<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="02/11/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="620,37,959,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="1"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Nov 02 2026 00:01:26 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261102T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="02112026-TRY-06" position.sequence="06" ex-ref="02112026-TRY-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">திருச்சி </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">02.11.2026</lang>
	</hl2>
<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup965600_06_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup964298_06_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Bramma" fontStyle="Regular" size="13">ப</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ண்­டைத் தமிழ் மன்­னர்­க­ளிலே பலர் அற­நெறி தவ­றா­மல் அர­சாண்டு வந்­த­னர். அக்­கா­லத்­திலே நீதி­  மன்­றங்­கள் இருந்­தன. நீதி­மன்­றத்தை ‘அறங்­கூறு அவை­யம்’என்று கூறு­கின்­றது பத்­துப்­பாட்டு. நீதி­ப­தி­க­ளின் நேர்மை, அவர்­கள் நீதி வழங்­கும் முறை இவை­க­ளைத் தெளி­வாக அதிலே காண­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பத்­துப்­பாட்­டிலே உள்ள மது­ரைக்­காஞ்சி மாங்­குடி மரு­த­னா­ரால் பாடப்­பட்­டது. பாண்­டி­யன் நெடுஞ்­செ­ழி­யன் அப்­பாட்­டின் தலை­வன். அதிலே நீதி­ மன்­றத்­தைப் பற்­றிக் கூறப்­ப­டும் பகுதி நமக்கு வியப்­பைத் தரு­கின்­றது. அத்­த­கைய நீதி­ப­தி­கள், நீதி­முறை, நீதி­மன்­றம் இக்­கா­லத்­தில் இருக்­கின்­ற­னவா என்ற ஐயம் பிறக்­கின்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“பயம், துன்­பம், ஆசை இவை­களை நீக்­கி­ய­வர்­கள்; ஒரு பக்­கத்­தா­ரி­டம் சின­மும், மற்­றொரு பக்­கத்­தா­ரி­டம் மகிழ்ச்­சி­யும் காட்­டா­த­வர்­கள்; தம்மை நடு­நி­லை­யி­லேயே நிறுத்­திக் கொண்­ட­வர்­கள்; துலாக்­கோ­லைப் போல் நடு­நி­லை­யிலே நிற்­ப­வர்­கள்; சிறந்த ஒழுக்­கம் உள்­ள­வர்­கள்: இத்­த­கை­ய­வர்­கள் நீதி­ப­தி­க­ளாக அமர்ந்­தி­ருந்து நீதி வழங்­கும் அறம் கூறும் அவை­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நீதி­ப­தி­கள் உண்­மை­யைக் கண்­ட­றிந்து நீதி வழங்­கு­வ­தில் அஞ்­சக்­கூ­டாது. பெருங்­குற்­றத்­திற்­குக் கடுந்­தண்­டனை விதிக்­கும் நிலை ஏற்­ப­டும்­போ­தும் துன்­பு­றக்­கூ­டாது. அவர்­கள் பேராசை பிடித்­த­வர்­க­ளாக இருக்­கக்­கூ­டாது; போதும் என்ற மனம் படைத்­த­வர்­க­ளா­யி­ருத்­தல் வேண்­டும்; அளவு கடந்த ஆசை­யுள்ள நீதி­ப­தி­கள் தங்­கள் ஆசையை நிறை வேற்­றிக் கொள்­ளும் பொருட்டு அறத்தை அழிக்­க­வும் செய்­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வழக்­கி­டு­வோ­ரில் ஒரு­வர் உற­வி­ன­ரா­யி­ருக்­க­லாம்; அல்­லது நண்­ப­ரா­யி­ருக்­க­லாம்; மற்­றொ­ரு­வர் தமக்கோ, தம் குடும்­பத் திற்கோ பகை­வ­ரா­யி­ருக்­க­லாம்; நீதி­ப­தி­யாக இருப்­ப­வர்­கள் இவற்­றைச் சிறி­தும் மனத்­தில் எண்­ணா­மல் மறந்­து­விட வேண்­டும். இரு­வ­ரை­யும் சம­மா­கக் கருதி நீதி வழங்க வேண்­டும். ‘செற்­ற­மும் உவ­கை­யும் செய்­யாது காத்து’ என்ற வரி இவ்­வுண்­மையை உணர்த்­து­கின்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒழுக்­கம் உள்­ள­வர்­களே நீதி­ப­திக்­குத் தகு­தி­யுள்­ள­வர்­கள். ஒழுக்­கம் அற்­ற­வர்க ளால் நீதி நிலை­கு­லை­யும். ஒரு நாட்­டில் உள்ள குடி­மக்­கள் அனை­வ­ரை­யும் அர­சாங்­கம் ஒத்த நிலை­யி­லேயே கருத வேண்­டும்; ஒத்த நீதியே வழங்க வேண்­டும். சாதிக்­கொரு சட்­டம், மதத்­துக்­கொரு சட்­டம், சாதிக்கு ஏற்­ற­வாறு நீதி, மதத்­திற்­கேற்­ற­வாறு நீதி என்று வழங்­கும் முறை அறத்தை அடிப்­ப­டை­யா­கக்­கொண்­டி­ருக்க முடி­யாது. மக்­கள் அனை­வ­ரை­யும் மக்­க­ளா­கவே மதித்து நீதி வழங்­கு­வதே சிறந்­த­தா­கும். ‘மக்­க­ளாட்சி’ என்று சொல்­லு­கின்ற இக்­கா­லத்­தி­லும் இம்­முறை ஏற்­ப­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பண்­டைக் காலத்­தில், உண்­மை­யான குற்­ற­வா­ளி­யைக் கண்­ட­றிந்து தண்­டனை வழங்­கி­னர். குற்­ற­மற்­ற­வர்­க­ளுக்­குத் துன்­பம் உண்­டா­னால் பாது­காத்­த­னர். சாட்­சி­ய­ளிப்­போ­ரைக் கொண்டு மட்­டும் ஒரு வழக்­கிலே தீர்ப்­ப­ளிக்­க­மாட்­டார்­கள். நீதி­ப­தி­க­ளும் தங்­கள் நுண்­ண­றி­வைக் கொண்டு குற்­றம் யார் பக்­கத்­தில் என்­ப­தைக் கண்­ட­றி­வார்­கள். மாறு­வே­டம் பூண்டு சென்­று­கூட ‘குற்­ற­வா­ளி­கள் யார்? குற்­ற­மற்­ற­வர்­கள் யார்?’ என்­ப­தைத் தெரிந்­து­கொண்டு நீதி வழங்­கு­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“பொய்க்­கரி புகல்­வோன் ஒரு மரத்­த­டி­யில் நின்­றால் அம்­ம­ரம் பட்­டுப்­போ­கும், அவன் குடும்­பம் பாழா­கும், அவன் செல்­வம் பாழா­கும். அவன் மீளா நர­குக்கு ஆளா­வான்” என்­றெல்­லாம் பொய்க்­கரி கூறு­வோ­ரைப் பற்­றிப் பண்டை நூல்­க­ளில் கூறப்­பட்­டி­ருக்­கின்­றன. ஆத­லால் பொய்க்­கரி புகல அஞ்­சி­னர். ஆயி­னும், தன்­ன­லம் கார­ண­மா­கப் பொய்க்­கரி புகல்­வோர் சில­ரும் இருந்­தி­ருக்­கத்­தான் வேண்­டும். பொய்ச்­சாட்சி சொல்­வோர் அடை­யும் நிலை­யைப்­பற்­றிக் கூறி­யி­ருப் பதைக் கொண்டே அத்­த­கை­யோ­ரும் இருந்­த­னர் என்று எண்ண இடம் தரு­கின்­றது. ஆகை­யால், நீதி­ப­தி­கள் முழு­வ­தும் சாட்­சி­க­ளையே நம்­பித் தீர்ப்­புக் கூறா­மல் உண்­மை­யைக் கண்­ட­றிய முயன்­ற­னர். மது­ரைக்­காஞ்­சி­யில் கூறிய தகு­தி­யுள்ள நீதி­ப­தி­க­ளால்­தான் துலாக்­கோல்­போல் நின்று நீதி வழங்க முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இக்­கா­லத்­தில் உள்ள நீதி­முறை முன்­கா­லத்து நீதி­மு­றை­க­ளுக்கு முர­ணா­னது. உண்­மை­யின் மேல் நீதி வழங்க முடி­யாது; சட்­டத்­தின்­மேல்­தான் நீதி வழங்க முடி­யும். இக்­கா­லச் சட்­டப்­படி, உண்­மை­யான கொலை­யாளி தப்­பித்­துக்­கொள்ள முடி­யும்; ஒரு பாவ­மும் அறி­யாத அப்­பாவி கொலை­யா­ளி­யா­கித் தூக்­குத்­தண்­டனை பெற­மு­டி­யும். கொலை செய்­ததை நேரே கண்­ட­தா­கச் சாட்­சி­கள் இல்­லா­விட்­டால் கொலை­யாளி விடு­தலை பெற்­று­வி­டு­வான். குற்­ற­மற்ற ஒரு­வ­னைப்­பற்றி, ‘இவன்­தான் கொலை செய்­தான்; அதை நாங்­கள் கண்­ணால் கண்­டோம்’ என்று கூறும் சாட்­சி­கள் இருந்­தால், அவன் கொலை­யா­ளி­யா­கி­வி­டு­வான். நீதி­ப­திக்கு, யார் குற்­ற­வாளி, யார் குற்ற­மற்­ற­வர் என்று தெரிந்­தா­லும்­கூட அவர் தன் மனச்­சாட்­சி­யின்­படி நீதி வழங்க முடி­யாது. சட்­டத்­தின் நெறி­யைப் பற்­றியே நீதி வழங்­க­வேண்­டும். சட்­டம் சாட்­சி­க­ளை­யும், சாட்­சி­யங்­க­ளை­யும் அடிப்­ப­டை­யா­கக் கொண்­ட­தா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சுருக்­க­மா­கக் கூறி­னால், பண்­டைக் காலத்­தில் உண்­மை­யின்­படி நீதி வழங்­கப்­பட்­டது; இக்­கா­லத்­தில் சட்­டத்­தின் வழி நீதி வழங்­கப்­ப­டு­கின்­றது. பண்­டைக் காலத்­தில் உண்­மையை மறைத்­து­விட முடி­யாது; இக்­கா­லத்­தில் உண்­மையை மறைத்­து­விட முடி­யும். இத­னால் இக்­கா­லத்­தில் சட்­டங்­க­ளும் நீதி­க­ளும் வலுத்­த­வர்­க­ளுக்கே பெரும்­பா­லும் துணை செய்­யக்­கூ­டி­ய­ன­வா­யி­ருக்­கின்­றன; இளைத்­த­வர்­க­ளுக்கு நேர்­மை­யும்,நீதி­யும் கிடைப்­பது அவ்­வ­ளவு எளி­தாக இல்லை. இது­தான் பழங்­கால நீதி­முறைக்­கும் இன்­றுள்ள நீதி­மு­றைக்­கும் உள்ள தலை­கீழ் வேற்­றுமை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நேர்­மை­யாக நீதி வழங்­கிய மன்­னர்­க­ளிலே கரி­காற்­சோ­ழன் சிறப்­பா­கப் பாராட்­டப்­ப­டு­கின்­றான். அவன் இளம்­ப­ரு­வத்­தி­லேயே நுண்­ண­றிவு படைத்­த­வ­னா­யி­ருந்­தான். வழக்­கு­க­ளின் உண்­மையை உணர்ந்து முடிவு கூறு­வ­தில் ஒப்­பற்­ற­வ­னா­ யி­ருந்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பத்­துப்­பாட்­டுள் ஒன்­றான பொரு­நர் ஆற்­றுப்­படை என்­பது கரி­கா­லன்­மீது பாடப்­பட்­டது. அதைப் பாடிய ஆசி­ரி­யர் முடத்­தா­மக் கண்­ணி­யார். இவர் அவ­னைப்­பற்­றிய வர­லாற்று நிகழ்ச்சி ஒன்றை எடுத்­துக்­காட்­டி­யி­ருக்­கின்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">‘கரி­காற் சோழன் அர­சாட்சி செய்த காலத்­தில் இரண்டு முதி­ய­வர்­க­ளுக்­குள் ஏதோ வழக்கு ஏற்­பட்­டது. அவ்­வ­ழக்கை அவர்­க­ளால் பேசித் தீர்த்­துக்­கொள்ள முடிய­ வில்லை. கரி­கா­ல­னி­டம் வழக்­கைக் கூறி நீதி பெற­லாம் என்று நினைத்து அவ­னி­டம் அணு­கி­னர். தோற்­றத்­திலே அவன் இளை­ஞ­னா­யி­ருப்­ப­தைக் கண்­ட­னர். ஆத­லால் இந்த இளை­ஞ­னால் நமது வழக்கை ஆராய்ந்து, உண்­மை­யைக் கண்­ட­றிந்து உரைக்க முடி­யுமோ’ என்று ஐயுற்­ற­னர். அவர்­க­ளின் ஐயத்­தைக் குறிப்­பால் அறிந்­தான் கரி­கா­லன். அவர்­க­ளு­டைய வழக்கை அற­நூல் அறிந்த முதிர்ந்த நீதி­பதி ஒரு­வ­ரி­டம் மாற்­று­வ­தாக உரைத்­தான். அவர்­க­ளும் மகிழ்ச்­சி­யோடு இசைந்­த­னர். பின்­னர், அவனே நரை­மு­டி­யும் தாடி­யும் தரித்­த­வ­னாய் நீதி­மன்­றத்­திலே வந்து அமர்ந்­தான். முதி­யோர்­கள் உரைத்த வழக்­கைக் கேட்­டான். இரு­வ­ரும் ஒப்­புக்­கொள்­ளும்­படி நீதி வழங்­கி­னான்.’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Vairam" fontStyle="Regular" size="13">(பழந்­த­மி­ழர் அர­சி­யல் என்ற தொகுப்­பில் உள்ள கட்­டு­ரை­யி­லி­ருந்து..)</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">
</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>