<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="01/11/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,66,957,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Oct 31 2026 23:34:09 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261101T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="01112026-VLR-05" position.sequence="05" ex-ref="01112026-VLR-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="32">குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் கூட பாதுகாப்புத்தர முடியாத துப்புக்கெட்ட –</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="32"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="80">கேடு கெட்ட த.வெ.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="36">வட சென்னையில் பல்லாயிரவர் திரண்ட மகளிர் அணி ஆர்ப்பாட்டத்தில்
கழகத் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி ராஜாத்தி கருணாநிதி எம்.பி. உறுதி!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Kaniphoo3c_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சென்னை, நவ.1–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">“குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் கூட  பாதுகாப்புத் தர முடியாத துப்புக் கெட்ட, கேடு கெட்ட த.வெ.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” என்று கழகத் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி ராஜாத்தி கருணாநிதி எம்.பி. வடசென்னையில் பல்லாயிரக்கணக்கில் திரண்ட கழக மகளிர் அணி ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றும்போது கூறினார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பெண்­கள் மற்­றும் குழந்­தை­க­ளின் பாது­காப்­பின்மை, விலை­வாசி உயர்வு உள்­ளிட்ட மக்­கள் விரோ­தச் செயல்­பா­டு­க­ளைக் கண்­டித்து, திமுக மக­ளிர் அணி­யின் சார்­பில் சென்னை மாவட்ட ஆட்­சி­யர் அலு­வ­ல­கம் அரு­கில் மாபெ­ரும் கண்­டன ஆர்ப்­பாட்­டம் நடை­பெற்­றது. இந்த ஆர்ப்­பாட்­டத்­தில் திமுக துணைப் பொதுச்­செ­ய­லா­ள­ரும், நாடா­ளு­மன்ற திமுக குழுத் தலை­வ­ரு­மான கனி­மொழி ராஜாத்தி கரு­ணா­நிதி எம்.பி, விரை­வில் வரக்­கூ­டிய மாற்­றத்­திற்­கான வாழ்த்­து­களை நான் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன் என்று கூறி ஆற்­றிய உரை வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பெண்­கள் நினைத்­தால் செய்ய முடி­யா­தது என்று ஒன்­றுமே இல்லை.இன்று தமிழ்­நாட்­டில் இருக்­கக்­கூ­டிய பெண்­கள் நினைத்­து­ 
விட்­டார்­கள். தெரி­யா­மல் வாக்­க­ளித்­து­விட்­டோம். தவ­றா­கி­விட்­டது. அத­னால் நீங்­கள் இல்லை, உங்­க­ளைச் சொல்­ல­வில்லை. நீங்­கள் அந்­தத் தவ­றை­யெல்­லாம் செய்ய மாட்­டீர்­கள் என்று எனக்கு நன்­றா­கத் தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வாக்­க­ளித்­த­வர்­கள் இன்று ஒவ்­வொரு நாளும் தெரி­யா­மல் செய்­து­விட்­டோமே, தவறு செய்­து­விட்­டோமே என்று அந்­தப் பெண்­க­ளும், அந்த குடும்­பத்­தில் இருக்­கக்­கூ­டி­ய­வர்­க­ளும், இளை­ஞர்­க­ளும் வருத்­தப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கக்­கூ­டிய சூழ­லில் பெண்­கள் இன்று ஒன்று கூடி­விட்­டார்­கள். தமிழ்­நாடு முழு­வ­தும் இருக்­கக்­கூ­டிய பெண்­கள் இன்று தெரு­வில் இறங்­கிப் போரா­டத் தொடங்­கி­விட்­டார்­கள். அத­னால் நிச்­ச­யம் மாற்­றம் வரும், விரை­வில் மாற்­றம் வரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆட்­சிப் பொறுப்­புக்கு வரு­வ­தற்கு முன்­னால் பெரி­தா­கப் பிரச்­சா­ரம் செய்­யா­விட்­டா­லும், செய்த நேரத்­தி­லெல்­லாம் “இது நாடா? காடா?” என்று கேட்­டார்   ஜோசப் விஜய் அவர்­கள். அன்­புத்தம்பி விஜய் கேட்­டார், sweet bro விஜய் கேட்­டார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">மக்­களை ஏமாற்றி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">ஆட்­சிக்கு வந்த விஜய்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சரி, இதை­விட இவ்­வ­ளவு நல்ல ஆட்சி நடக்­கி­றதே! இதை­விட ஒரு­வர் நல்ல ஆட்சி கொடுக்க வேண்­டும் என்­கி­றாரே, இதுவே நன்­றாக இல்­லையே என்­கி­றாரே! இந்­தி­யா­வி­லேயே சிறப்­பான ஆட்சி இந்த ஆட்­சி­யாக இருக்­கி­றதே! நம்­மு­டைய முத­ல­மைச்­ச­ராக இருக்­கக்­கூ­டிய அண்­ணன் தள­பதி அவர்­க­ளு­டைய ஆட்சி மிகச் சிறப்­பான ஆட்­சி­யாக இருக்­கி­றதே! எல்­லா­ரும் வந்து இப்­ப­டிப்­பட்ட ஆட்சி என்று பாராட்­டக்­கூ­டிய அள­விற்கு இருக்­கி­றதே, இதை­வி­டச் சிறப்­பாக ஓர் ஆட்சி செய்­து­விட முடி­யுமா, அது என்­ன­வென்று பார்த்­து­வி­டு­வோம் என்று நினைத்து வாக்­க­ளித்­தார்­களா என்று தெரி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பெண்­க­ளுக்­குப் பாது­காப்பு இல்லை, இதை­விட பெண்­க­ளுக்­குப் பாது­காப்பு கொடுப்­போம் என்­றெல்­லாம் சொல்லி மக்­களை ஏமாற்றி ஆட்­சிப் பொறுப்­பிற்கு வந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">என்ன திரைப்­ப­டம் என்று தெரி­ய­வில்லை, ஒரு திரைப்­ப­டம். விஜய் நடி­க­ராக இருந்­த­பொ­ழுது வந்த ஒரு திரைப்­ப­டம். நான் நிறைய அவ­ரு­டைய திரைப்­ப­டங்­க­ளைப் பார்த்­த­தில்லை. ஆனால் தொலைக்­காட்­சி­யில் ஒரு காட்சி பார்த்­தி­ருக்­கி­றேன். யாரோ ஒரு­வன் ஒரு பெண்­ணி­டம் தவ­றாக நடந்­து­கொள்­வான், அவனை அடித்து ஒரு பாலத்­திற்கு அடி­யில் கட்டி வைத்­தி­ருப்­பார். என்ன திரைப்­ப­டம்? ‘தெறி’யா? சரி. அதே­போல தெறிக்க விட்­டு­வி­டு­வார் என்று நினைத்­தார்­கள், அல்­லவா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால் இன்று அதே­போல அவர் இந்த பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­க­ளில் ஈடு­ப­டக்­கூ­டி­ய­வர்­கள், பாலி­யல் வன்­கொ­டு­மை­யில் ஈடு­ப­டக்­கூ­டி­ய­வர்­களை ஏதா­வது பாலத்­திற்கு அடி­யில் கட்டி வைக்­க­வேண்­டும் என்று நினைத்­தால், முத­லில் அவ­ரு­டைய கட்­சி­யி­ன­ரைத்­தான் கட்ட வேண்­டும். நம் தலை­வர் நிறைய பாலங்­க­ளைக் கட்டி வைத்­தி­ருக்­கி­றார். அத­னால் கவ­லை­யில்­லை­யில்­லா­மல் கட்­ட­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">த.வெ.க.வின­ரின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">குற்­றப்­பட்­டி­யல்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­பொ­ழுதே 20-க்கும் மேல் பெண்­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­க­ளில், வன்­மு­றை­க­ளில் ஈடு­பட்­டி­ருப்­பது த.வெ.க-வைச் சார்ந்த நிர்­வா­கி­கள் தாம். சில நேரங்­க­ளில் சில கட்­சி­க­ளில் குற்­றம் செய்­த­வர்­கள் ஆளுங் கட்­சி­யில் போய்ச் சேர்ந்­து­வி­டு­வார்­கள். ஒரு கட்சி ஆளுங்­கட்­சி­யாக இருக்­கும்­போதுசேர்ந்­தால் அது பாது­காப்­பாக இருக்­கும், கைது செய்ய மாட்­டார்­கள் என்று நினைப்­பார்­கள். ஆனால் த.வெ.க-வில் குற்­றம் செய்ய வேண்­டும் என்று நினைக்­கி­ற­வர்­கள் எல்­லாம் போய்ச் சேர்ந்­து­விட்­டார்­கள் என்று நினைக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பட்­டி­யல் படிக்­க­லாம், ஆனால் முடி­ய­ வில்லை. அந்த அள­விற்­குப் பாருங்­கள், இவ்­வ­ளவு பெரிய பட்­டி­யல். ஒன்று, இரண்டு, மூன்று, நான்­கு – ­நான்கு பக்­கத்­திற்கு த.வெ.க நிர்­வா­கி­கள் செய்­தி­ருக்­கக்­கூ­டிய குற்­றங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">குழந்­தை – ­சில நாட்­க­ளுக்கு முன்­னால் எண்­ணூ­ரில் இரண்­டரை வய­துக் குழந்தை. அதற்­குப் பிறகு அந்­தக் குழந்­தை­யைக் காப்­பாற்­று­வ­தற்­காக அந்­தக் குழந்­தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்­டிய ஒரு நிலை. இரண்டு மூன்று அறுவை சிகிச்­சை­கள் அந்­தக் குழந்­தை­யின் உயி­ரைக் காப்­பாற்­று­வ­தற்­கா­கச் செய்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­படிமனி­தத்­தன்­மையே இல்­லா­மல் இரண்­டரை வய­துக் குழந்­தை­யைப் பாலி­யல் வன்­கொ­டுமை செய்­யக்­கூ­டி­ய­வர்­களை எல்­லாம் நிர்­வா­கி­க­ளாக வைத்­துக்­கொண்­டி­ருக்­கக்­கூ­டிய ஓர் இயக்­கம் இருக்­கி­றது என்­றால், ஒரு கட்­சி – அது கட்­சியா என்று எனக்­குத் தெரி­ய­வில்லை. அது த.வெ.க தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது­மட்­டு­மில்லை, தூத்­துக்­கு­டி­யில் மாவட்ட த.வெ.க இளை­ஞ­ரணி அமைப்­பா­ளர் பால­மு­ரு­கன், வேலை வாங்­கித் தரு­வ­தா­கச் சொல்லி பெண்ணை வன்­கொ­டுமை செய்து கொலை மிரட்­டல் விடுத்து அந்­தப் பெண்­ணைப் பய­மு­றுத்­தி­யி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சேலம் பகு­தி­யைச் சேர்ந்த மணி­கண்­டன் 50-க்கும் மேற்­பட்ட பெண்­களை ஆபா­சப் புகைப்­ப­டங்­கள் எடுத்து அவர்­க­ளைத் தொடர்ந்து மிரட்­டிக்­கொண்­டி­ருந்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ராம­நா­த­பு­ரம் பகு­தி­யைச் சேர்ந்த கட்சி நிர்­வாகி ஜெய­பால், தூத்­துக்­குடி பகு­தி­யைச் சேர்ந்த பால­மு­ரு­கன்­இ­வர்­கள் பாலி­யல் குற்­றங்­க­ளில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் என்று கண்­ட­றி­யப்­பட்டு கைது செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஸ்ரீவை­குண்­டத்­தில் இருக்­கக்­கூ­டிய சட்­ட­மன்ற உறுப்­பி­னரே குற்­ற­வா­ளி­க­ளுக்கு ஆத­ர­வாக இருந்­தார் என்று சொல்லி அந்­தப் பெண்ணே பகி­ரங்­க­மா­கக் குற்­றம் சாட்­டி­யி­ருக்­கி­றார். ஆனால்என்ன நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கி­றார்? “அண்­ண­னாக இருக்­கி­றேன்” என்று சொன்­னாரே, இல்­லையா? “தம்பி” என்­றா­ரல்­லவா? என்ன செய்­தார்? சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரைப் பாது­காப்­ப­தற்­கா­கச் சட்­ட­மன்ற உறுப்­பி­னரை விட்டு அந்­தப் பெண்ணை மிரட்டி வழக்­கைத் திரும்­பப் பெற வைக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆலந்­தூர் வடக்கு பகு­திச் செய­லா­ள­ராக இருந்த வேம்­புலி ஒரு பெண் வீட்­டிற்­குள் புகுந்து பாலி­யல் தொல்லை கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அரக்­கோ­ணம் கிழக்கு ஒன்­றி­யச் செய­லா­ளர் சசி­கு­மார் கட்­சி­யில் பதவி வாங்­கித் தரு­வ­தா­கச் சொல்லி அந்­தப் பெண்ணை வன்­கொ­டுமை செய்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ராணிப்­பேட்டை மேற்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் விஜய் மோகன் பெண் ஒரு­வ­ருக்­குப் பதவி வாங்­கித் தரு­வ­தா­கச் சொல்லி பாலி­யல் வன்­கொ­டுமை செய்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆர்.கே. நகர் பகு­திப் பொறுப்­பா­ளர் பாம்புதினேஷ் 11 வயது சிறு­மிக்­குப் பாலி­யல் தொல்லைகொடுத்­துக் கைது செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திருச்­செந்­தூர் பகுதி நிர்­வா­கி­க­ளான பிரைட்­டர்மற்­றும் ரூஸ்­வெல்ட் இரண்டு பேரும் தங்­கள் சொந்­தக் கட்­சி­யைச் சேர்ந்த பெண் நிர்­வா­கி­யி­டம் பாலி­யல் தொல்­லை­யில் ஈடு­பட்டு கொலை மிரட்­டல் விடுத்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திரு­வள்­ளூர்பகுதி நிர்­வாகி குட்டி, தன் சொந்­தக் கட்­சி­யில் இருக்­கக்­கூ­டிய பெண் நிர்­வா­கிக்­குப் பாலி­யல் தொல்லை கொடுத்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சிவ­கங்கை பகுதி நிர்­வா­கி­க­ளான மகா­ரா­ஜன், ராபின், ஹாரிஸ் –­ அங்கே இருக்­கக்­கூ­டிய அதே கட்­சி­யில் இருக்­கக்­கூ­டிய த.வெ.க-. 
வி­னு­டைய பெண் நிர்­வா­கிக்­குத் தொல்லை கொடுத்து அத்­து­மீ­ற­லில் ஈடு­பட்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">135 கிலோ மெத்­த­பெட்­ட­மைன் –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">கஞ்சா, குட்கா கடத்­தல்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­ப­டிச் சொல்­லிக்­கொண்டே போனால் சொல்­லிக்­கொண்டே இருக்­க­லாம். அதை­விட மோச­மாக 135 கிலோ மெத்­த­பெட்­ட­மைன் – ஆட்­சிப் பொறுப்­பிற்கு வரு­வ­தற்கு முன்­னால்? என்ன சொன்­னார் விஜய் “போதைப்­பொ­ருள் இல்­லாத தமிழ்­நாட்டை உரு­வாக்­கப் போகி­றேன்” என்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­ப­டிச் சொல்­லி­விட்டு அவ­ரு­டைய கட்­சி­யில் இருக்­கக்­கூ­டி­ய­வரே 135 கிலோ மெத்­தம்­பெட்­ட­மைன் வீட்­டில் வைத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது தவி­ரக் கஞ்சா. பல நிர்­வா­கி­கள் கையி­லி­ருந்து, வீட்­டி­லி­ருந்து கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டி­ருக்­கி­றது. நிறைய பேர் இதையே தொழி­லாக வைத்­தி­ருப்­ப­வர்­கள் இருக்­கி­றார்­கள். நாங்­கள்  பிளாக் டிக்­கெட் விற்­றுக்­கொண்­டி­ருந்­தார்­கள் என்று, சொன்­னோம் அவர்­கள் வேறு ஏதோ விற்­றுக் கொண்­டி­ருந்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­படிஅந்­தக் கட்­சி­யில் இருக்­கக்­கூ­டிய நிர்­வா­கி­கள் குட்கா கடத்­தல், கஞ்சா கடத்­தல், போதைப்­பொ­ருள் கடத்­த­லில் ஈடுப்­பட்­டி­ருக்­கி­றார்­கள். இவற்­றைத் தன்­னு­டைய தொழி­லாக வைத்­துக்­கொண்­டி­ருக்­கக் கூடி­ய­வர்­க­ளைத் தான் கட்­சி­யில் சேர்த்­தி­ருக்­கி­றார். அதைத் தாண்டி பெண்­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­க­ளில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளில் பலர் அவர்­க­ளு­டைய கட்­சி­யில் இருக்­கக்­கூ­டி­ய­வர்­க­ளாக இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">700 கொடூ­ரக் கொலை­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">400  பாலி­யல் வன்­மு­றை­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவர்­கள் ஆட்­சிப் பொறுப்­பிற்­குப் பாது­காப்­பான தமி­ழ­கத்தை உரு­வாக்­கு­வோம் என்று சொல்­லி­விட்டு வந்­தார்­க­ளல்­லவா ஆட்­சிப் பொறுப்­புக்கு? தமிழ்­நாட்­டில் இவர்­கள் ஆட்­சிப் பொறுப்­பிற்கு வந்த பிறகு 700 கொடூர குற்­றங்­கள்! பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­கள் 400! இது­தான் பாது­காப்­பான தமி­ழ­கத்தை உரு­வாக்­கக்­கூ­டிய லட்­ச­ணமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் கேட்­கி­றேன், முத­ல­மைச்­ச­ருக்­குக் கீழ்­தானே காவல்­துறை வரு­கி­றது? இந்­தக் காவல்­துறை  என்ன செய்­கி­றது? பாவம் அவர்­க­ளைச்சொல்­லித் தவ­றில்லை. அவர்­க­ளுக்கு ஆட்­சி­யா­ளர்­கள் கொடுக்­கக்­கூ­டிய ஒரு வேலை என்­ன­வென்­றால், திமுக என்ன கூட்­டம் நடத்­து­கி­றது கவ­னித்து அனு­மதி கொடுக்­காதே. திமுக என்ன செய்­கி­றது? எதிர்க்­கட்­சி­கள் என்ன செய்­கின்­றன? யார் டுவிட்­ட­ரில் (Twitter) என்ன பதி­வி­டு­கி­றார்­கள் என பார்த்து கைது செய்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மேடை­யில் யார் என்ன பேசு­கி­றார்­கள், ஒரு வார்த்தை தவ­றா­கச் சொல்­லி­விட்­டால் அல்­லது அவர்­க­ளுக்­குப் பிடிக்­காத செய்தி எதை­யா­வது மேடை­யில் சொல்­லி­விட்­டால், கைது செய்!  என்று உத்­த­ர­விட்­டி­ருக்­கி­றார்­கள் அத­னால் காவல்­து­றை­யி­ன­ரின் இப்­போ­தைய முழு நேர வேலை என்ன? நம் பின்­னாடி சுற்­று­வ­து­தான். இப்­போது தமிழ்­நாட்­டில் பாது­காப்­பாக இருப்­பது திமு­க­கா­ரர்­கள்­தான், ஏனென்­றால் எப்­பொ­ழுது காவல்­துரை பாது­காப்பு அளித்­துக் கொண்­டி­ருக்­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">கழக மாவட்­டச் செய­லா­ளர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">மீது பொய் வழக்­கு­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதை­யெல்­லாம் தாண்டி நம் மாவட்­டச் செய­லா­ளர் இருக்­கி­றார், நேற்­றுக் காலை­யில் அவ­ருக்­குத் தொலை­பே­சி­யில் அழைக்­கி­றேன், எடுக்­க­வில்லை. அழைத்­தால் எடுப்­பாரே என்று பார்த்­தால் அப்­பு­றம் சொன்­னார், காவல் நிலை­யத்­தில் விசா­ர­ணை­யில் அமர்ந்­தி­ருந்­தேன் என்று. இது வேறு. அனைத்து காவல் நிலை­யங்­க­ளி­லும் நம் மாவட்­டச் செய­லா­ளரை, கட்சி நிர்­வா­கி­களை அழைத்து அவர்­க­ளுக்கு ஒரு தேநீர் வாங்­கிக் கொடுத்து அவர்­க­ளுக்கு ஒரு விசா­ரணை வைக்க வேண்­டும். அது­வும் முடி­ய­வில்­லையா, ஏதா­வது ஒரு வழக்­குத் 
தொடுத்­துக் கைது செய்து சிறை­யில் வைக்க 
வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">சிறைச்­சா­லை­க­ளில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">கைதி­கள் தப்­பிச் செல்­கி­றார்­கள்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதில் காவல்­துறை பிஸி­யாக (பர­ப­ரப்­பாக) இருப்­ப­தால் சிறை­யில் கைதி­கள் தப்­பிச் செல்­வது தெரி­யா­மல் போய்­வி­டு­கி­றது. இது­வ­ரை – ­இப்­போது 17 கைதி­க­ளைப் பற்­றித்­தான் பேசிக்­கொண்­டி­ருக்­கி­றோம். இது­வரை இவர்­கள் ஆட்­சி­யில் 50-க்கும் மேற்­பட்ட கைதி­கள் தப்­பிச் சென்­றி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­போது சிறைச்­சாலை எப்­படி ஆகி­விட்­டது என்­றால் நீங்­கள் உள்ளே போக­லாம், நினைத்­தால் வெளியே வந்­து­வி­ட­லாம். பிறகு கொஞ்­சம் தேடிப் பிடித்­துப் பாதிப் பேரை பிடிப்­பார்­கள், மீதிப் பேரை விட்­டு­வி­டு­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது­தான்­த­மிழ்­நாட்­டில் இன்று சட்­டம் ஒழுங்கு இருக்­கக்­கூ­டிய நிலை. குழந்­தை­ 
க­ளுக்­குப் பாது­காப்பு இல்லை. வீட்­டில் இருக்­கக்­கூ­டிய பெண்­க­ளுக்­குப் பாது­காப்­பில்லை, ஒரு பெண் வீட்­டின் வாச­லில் அமர்ந்­தி­ருக்­கி­றார். அந்­தப் பெண்­ணைக் கொலை செய்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இத்­தனை ஆண்­டு­க­ளா­கப் பெண்­கள் வெளியே வர வேண்­டும், படிக்க வேண்­டும், வேலைக்­குப் போக வேண்­டும், சுதந்­தி­ர­மாக இருக்க வேண்­டும் என்று பாடு­பட்ட இயக்­கம் திரா­விட இயக்­கம். “நீ நினைத்­த­பொ­ழுது வெளியே வா” என்­று­தான் விடி­யல் பய­ணத்தை நம்­மு­டைய முத­ல­மைச்­ச­ராக இருந்த அண்­ணன் தள­பதி அவர்­கள் அறி­வித்­தார்­கள். இன்று நீங்­கள் பேருந்­தில் இல­வச பய­ணச்­சீட்டு கொடுத்­தால்­கூட யோசிக்­கி­றார்­கள் பெண்­கள் வெளியே வரு­வ­தற்கு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரு அம்­மா­வி­டம் பேசிக்­கொண்­டி­ருந்­தேன். “எனக்கு இரண்டு ஆண் பிள்­ளை­கள்­தான் அம்மா, பெண் பிள்­ளை­க­ளெல்­லாம் இல்லை. ஆனால் அந்­தப் பசங்­களை வெளியே அனுப்­பு­வ­தற்கே பய­மாக இருக்­கி­றது. நான் முன்­னெல்­லாம் கேட்க மாட்­டேன், எங்கே போகி­றாய், எங்கே வரு­கி­றாய், எப்­போது வரு­வாய் என்று. இப்­போது அரை மணி­நே­ரத்­திற்கு ஒரு­முறை நான் தொலை­பே­சி­யில் அழைத்து அந்­தப் பிள்­ளை­க­ளைக் கேட்­கி­றேன், எங்கே இருக்­கி­றாய், நன்­றாக இருக்­கி­றாயா, வெளியே போகாதே என்­றெல்­லாம்”. என்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">மடி­யில் நெருப்­பைக் கட்­டிக் கொண்டு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">வாழும் தாய்­மார்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒவ்­வொரு தாயும் தமிழ்­நாட்­டில் இப்­ப­டித்­தான் மடி­யில் நெருப்­பைக் கட்­டிக்­கொண்டு பயத்­தோடு வாழ்ந்­து­கொண்­டி­ருக்­கி­றார்­கள். பெண்­க­ளுக்­குப் பாது­காப்பு இல்லை, இளை­ஞர்­க­ளுக்­குப் பாது­காப்பு இல்லை, யாருக்­குமே பாது­காப்பு இல்லை. என் தூத்­துக்­குடி தொகு­தி­யில் இரண்டு பெண்­க­ளைக் கடத்­திச் செல்­வ­தற்­காக வீட்­டிற்­குள் புகுந்து தாய், தந்தை, மகன் மூன்று பேரை­யும் தாக்­கி­ய­தில் தாய் சம்­பவ இடத்­தி­லேயே இறந்­து­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவர்­க­ளு­டைய நிர்­வா­கத் திறமை, இவர்­க­ளு­டைய அரசு என்ன லட்­ச­ணத்­தில் இருக்­கி­றது என்­றால், உயி­ரோடு கொண்­டு­போய் மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்த தந்தை,மிக மோச­மா­கத் தாக்­கப்­பட்­டி­ருந்த அவ­ரைக்­கூ­டப் பிழைக்க வைக்க முடி­ய­வில்லை. 10 வயது சிறு­வ­னுக்கு இரண்டு விரல்­க­ளைக் காண­வில்லை. இன்று அந்த மூன்று குழந்­தை­க­ளும் அம்மா, அப்பா இரண்டு பேரும் இல்­லா­மல் அனா­தை­க­ளாக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்­கள். விஜய் மாமா­விற்கு வாக்­க­ளி­யுங்­கள் என்று சொன்­னா­ரல்­லவா? அந்த விஜய் மாமா ஆட்­சி­யில் எத்­தனை குழந்­தை­கள் அனா­தை­க­ளாக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்­கள்? எத்­தனை குழந்­தை­கள் பள்­ளிக்­குச் சென்­று­விட்­டுக் வீடு திரும்பி வரு­வ­தில்லை?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வீட்­டில் இருந்த குழந்­தை­களை, ஒரு வய­துக் குழந்­தை­யைத் தூக்­கிக்­கொண்டு போகி­றார்­கள். இவர்­க­ளு­டைய கட்­சி­யி­னரே தூக்­கிக் கொண்டு போய் விற்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">குழந்­தை­க­ளுக்­குக் கூட</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">பாது­காப்பு தர முடி­யாத துப்­பற்ற ஆட்சி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் கேட்­கி­றேன், தேர்­தல் நேரத்­தில் சொன்­னீர்­க­ளல்­லவா “நண்­பாஸ், நண்­பீஸ், வீட்­டில் போய் அடம் பிடித்து எனக்கு வாக்கு வாங்­கித்­தா­ருங்­கள்” என்று? அப்­பொ­ழுது அந்­தக் குழந்­தை­க­ளைப் பயன்­ப­டுத்­தி­னீர்­களா இல்­லையா? இன்று அந்­தக் குழந்­தை­க­ளுக்­குக்­கூ­டப் பாது­காப்பு தர முடி­யா­மல் துப்­பற்ற ஒரு ஆட்­சியை நடத்­திக்­கொண்­டி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இத்­தனை குழந்­தை­கள் காணா­மல் போவை­தைப் பற்றி கொஞ்­ச­மா­வது மன­சாட்சி வேண்­டாமா?பத்­தி­ரி­கை­க­ளில் எழு­து­கி­றார்­கள், “Tamil Nadu has become the hub of child trafficking” என்று. குழந்­தை­கள் கடத்­தப்­பட்டு விற்­கப்­ப­டு­வ­தன் தலை­ந­க­ர­மா­கத் தமிழ்­நாடு மாறிக்­கொண்­டி­ருக்­கி­றது என்று பத்­தி­ரி­கை­கள் எழு­தக்­கூ­டிய அள­விற்கு இன்று தமிழ்­நாடு அவ்­வ­ளவு மோச­மா­கி­விட்­டது. வீட்­டில் குழந்­தையை வைத்­துக்­கொண்டு அமர்ந்­தி­ருக்க முடி­ய­ வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">தமிழ்­நாடு இருண்ட</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">காலத்­திற்­குத் தள்­ளப்­ப­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­ப­டிப்­பட்ட ஒரு கேடு­கெட்ட ஆட்சி இன்று தமிழ்­நாட்­டிலே நடந்­து­கொண்­டி­ருக்­கி­றது. இந்த ஆட்­சிக்கு விரை­வில் நாம் ஒரு முடிவு கண்­டாக வேண்­டும், முற்­றுப்­புள்ளி வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் கூட நினைத்­தேன், ஜன­நா­யக ரீதி­யாக மக்­கள் வாக்­க­ளித்து ஆட்­சிப் பொறுப்­பிற்கு வந்­தி­ருக்­கி­றார்­கள், ஆளட்­டும் என்று. ஆனால் இவர்­கள் ஆண்­டார்­கள் என்­றால் தமிழ்­நாடு இருண்ட காலத்­தில் தள்­ளப்­ப­டும் என்­பது தெளி­வா­கி­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எந்த முத­லீ­டும் வர­வில்லை. சட்­டம் ஒழுங்கு சரி­யில்லை. பெண்­க­ளுக்­குப் பாது­காப்பு இல்லை. பிள்­ளை­க­ளுக்கு எதிர்­கா­லமே இல்லை. எந்­தப் பக்­கம் திரும்­பி­னா­லும் நிர்­வா­கம் என்று ஒன்று இருக்­கி­றதா இல்­லையா என்று தெரி­யாத அள­விற்­குச் சீர­ழிந்து கிடக்­கக்­கூ­டிய ஒரு நிலை­யில் இவர்­களை வீட்­டிற்கு அனுப்­பு­வ­தைத் தவிர தமிழ்­நாட்­டைப் பாது­காக்க வேறு வழி­யில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">விலை­வா­சி­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">ஏறி­விட்­டன!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இங்கே பேசும்­போது சொன்­னார்­கள், ஊரான் வீட்டு நெய்­யில் பல­கா­ரம் செய்­யா­தீர்­கள் என்­ப­தில்லை என் வீட்­டி­லேயே நான் பல­கா­ரம் செய்ய முடி­யாது, இனி­மேல் ஊரான் வீட்டு நெய்­யைப் பற்றி நான் என்ன பேசு­வது என்று. விலை­வாசி அப்­ப­டித்­தான் ஆகி­விட்­டது. தீபா­வளி நிறைய பேர் கொண்­டா­டு­வீர்­கள் என்று நினைக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தீபா­வளி வரைக்­கும் காத்­தி­ருக்க வேண்­டாம், வீட்­டில் தின­மும் சமைப்­ப­தற்கே வழி­யில்லை, அல்­லவா? வெங்­கா­யம் வாங்க முடி­யாது, தக்­காளி வாங்க முடி­யாது இன்று தின­மும் சமைப்­ப­தற்கே முடி­ய­வில்­லையே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வெங்­கா­யம் 180 ரூபாய்க்கு விற்­கி­றது, அரிசி விலை இரண்டு மடங்கு ஆகி­விட்­டது. பருப்பு விலை இரண்டு மடங்கு ஆகி­விட்­டது. சமை­யல் எண்­ணெய் வாங்­கா­மல் இருந்­தாலே நல்­லது, அல்­லவா? பூங்­கோதை சந்­தோ­ஷப்­ப­டு­வார்­கள் ஏனென்­றால்­ம­ருத்­து­வர்­தான் சொல்­வார்­கள், எண்­ணெய் குறை­வா­கப் பயன்­ப­டுத்­துங்­கள், எண்­ணெய் குறை­வா­கப் பயன்­ப­டுத்­துங்­கள் என்று. இப்­போது எண்­ணெயே பயன்­ப­டுத்த முடி­ய­வில்லை. அரிசி வாங்க முடி­ய­வில்லை. நியா­ய­வி­லைக் கடை­யில் வேறு அரிசி போடு­வ­தா­கச் சொல்­கி­றார்­கள், சன்­ன­ரக அரிசி போடு­வ­தாக, இருக்­கிற அரி­சி­யைப் பாலிஷ் செய்து ஏமாற்­று­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒவ்­வொரு நாளும் வாழக்­கூ­டிய அள­விற்­குக்­கூட இல்­லாத அள­விற்கு விலை­வா­சியை உயர்த்­தி­யி­ருப்­ப­து­தான் அவர்­கள் செய்­தி­ருக்­கக்­கூ­டிய மிகப்­பெ­ரிய சாதனை. திமுக ஆட்­சிப் பொறுப்­பில் இருந்­த­பொ­ழுது நம்­மு­டைய தலை­வர் முதல்­வ­ராக இருந்­த­பொ­ழுது தமிழ்­நாடு எதைக் கேட்­டா­லும் தமிழ்­நாட்­டில்­தான் முத­லா­வ­தாக இருக்­கும். முத­லீ­டாக இருக்­கட்­டும், வளர்ச்­சி­யாக இருக்­கட்­டும், எது­வாக இருந்­தா­லும் கல்­வி­யாக இருக்­கட்­டும்; சுகா­தா­ரத் துறை­யாக இருக்­கட்­டும், எல்­லா­வற்­றி­லும் தமிழ்­நா­டு­தான் முத­லில் இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">குழந்­தை­க­ளுக்கு தங்க மோதி­ரம் தேவை­யில்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">‘பெப்­பர் ஸ்பிரே’  கொடுங்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால் இன்று தமிழ்­நாடு எல்­லா­வற்­றி­லும் பின்­னோக்கி வந்­து­விட்­டது. ஒரு­வேளை விஜய் வருத்­தப்­பட்­டாரோ என்­னவோ, எல்­லா­வற்­றி­லும் தமிழ்­நாடு பின்­னால்­போய்­விட்­டது, ஏதா­வது ஒன்று இரண்டு விஷ­யத்­தி­லா­வது முன்­னால் வர வேண்­டும் என்று அத­னால் கொலை, குற்­றங்­கள், பெண்­க­ளுக்கு எதி­ரான  குற்­றங்­க­ளில் முன்­ன­ணிக்கு வந்­து­விட்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்து, இந்­தி­யா­வி­லேயே உண­வுப் பொருட்­க­ளின் விலை­வாசி அதி­க­மாக இருக்­கக்­கூ­டிய மாநி­லம் தமிழ்­நாடு என்­ப­தில் முன்­னி­லைக்கு வந்­து­விட்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">யாரும் எதை­யும் வாங்க முடி­யாது. இப்­ப­டிப்­பட்ட ஒரு கேடு­கெட்ட ஆட்சி, மக்­கள் அன்­றா­டம் வாழ முடி­யாத நிலைக்­குத் தள்­ளப்­பட்டு இருக்­கக்­கூ­டிய ஆட்சி. சரி உணவு இல்லை என்­றால் நிம்­ம­தி­யா­க­வா­வது தூங்­க­லாம், இருக்­க­லாம் என்று நினைத்­தால் அதற்­குக்­கூட வழி­யில்­லாத ஒரு ஆட்சி. இதில் நீங்­கள் தாய்­மா­மன் சீர், அண்­ணன் சீர் என்று வழங்­கு­கி­றீர்­களே</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் ஒன்றை மட்­டும் சொல்ல வேண்­டும் என்று நினைக்­கி­றேன். குழந்­தை­க­ளுக்கு நீங்­கள் மோதி­ரம் எல்­லாம் போட வேண்­டாம். அந்­தக் குழந்­தை­க­ளைப் பாது­காப்­பாக வைத்­துக்­கொள்­ளுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அண்­ணன் சீரில்  புடவை உட்­பட என்­னென்­னவோ பொருட்­களை கொடுக்­கும் விஜய் அவர்­களே!  நான் ஒன்றே ஒன்று கேட்­கி­றேன் தய­வு­செய்து‘பெப்­பர் ஸ்ப்ரே’  கொடுங்­கள். தமிழ்­நாட்­டில் இருக்­கக்­கூ­டிய ஒவ்­வொரு பெண்­ணுக்­கும் தயவு செய்து இதை­யா­வது 
கொடுங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உங்­க­ளு­டைய போலீஸ், உங்­கள் படை இவை­யெல்­லாம் வந்து நீங்­கள் யாரை­யும் காப்­பாற்­றப் போற­தில்லை. அத­னால் எங்­க­ளு­டைய சகோ­த­ரி­கள் ஒவ்­வொ­ரு­வர் கையி­ல­யும் ரேஷன் கடை­கள் வழி­யாக பெப்­பர் ஸ்ப்ரேயை­யா­வது கொடுங்­கள்.  இந்­தத் துப்­பில்­லாத, வக்­கில்­லாத ஆட்­சி­யில் அது­வா­வது எங்­களை காப்­பாற்­றட்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு கனி­மொழி ராஜாத்தி கரு­ணா­நிதி எம்.பி. உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>