக்கி, சமூக வலை­த­ளங்­க­ளில் பரப்­பி­னர். வீடி­யோக்­க­ளைப் பகிர்ந்­த­னர். ஆனால், லுலா­வின் படத்தை உரு­வாக்க மெட்டா நிறு­வ­னத்­தின் ஏ.ஐ. தொழில்­நுட்­பம்  மறுத்­தது. பல முறை கோரிக்கை வைத்­தும் நிரா­க­ரித்­தது. ப்ளாவியா கட்­சி­யி­னர் ஃபேஸ்­புக், இன்ஸ்­டா­கி­ராம் வலைப்­பக்­கங்­க­ளில் பதி­விட்­டதை மெட்டா பல­ரி­ட­மும் கொண்டு சேர்த்­தது. அவர்­க­ளுக்­கான விளம்­பர ஏஜென்ட்­டா­கவே செயல்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதே நேரத்­தில், லுலா கட்­சி­யி­னர் பதி­வி­டு­வதை மற்­ற­வர்­கள் கண்­க­ளில் காட்­டா­த­படி மறைத்­தது. பார்­வை­யா­ளர் எண்­ணிக்­கை­யைக் கட்­டுப்­ப­டுத்­தி­யது. பெரி­ய­ள­வில் யாரி­ட­மும் போய்ச் சேரா­த­படி தனது அல்­கா­ரி­தம் எனும் நிரலை அமைத்­தது. அத்­து­டன், லுலா கட்­சி­யி­ன­ரின் பதி­வு­க­ளுக்கு நிறைய கட்­டுப்­பா­டு­களை விதித்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உல­கம் முழு­வ­தும், சமூக வலைத்­த­ளப் பரப்­புரை முன்­னிலை பெற்­று­வ­ரும் சூழ­லில், தங்­கள் பிரச்­சா­ரத்­தைத் திட்­ட­மிட்டு முடக்­கு­கின்ற மெட்டா நிறு­வ­னத்­திற்கு எதி­ராக பிரே­சி­லில் தேர்­தல் நீதி­மன்­றத்­தில் லுலா வழக்­குத் தொடர்ந்­தார். மெட்டா நிறு­வ­னத்­தின் சார்­பில் வைத்த வாதத்­தில், “லுலா கட்­சி­யி­ன­ரின் தொழில்­நுட்­ப­ரீ­தி­யான குறை­பா­டு­கள்­தான் அவர்­க­ளின் பரப்­புரை சரி­யா­கப் போய்ச் சேரா­த­தற்கு கார­ணம்” என்று தெரி­விக்­கப்­பட்­டது. தர­வு­களை அலசி ஆராய்ந்த நீதி­பதி, மெட்­டா­வின் அமெ­ரிக்க சார்பு நிலைப்­பாட்­டை­யும், பிரே­சி­லில் அது ஒரு தலைப்­பட்­ச­மாக செயல்­ப­டு­வ­தை­யும் கண்­ட­றிந்­தார். கடை­சி­யில், மெட்டா தனது தவ­று­களை ஒப்­புக் கொள்ள வேண்­டி­ய­தா­யிற்று. அல்­கா­ரி­தம் உள்­ளிட்ட நிரல்­க­ளில் பார­பட்­சம் இருப்­பதை சுட்­டிக்­காட்­டிய நீதி­பதி, களத்­தில் போட்­டி­யி­டும் வேட்­பா­ளர்­களை சம­மாக நடத்­த­வேண்­டும் என உத்­த­ர­விட்­ட­து­டன்,  உத்­த­ர­வைக் கடைப்­பி­டிக்­கா­விட்­டால், மெட்டா நிறு­வ­னம் நாளொன்­றுக்கு 98ஆயி­ரம் அமெ­ரிக்க டாலர் கட்ட வேண்­டும் என அதி­ர­டி­யாக அறி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">டிஜிட்­டல் களத்­தின் பார­பட்­ச­மான அணு­கு­மு­றை­களை அம்­ப­லப்­ப­டுத்தி, அதற்­கான நீதி­யைப் பெற்­றார் லுலா. இது­தான் அவர் கட்­சிக்­கான டிஜிட்­டல் கேட­யம். இத­னைத் தொடர்ந்து லுலாப் படை தனது டிஜிட்­டல் ஆயு­தங்­க­ளைக் கூர்த் தீட்­டத் தொடங்­கி­யது. வாட்ஸ்­ஆப் சேன­லில் இளம் வாக்­கா­ளர்­களை சேர்க்­கும் செயல்­பாட்­டைத் திட்­ட­மிட்டு வகுத்­தார் ஜோனோ­னஸ். இரண்டு வார­கால இடை­வெ­ளிக்­குள் 11 மில்­லி­யன் (1கோடியே 10இலட்­சம்) பேர் லுலாப் படை­யில் இணைந்­த­னர். அவர்­களை ஒருங்­கி­ணைத்த ஜோனோ­னஸ், இர­வும் பக­லும் கட்­ட­ளை­களை வழங்­கி­ய­ப­டியே இருந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">லுலா­வுக்­கான ஏ.ஐ.இமேஜ்­கள் உரு­வாக்­கப்­பட்­டன. உழைப்­பா­ளர் கட்­சி­யின் முழக்­கங்­கள் அதில் இடம்­பெற்­றன. குறுங்­கா­ணொ­லி­கள் வடி­வ­மைக்­கப்­பட்டு அவை அனை­வ­ரா­லும் பகி­ரப்­பட்­டன. ஒவ்­வொரு கட்­ட­ளை­யும் லுலாப் படை­யின் தோழர்­க­ளால் கடைக்­கோடி வாக்­கா­ளர்­கள் வரை கொண்டு சேர்க்­கப்­பட்­டன. குறிப்­பாக பெண்­கள், இளை­ஞர்­கள், உழைப்­பா­ளர்­க­ளி­டம் இந்த வாட்ஸ்­ஆப் சேனல் பரப்­புரை சரி­யான முறை­யில் போய்ச் சேர்ந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதி­பர் தேர்­த­லுக்­கான இரண்­டாம் சுற்­றில் கடும் போட்டி நில­வும் எனப் பல கணிப்­பு­கள் தெரி­வித்­தன. கடும்­போட்­டி­யில் ஃப்ளாவியா முன்­னே­றி­வி­டு­வார் என்­றும் அந்­தக் கணிப்­பு­கள் தெரி­வித்­தன. அதைப் பற்­றிக் கவ­லைப்­ப­டா­மல், லுலாப் படை வாக்­குப்­ப­திவு நாளன்று நேர­லை­யாக செய்­தி­க­ளைக் கொடுத்­துக் கொண்டே இருந்­தது. உழைப்­பா­ளர் கட்­சி­யி­ன­ரி­டம் மட்­டு­மின்றி, பொது­மக்­க­ளி­ட­மும் அது நம்­பிக்­கையை உரு­வாக்­கி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வாக்­கு­கள் எண்­ணிக்­கை­யின் முடி­வில் லுலா 51.7% வாக்­கு­கள் பெற்று பிரே­சி­லின் அதி­ப­ரா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டார். அமெ­ரிக்­கா­வும் மெட்டா உள்­ளிட்ட நிறு­வ­னங்­க­ளும் வரிந்து கட்டி ஆத­ரித்த ஃப்ளாவியோ 48.2% வாக்­கு­களை மட்­டுமே பெற்­றார். பிரே­சில் தேர்­தல் வர­லாற்­றில், 1989க்குப் பிறகு, முதல் சுற்­றில் பின்­தங்­கிய யாரும் இரண்­டாம் சுற்­றில் முன்­னேறி வந்து அதி­ப­ரா­க­வில்லை என்­பதை உடைத்­தெ­றிந்து லுலாப் படை இந்த வெற்­றியை சாத்­தி­ய­மாக்­கி­யுள்­ளது. குறிப்­பாக, பிரே­சி­லின் வட­கி­ழக்­குப் பகு­தி­யில் 3 மில்­லி­யன் வாக்­கு­கள் லுலா­வுக்­குப் பதி­வா­கின. நக­ரங்­களை ஒட்­டி­யுள்ள உழைப் ­பா­ளர் வாழும் பகு­தி­க­ளில் அதி­க­ள­வில் ஆத­ரவு கிடைத்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பிரே­சி­லின் அதி­ப­ரா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட லுலா டி சில்வா, “இந்­தத் தேர்­தல் களத்­தில் பொய்­க­ளும் புறக்­க­ணிப்­பும் தோல்­வி­ய­டைந்­துள்­ளன. பிரே­சில் இனி எந்­தப் பெரிய நாட்­டுக்­கும் கொல்­லைப்­புற வாச­லாக இருக்­காது” எனத் தெரி­வித்­த­து­டன், “இந்த வெற்­றிக்கு கார­ண­மான தள­பதி இவர்­தான்” என்று லுலாப் படையை வழி­ந­டத்­திய ஆன்ட்ரே ஜோனோ­ன­ஸைப் பாராட்­டி­னார். இளை­ஞர்­க­ளும், பெண்­க­ளும், உழைப்­பா­ளர்­க­ளும் வெற்­றிக் கொண்­டாட்­டத்­தில் திளைத்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சமூக வலைத்­த­ளங்­கள் எனும் டிஜிட்­டல் யுகத்­தில், அதி­கார மையங்­கள் எல்­லா­வற்­றை­யும் தங்­கள் கட்­டுப்­பாட்­டிற்­குள் வைத்­துக்­கொண்டு, தங்­க­ளுக்கு அடி­மை­யாக இருக்க விரும்­பு­கி­ற­வர்­க­ளுக்கு மட்­டுமே ஆத­ரவு கிடைக்­கச் செய்­கின்­றன. பிரே­சி­லில் இட­து­சா­ரி­கள் வலி­மைப் பெற்­று­வி­டக்­கூ­டாது என்று  அமெ­ரிக்கா தனது ஆதிக்­கத்­தி­னால், வல­து­சா­ரி­க­ளுக்கு ஆத­ர­வாக சமூக வலைத்­தள நிறு­வ­னங்­க­ளைக் கையாண்­டது போல, இந்­தி­யா­வில் பா.ஜ.க தனக்­கான அடி­மை­க­ளுக்கு ஆத­ர­வாக அதை செயல்­ப­டுத்­து­கி­றது. தமிழ்­நாட்­டில் சமூக நீதி–­மொ­ழி ­யு­ணர்­வு–­
ம­த­நல்­லி­ணக்­கம்–­மா­நில வளர்ச்சி ஆகி­யவை மேலெ­ழக்­கூ­டாது என்­ப­தற்­காக தனது புதிய சேவ­கன் த.வெ..க.வுக்கு ஆத­ர­வாக சமூ­க­வ­லைத்­தள நிறு­வ­னங்­களை இயக்­கு­கி­றது. தி.மு.க. தரப்­பில் பதி­வி­டப்­ப­டும் கருத்­து­கள் முடக்­கப்­ப­டு­கின்­றன. மக்­க­ளின் பார்­வை­யி­லி­ருந்து மறைக்­கப்­ப­டு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">லுலா பிரே­சில் நீதி­மன்­றத்தை நாடி­ய­து­போல, தி.மு.க.வும் சளைக்­கா­மல் சட்­டப்­போ­ராட்­டத்தை முன்­னெ­டுத்­துள்­ளது. கழ­கத் தலை­வர் அவர்­க­ளின் வழி­காட்­டு­த­லில் துணைப்­பொ­துச் செய­லா­ளர்–­நா­டா­ளு­மன்ற குழுத் தலை­வர் கனி­மொழி ராஜாத்தி கரு­ணா­நிதி எம்.பி. இது குறித்து சமூக வலைத்­தள நிறு­வ­னங்­க­ளுக்கு கடி­தம் எழு­தி­யுள்­ளார். தி.மு.க தக­வல்­தொ­ழில்­நுட்ப அணி­யும் கழக சட்­டத்­து­றை­யும் ஒருங்­கி­ணைந்து, நீதி­மன்­றங்­கள் மூல­மாக சமூக வலைத்­தள மோச­டி­களை அம்­ப­லப்­ப­டுத்தி, நியா­யத்­தைக் கோரி வரு­கின்­றன. அடுத்­த­டுத்த கட்ட நட­வ­டிக்­கை­க­ளும் வேக­மெ­டுத்­துள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பிரே­சி­லில் முதல் கட்­டத்தை இழந்­தா­லும், “போன களத்­தில் நம்மை எந்த ஆயு­தத்­தால் வீழ்த்­தி­னார்­களோ, அதே ஆயு­தத்­தால் அவர்­க­ளின் சதியை முறி­ய­டித்து நாம் வெற்­றி­பெற்றே ஆக வேண்­டும்” என மீண்­டெ­ழுந்த லுலாப் படை­யி­னர் போல, தி.மு.க. வின் படை­யும் அடுத்த களத்­தில் அதே டிஜிட்­டல் வாளு­ட­னும் கேட­யத்­து­ட­னும் தனது வெற்­றியை நிலை­நாட்­டும்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>