<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="05/11/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Nov 05 2026 03:37:10 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261105T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="05112026-CHN-03" position.sequence="03" ex-ref="05112026-CHN-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="84">‘டம்மி’ முதலமைச்சரை ஆட்டிப்படைக்கும்  கார்ப்பரேட் பவர் சென்டர்கள்!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup977705_03_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கேட்­டால், நமது அய்யா ஆசி­ரி­யர் அவர்­கள்­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஆசி­ரி­யர் அவர்­களே... என் மீது நீங்­கள் எவ்­வ­ளவு பாசம் வைத்­தி­ருக்­கி­றீர்­களோ, அதே அள­வுக்கு நானும் பாசத்­தை­யும் மரி­யா­தை­யும் வைத்­தி­ருக்­கி­றேன். அத­னால், உரி­மை­யோடு சொல்­கி­றேன்... உங்­கள் வயதை மறந்து, நீங்­கள் கடு­மை­யாக உழைக்­கி­றீர்­கள். அவ்­வப்­போது கொஞ்­சம் ஓய்வு எடுத்­துக்­கொள்­ளுங்­கள் என்று சொன்­னால், நீங்­கள் கோபப்­ப­டு­வீர்­கள். அத­னால், உங்­கள் உடல்­ந­லத்­தில் இன்­னும் கூடு­த­லாக நீங்­கள் கவ­னம் செலுத்த வேண்­டும் என்று, தலை­வர் கலை­ஞ­ரின் மக­னாக, உரி­மை­யோடு கேட்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">திரா­விட மாடல் ஆட்­சி­யில்  பெரி­யார் அறி­வு­ல­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">பெரி­யார் அறி­வு­ல­கத்­தைக் கோவை­யின் அடை­யா­ள­மாக மட்­டு­மல்ல, தமிழ்­நாட்­டின் அடை­யா­ள­மாக, நம் திரா­விட மாடல் ஆட்­சி­யில் அமைத்­தோம்! அதை உரு­வாக்­கு­வ­தற்­காக, திரா­விட மாடல் அமைச்­ச­ர­வை­யில் இடம்­பெற்­றி­ருக்­கும் அமைச்­சர்­கள் மற்­றும் அதி­கா­ரி­க­ளோடு பல முறை ஆய்­வுக் கூட்­டங்­கள் நடத்­தி­யி­ருக்­கி­றேன். 99 சத­வீ­தம் பணி­கள் முடிந்­தி­ருந்த நிலை­யில் இங்கு வந்து, அந்­தப் பணி­களை எல்­லாம் பார்­வை­யிட்­டுச் சென்­ற­போ­து­தான், தேர்­தல் தேதி அறி­விப்பு வந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நான் மட்­டு­மல்ல, அப்­போது பொதுப்­ப­ணித்­துறை அமைச்­ச­ராக இருந்த நம்­மு­டைய எ.வ.வேலு அவர்­க­ளும் பத்து முறைக்கு மேல், பெரி­யார் அறி­வு­ல­கத்­தின் ஆய்­வுப் பணி­க­ளுக்­கா­கக் கோவைக்கு வந்­தி­ருப்­பார். அதை­யும் தாண்­டித்­தான் வந்­தி­ருப்­பார். ஏனென்­றால், நான் அந்த அள­வுக்கு அவ­ரி­டம் அதைப் பற்­றிய தொடர் நட­வ­டிக்­கை­களை கேட்­டுக்­கொண்டே இருப்­பேன். பெரி­யார் அறி­வு­ல­கம் எப்­ப­டித் தோற்­ற­ம­ளிக்க வேண்­டும், அதன் வடி­வ­மைப்பு, உள்ளே இடம்­பெற வேண்­டிய அறி­வி­யல் சம்­பந்­த­மான பிரி­வு­கள், வாச­லில் தந்தை பெரி­யார் சிலை எந்த மாதிரி அமைய வேண்­டும் என்­பது வரை ஆலோ­ச­னை­கள் வழங்­கிக்­கொண்டே இருந்­தேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அது­மட்­டு­மல்ல, இந்த மாவட்­டத்­தின் பொறுப்பு அமைச்­ச­ராக இருந்த  செந்­தில் பாலாஜி அவர்­களை எப்­போது பார்த்­தா­லும், பெரி­யார் அறி­வு­ல­கத்­தின் பணி­க­ளைப் பற்றி நான் கேட்­கா­மல் இருந்­ததே இல்லை. அப்­படி நான் கேட்­கும்­போது, அடுத்­த­டுத்து என்ன திட்­டங்­கள் கோவைக்­குத் தேவை என்று என்­னி­டம் கேட்டு வாங்­கி­வி­டு­வார். கடந்த 5 ஆண்­டு­கால திரா­விட மாடல் ஆட்­சி­யில் கோவைக்­குத்­தான் அதிக முறை அரசு விழாக்­க­ளுக்கு நான் வந்­தி­ருக்­கி­றேன். செம்­மொழி பூங்கா, ஜி.டி.நாயுடு மேம்­பா­லம், சி.சுப்­பி­ர­ம­ணி­யம் மேம்­பா­லம் என, இந்த இடத்­தைச் சுற்றி கோவை­யின் சாத­னை­கள் வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. நம் பெய­ரைச் சொல்­லும் அள­வுக்கு ஏரா­ள­மான பணி­கள் இங்கு நடந்­தி­ருக்­கின்­றன. அந்­தப் பணி­க­ளை­யெல்­லாம் பொறுப்­பா­கப் பார்த்­துக்­கொண்­ட­வர்­தான், பொறுப்பு அமைச்­ச­ராக இருந்த நம்­மு­டைய அருமை நண்­பர் செந்­தில் பாலாஜி அவர்­கள்! அதில் மணி­ம­கு­ட­மாக அமைந்­த­து­தான், பெரி­யார் அறி­வு­ல­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">எத்­த­னையோ சாத­னை­களை இந்த 5 ஆண்­டு­கால திரா­விட மாடல் ஆட்­சி­யைப் பயன்­ப­டுத்தி, முத­ல­மைச்­ச­ராக இருந்த வாய்ப்பை பயன்­ப­டுத்தி நான் செய்­தி­ருக்­க­லாம். ஆனால், என்­னால் மறக்க முடி­யாத ஒரு சாத­னை­யாக தந்தை பெரி­யார் பெய­ரில் அமைந்­தி­ருக்­கும் அறி­வு­ல­கம் அமைந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">பெரியார் அறி­வு­ல­கம் அமைத்­தது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">என்­னு­டைய கடமை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">பெரி­யார் அறி­வு­ல­கம்! இன்று நாம் பார்க்­கும் தமிழ்­நாட்­டைச் செதுக்­கி­ய­தில் மிக முக்­கி­யப் பங்­காற்­றி­ய­வர், பகுத்­த­றி­வுப் பக­ல­வன் தந்தை பெரி­யார் அவர்­கள்! அவ­ரால்­தான், நாம் பகுத்­த­றி­வின் ஒளி­யைப் பெற்­றோம்! சுய­ம­ரி­யாதை உணர்­வைப் பெற்­றோம்! தமி­ழர்­கள் அதி­கா­ரத்தை அடைந்­தோம்! உரி­மை­களை அடைந்­தோம்! அத்­த­கைய பெரி­யார் பெய­ரில் அறி­வு­ல­கத்தை அமைத்­தது என்­னு­டைய கடமை! நன்­றியை எதிர்­பார்த்தோ – பாராட்டை எதிர்­பார்த்தோ நான் இதைச் செய்­ய­வில்லை. இது ஆசி­ரி­யர் அவர்­க­ளுக்­கும் தெரி­யும்; உங்­க­ளுக்­கும் தெரி­யும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளின் நூற்­றாண்டை முன்­னிட்டு, மது­ரை­யில், தென்­த­மிழ்­நாட்­டின் அறி­வா­ல­ய­மாக விளங்­கும், லட்­சக்­க­ணக்­கான இளை­ஞர்­கள் பயன்­பெ­றும் – கலை­ஞர் நூற்­றாண்டு நூல­கத்தை அமைத்­தோம். அந்­தச் சம­யத்­தில் “உல­கமே டிஜிட்­டல் மய­மாகி வரும் சூழ­லில் நூல­கங்­கள் தேவையா?” என்று ஒரு சிலர் கேட்­டார்­கள். ஆனால், நாம் அமைக்­கும் நூல­கங்­கள் வெறும் புத்­த­கங்­களை அடுக்கி வைத்­தி­ருக்­கும் இட­மாக மட்­டு­மல்­லா­மல், நவீன வச­தி­கள் கொண்­ட­தாக இருக்க வேண்­டும் என்று முடி­வெ­டுத்து வேலை செய்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மதுரை கலை­ஞர் நூற்­றாண்டு நூல­கத்­திற்­குக் கிடைத்த வர­வேற்­பைப் பார்த்­து­விட்டு, அதே­போல, கோவை­யி­லும் – திருச்­சி­யி­லும் அமைக்­க­லாம் என்று முடி­வெ­டுத்­தோம். அப்­போது சில அமைச்­சர்­கள், தலை­வர் கலை­ஞ­ரின் நூற்­றாண்டு என்­ப­தால், பெரிய பெரிய நக­ரங்­க­ளில், மாந­க­ரங்­க­ளில் தலை­வர் பெய­ரி­லேயே அமைக்­க­லாம் என்று சொன்­னார்­கள். ஆனால், நான்­தான் – சென்­னை­யில், பேர­றி­ஞர் அண்ணா பெய­ரில் நூல­கம் இருக்­கி­றது, மது­ரை­யில் தலை­வர் கலை­ஞர் பெய­ரில் அமைத்­து­விட்­டோம், கோவை­யில் தந்தை பெரி­யார் பெய­ரி­லும், திருச்­சி­யில் பெருந்­த­லை­வர் காம­ரா­சர் பெய­ரி­லும் வைக்­க­லாம் என்று சொன்­னேன். சொன்­ன­ப­டியே, செய்­தும் காட்­டி­விட்­டோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">ஜோசி­யர் சொன்ன தேதி­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">பெரியார் அறி­வு­ல­கம் திறப்பதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இதைத் தொடர்ந்து நெல்­லை­யில் கண்­ணி­யத்­திற்­கு­ரிய காயிதே மில்­லத் அவர்­க­ளின் பெய­ரி­லும், கட­லூ­ரில் அஞ்­சலை அம்­மாள் அவர்­க­ளின் பெய­ரி­லும், சேலத்­தில் பாவேந்­தர் பார­தி­தா­சன் அவர்­க­ளின் பெய­ரி­லும், நவீன நூல­கங்­களை அமைக்­கும் பணி­க­ளை­யும் தொடங்­கி­னோம். தி.மு.க. ஆட்­சி­யில் முடி­வான பல திட்­டங்­கள், கார­ணமே சொல்­லப்­ப­டா­மல் இன்­றைக்கு நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கும் ஆட்­சி­யில் ‘ரத்து’ செய்­யப்­ப­டு­கின்­றன. நெல்லை, கட­லூர், சேலம் நூல­கங்­க­ளுக்கு அந்­தச் சூழ்­நிலை வந்­து­வி­டா­மல், சீக்­கி­ர­மா­கப் பணி­களை முடித்­துத் திறந்து வைக்க வேண்­டும் என்று தமிழ்­நாட்டு மக்­க­ளின் சார்­பில் நான் கேட்­டுக்­கொள்ள கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன். இந்­தப் பெரி­யார் அறி­வு­ல­கமே துவக்க நிலை­யில் இருக்­கும் திட்­ட­மாக இருந்­தி­ருந்­தால், இதற்­கும் மூடு­விழா நடத்த முயற்சி செய்­தி­ருப்­பார்­கள். நல்ல வேளை­யாக நாம் 99 சத­வீத பணி­களை முடித்­து­விட்­டோம். அத­னால், வேறு வழி­யில்­லா­மல் ஒப்­புக்கு ஒரு நிகழ்ச்­சியை ஏற்­பாடு செய்து, ஜோசி­யர் சொன்ன தேதி­யில் வந்து திறந்து வைத்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">“என்ன நீங்­கள்! எப்­போ­தும் இந்த அரசை இப்­படி விமர்­ச­னம் செய்­கி­றீர்­களே?” என்று ஆளுங்­கட்­சிக்கு ஆத­ர­வான சிலர் கேட்­கி­றார்­கள். இந்த ஆட்­சி­யின் லட்­ச­ணம் அப்­படி இருந்­தால், நான் என்ன செய்ய முடி­யும்! நான் மட்­டுமா விமர்­சிக்­கி­றேன்? அனைத்­துத் தலை­வர்­க­ளும் விமர்­சிக்­கி­றார்­கள், மக்­க­ளும் பேச தொடங்­கி­விட்­டார்­கள். இந்­தச் சொதப்­பல் அரசு அடிக்­கும் கூத்­து­க­ளை­யெல்­லாம் பார்த்­து­விட்டு, யார்­தான் விமர்­ச­னம் செய்­யா­மல் இருக்க முடி­யும்? முத­ல­மைச்­சர் என்ன ஆடை அணிய வேண்­டும், அவ­ரு­டைய அலு­வ­ல­கம் எங்கு இருக்க வேண்­டும், அவர் என்ன பொட்டு வைக்க வேண்­டும் என்று, எல்­லா­வற்­றை­யுமே இந்த ஆட்­சி­யில் ஜோசி­யர்­தானே முடிவு செய்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">வாக்­க­ளித்­த­வர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">புலம்­பிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">என்­னு­டைய ஆட்­சி­யில் பவர் செண்­டரே இருக்­காது என்று பத­வி­யேற்பு விழா­வில் முத­ல­மைச்­சர் விஜய் சொன்­னாரே... ஆனால், இன்­றைக்கு என்ன நிலைமை? முத­ல­மைச்­சர் விஜய்­யைப் டம்­மி­யாக்­கி­விட்டு, அவ­ருக்­குப் பின்­னால் இருக்­கும் கார்ப்­ப­ரேட் பவர் சென்டர்­கள்­தான் இந்த ஆட்­சியை ஆட்­டிப் படைக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இன்­னும் சொல்­ல­வேண்­டு­மென்­றால், முத­ல­மைச்­சரை வைத்து இந்த பவர் செண்­டர்­கள் வித்தை காட்­டும் சர்க்­கஸ்­தான், த.வெ.க. ஆட்சி! யாரெல்­லாம் இந்த ஆட்சி வர வேண்­டும் என்று வாக்­க­ளித்­தார்­களோ, அவர்­கள் அனை­வ­ரின் வாழ்­வா­தா­ர­மும் பாதிக்­கப்­பட்­டுப் புலம்­பிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இவர்­கள் ஆட்­சிக்கு வந்த ஒரே மாதத்­தில் மின்­வெட்­டுப் பிரச்­சினை வந்­து­விட்­டது. மக்­கள் அனை­வ­ரும் இரவு நேரத்­தில் குழந்­தை­க­ளோடு சாலைக்கு வந்­து­விட்­டார்­கள். இப்­போ­து­வரை அவர்­க­ளால் மின்­வெட்­டுப் பிரச்­சி­னையை சரி செய்ய முடி­ய­வில்லை. இந்­திய நாட்­டின் குடி­ய­ர­சுத் துணைத் தலை­வர், மதுரை மீனாட்­சி­யம்­மன் கோவி­லுக்கு செல்­லும்­போ­து­கூட மின்­சா­ரம் கட் ஆகி­றது. கேட்­டால், “ஜென­ரேட்­ட­ரில்­தான் இயக்­கு­கி­றோம்” என்று, அந்­தத் துறை அமைச்­சர் சொல்­கி­றார். அதா­வது ஜென­ரேட்­டர் போடும் அள­வுக்­குத்­தான் மின்­சார விநி­யோ­கம் இருக்­கி­றது என்று அவரே ஒத்­துக்­கொள்­கி­றார். அடுத்த நாள், ஒரு பொறி­யா­ளர் சஸ்­பெண்ட் செய்­யப்­ப­டு­கி­றார். என்ன கோமா­ளித்­த­னம்! அது­மட்­டு­மல்ல, இறந்த உடல்­க­ளைக்­கூட எரிக்க முடி­யா­மல் மின் மயா­னத்­தி­லும் மின்­வெட்டு ஏற்­பட்டு மக்­கள் புலம்­பிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். இப்­படி, செயற்­கை­யாக மின்­வெட்டை உரு­வாக்­கு­வது எதற்­காக? நம் தி.மு.க. ஆட்­சி­யில் குறைந்த விலைக்­குப் போட்ட ஒப்­பந்­தத்தை ரத்து செய்­து­விட்டு, இப்­போது அதை­விட இரண்டு மடங்கு அதிக விலைக்கு, வெளிச் சந்­தை­யில் மின்­சா­ரம் வாங்­கு­வதை நியா­யப்­ப­டுத்­தப் பார்க்­கி­றார்­கள். அதற்­குத்­தான், இந்த மின்­வெட்டு நாட­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">துர்­நாற்­ற­ம­டிக்­கும் தூய சக்தி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மின்­வெட்­டைப் போலவே, அரி­வாள் வெட்டு, கொலை­யும் கொள்­ளை­யும் த.வெ.க. ஆட்­சி­யில் தொடர்ந்து வெற்­றி­ந­டை­போட்­டுக் கொண்­டி­ருக்­கின்­றன. சிவ­கங்கை, தூத்­துக்­குடி, தலை­ந­கர் சென்னை என அனைத்து ஊர்­க­ளி­லும் மையப் பகு­தி­க­ளி­லேயே சக­ஜ­மா­கக் கொலை­கள் நடக்­கின்­றன! இந்த ஆகா­வலி ஆட்­சி­யில், தொழில் நக­ர­மாக இருந்த கோவை­யி­லேயே ஒரு மாதத்­தில் பத்து கொலை­கள் நடந்து, கொலை நக­ர­மாக மாறி­யி­ருக்­கி­றது. அது­மட்­டுமா? மூச்­சுக்கு மூச்சு தூய­சக்தி ஆட்சி என்று தம்­பட்­டம் அடித்­தார்­களே... அது எப்­ப­டி­யெல்­லாம் துர்­நாற்­றம் அடிக்­கி­றது என்று சமூக ஊட­கங்­க­ளி­லும், செய்­தித்­தாள்­க­ளி­லும் ஒவ்­வொரு நாளும் பார்த்­துக்­கொண்­டு­தானே இருக்­கி­றோம்! போதைப்­பொ­ருள் நட­மாட்­டத்தை ஒழிப்­போம் என்று சொல்­லி­விட்டு, இவர்­களே மொத்­த­மாக உற்­பத்தி செய்து, ஒளித்து வைத்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தொடர்ந்து சிறு­மி­கள் காணா­மல் போகி­றார்­கள். பெற்­றோர்­கள் அனை­வ­ரும் பயத்­தில் நடுங்­கிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். பெண்­கள் மற்­றும் பெண் குழந்­தை­க­ளுக்கு எதி­ரான பாலி­யல் குற்­றங்­க­ளும் தொடர்­க­தை­யாக நடந்து கொண்­டி­ருக்­கின்­றன. அது­வும் மாட்­டு­கி­ற­வர்­கள் யார் என்று பார்த்­தீர்­கள் என்­றால், த.வெ.க. நிர்­வா­கி­கள்­தான் பல­பேர். இளை­ஞ­ரணி, மாண­வ­ரணி, மக­ளி­ரணி போல, த.வெ.க.வில் பாலி­யல் குற்­ற­வா­ளி­க­ளுக்­கும், போதைப்­பொ­ருள் கடத்­தல்­கா­ரர்­க­ளுக்­கும் தனிப் பிரிவு உரு­வாக்க வேண்­டும்! இவர்­க­ளுக்­குக் குற்­ற­வா­ளி­க­ளைப் பிடிக்­கத்­தான் வக்­கில்லை என்று பார்த்­தால், சிறை­யில் இருக்­கும் குற்­ற­வா­ளி­கள் அனை­வ­ரும் தப்­பித்­துச் சென்று கொண்­டி­ருக்­கி­றார்­கள். 30 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு – ஒரே சம­யத்­தில், 17 கைதி­கள் சிறை­யி­லி­ருந்து தப்பி ஓடிய வர­லாற்­றுச் சாதனை, இந்து தூய சக்தி விஜய் ஆட்­சி­யில்­தான் நடந்­தி­ருக்­கி­றது. அதற்­கு­முன் சென்னை புழல் சிறை­யில் இரண்டு கைதி­கள் சுவர் ஏறி குதித்­துத் தப்­பித்­தார்­கள். ஃபைல்­க­ளைத் திறக்­கி­றேன் என்று சொல்­லி­விட்டு, இப்­போது ஜெயி­லைத் திறந்து கொண்­டி­ருக்­கி­றார்­கள். இதே கோவை­யில் ஏற்­க­னவே தப்­பிப் போன வழக்­கில் கைது செய்­யப்­பட்ட ஒரு குற்­ற­வா­ளி­யைத் திரும்­ப­வும் தப்­பிக்க விட்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">ஐந்தே மாதங்­க­ளில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">5 ஆண்டு கால அவ­மா­னங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இன்­னொரு பக்­கம், தமிழ்­நாட்­டிற்கு வர­வேண்­டிய முத­லீ­டு­கள் எல்­லாம் பக்­கத்து மாநி­லங்­க­ளுக்­குச் செல்­கின்­றன! இது­தான் த.வெ.க. அர­சாங்­கம். தி.மு.க. ஆட்­சி­யில் பொரு­ளா­தார வளர்ச்­சி­யில் இந்­தி­யா­வி­லேயே டாப்­பில் இருந்த நம் தமிழ்­நாடு, ஐந்தே மாதத்­தில் தரை­மட்­டத்­திற்­குச் சென்­று­விட்­டது. “Master, மாற்­றங்­கள் வரும் Faster” என்று த.வெ.க. கட்­சி­யி­னர் பாடி­னார்­களே. அதற்கு அர்த்­தம் அப்­போது புரி­ய­வில்லை, இப்­போ­து­தான் புரி­கி­றது! ஐந்து ஆண்­டு­க­ளில் அடைய வேண்­டிய அவ­மா­னத்தை ஐந்தே மாதத்­தில் வாங்­கி­விட்டு, வெட்­கமே இல்­லா­மல் வெற்­றித் தமி­ழ­கம் என்று பீலா விடு­கி­றார்­களே! இந்­தச் சோப்­ளாங்கி ஆட்­சி­யில், தமிழ்­நாடு அனைத்­துத் துறை­க­ளி­லும் படு­பா­தா­ளத்­திற்­குச் சென்­று­விட்­டது. அனைத்­துத் தரப்பு மக்­க­ளும் வேத­னை­யில் இருக்­கி­றார்­கள். விவ­சா­யி­கள், தொழி­லா­ளர்­கள், தொழில் முனை­வோர், கூலித் தொழி­லா­ளர்­கள் என அனை­வ­ரின் வயிற்­றி­லும் அடித்­து­விட்­டார்­கள். ஆறு மாதத்­தி­லேயே மக்­க­ளின் வயிற்­றெ­ரிச்­ச­லைச் சம்­பா­தித்­து­விட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இதை­யெல்­லாம் சரி­செய்ய முத­ல­மைச்­சர் ஏதா­வது செய்­வார் என்று பார்த்­தால், அவர் என்ன செய்­கி­றார்? கோட்­சூட் போடு­கி­றார். ஜோசி­யர் சொன்ன, பட்டு வேட்டி சட்டை கட்­டு­கி­றார். ஆந்­திரா, கர்­நா­டகா, கேரளா போன்ற பக்­கத்து மாநி­லங்­க­ளுக்­கும் – புழல் சிறைச்­சா­லைக்­கும் சென்று, பரி­கார பூஜை செய்­கி­றார். கான்­வா­யில் வந்து, பெரி­யார் அறி­வு­ல­கம், சென்னை மெட்ரோ என தி.மு.க. அரசு கட்டி முடித்த திட்­டங்­க­ளைத் திறந்து வைத்­து­விட்டு, கை அசைக்­கி­றார். 10 மணி முதல் 5 மணி வரை வேலைக்­குச் செல்­கி­றேன் என்று பாவ்லா செய்­கி­றார். அது­வும், சனி, ஞாயிறு விடு­முறை. அவ்­வ­ள­வு­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">முத­ல­மைச்­சர் விஜய் அவர்­களே... ‘Uncle’ விஜய் அவர்­களே... முத­ல­மைச்­சர் பொறுப்பு, 10 முதல் 5 மணி வரை­யி­லான அலு­வ­லக வேலை இல்லை. அதற்­காக ஒட்­டு­மொத்­த­மா­கத் தன்னை ஒப்­ப­டைத்­து­விட்டு வாழ வேண்­டும். இது ஒன்­றும் சினிமா ஷூட்­டிங் போல, கால் ஷீட்­டில் மட்­டும் வேஷம் போட்­டு­விட்டு செட்­டுக்­குச் சென்­று­விட்டு வரும் வேலை கிடை­யாது, முத­லில் அதை புரிந்­து­கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அவர் கஷ்­டப்­பட்­டுப் பாசாங்கு செய்­து­கொண்­டி­ருந்­தால், அதை ஓவர்­டேக் செய்­யும் வகை­யில், புதிய பிரச்­சி­னை­கள் வேறு கிளம்­பி­யி­ருக்­கின்­றன. தின­மும் ஏதா­வது ஒரு குற்ற வழக்­கில் த.வெ.க. நிர்­வா­கி­கள் சிக்­கிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். தின­மும், டி.வி.யில் பார்க்­கி­றீர்­கள், பத்­தி­ரி­கை­யில் படிக்­கி­றீர்­கள். அந்­தக் கட்சி மாவட்­டச் செய­லா­ளர்­க­ளும், ஒன்­றி­யச் செய­லா­ளர்­க­ளும், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் பணம் கேட்டு மிரட்­டும் வீடியோ, ஆடியோ லீக் ஆகி­றது. ஆள் ஆளுக்கு வசூல்­ரா­ஜாக்­க­ளாக இருக்­கி­றார்­கள். பெண் நிர்­வா­கி­க­ளுக்கு இன்ஸ்­டா­கி­ரா­மில் ஆபா­ச­மாக மெசேஜ் அனுப்­பிய ஆதா­ரங்­கள் வெளி­வ­ரு­கின்­றன. த.வெ.க. அமைச்­சர்­க­ளும், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் பதி­வி­டும் ரீல்ஸ்­களை மிஞ்­சும் வகை­யில், அவர்­க­ளின் திரு­வி­ளை­யா­டல்­களை அம்­ப­லப்­ப­டுத்­தும் ரீல்ஸ்­கள் வெளி­யாகி, சூப்­பர் ஹிட் அடிக்­கி­றது. இந்த கேவ­லங்­க­ளை­யெல்­லாம் மறைக்­கத்­தான், நம்­மு­டைய முன்­னாள் அமைச்­சர் நேரு வீட்­டில் திரும்­பத் திரும்ப ரெய்டு செய்­கி­றார்­கள். திருச்­சி­யில் இடைத்­தேர்­தல் வேறு வரு­கி­றது. அதற்­கா­க­வும் சும்மா ஷோ காட்ட இதை­யெல்­லாம் செய்­து­கொண்­டி­ருக்­கி­றார்­கள். அது­மா­தி­ரி­யான அரட்­டல் மிரட்­டல்­க­ளுக்கு தி.மு.க. பயந்து பின்­வாங்­கி­ய­தாக வர­லாறே கிடை­யாது. அழுத்த அழுத்­தத்­தான், நாங்­கள் மேலே எழு­வோம்! அது­தான், DMK–வின் DNA!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">சி.எம். பொறுப்­போடு செயல்­பட வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஒரு முத­ல­மைச்­சர் எப்­படி இருக்க வேண்­டும்? அந்­தப் பத­விக்­கு­ரிய பொறுப்­போடு செயல்­பட வேண்­டுமா, வேண்­டாமா? கடந்த நம்­மு­டைய தி.மு.க. ஆட்­சி­யில் சிவ­கங்கை மாவட்­டத்­தைச் சேர்ந்த அஜித்­கு­மார் என்ற இளை­ஞர் லாக்–­­அப் மர­ணம் அடைந்­தார். காவல்­து­றைக்­குப் பொறுப்பு வகிப்­ப­வன் என்ற முறை­யில், நான் என்ன செய்­தேன்? காவ­லர்­கள் சில­ரின் தவ­றுக்கு அந்த இளை­ஞ­ரின் தாயா­ரி­டம் நான் போன் போட்டு வருத்­தம் தெரி­வித்து ‘Sorry’ கேட்­டேன். நானே அந்த வழக்கு விசா­ர­ணையை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்­த­ர­விட்­டேன். ஆனால், இன்­றைக்கு என்ன நிலைமை? முத­ல­மைச்­சர் எந்­தத் தவ­றுக்­கா­வது பொறுப்­பேற்று, பதிலோ விளக்­கமோ கொடுக்­கி­றாரா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">பல நூறு கோடி மதிப்­பி­லான – 135 கிலோ மெத்­தம்­பெட்­ட­மைன் போதைப்­பொ­ருள் வைத்­தி­ருந்த த.வெ.க. நிர்­வாகி பூபா­லனை ஒன்­றிய அர­சின் D.R.I. கைது செய்­தி­ருக்­கி­றார்­கள். கட்­சித் தலை­வ­ரான விஜய், மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர், ‘Uncle’ விஜய், இது பற்றி விளக்­கம் அளிக்க வேண்­டுமா, இல்­லையா? மாநில அர­சின் காவல்­துறை பூபா­ல­னைக் கைது செய்­யா­தது ஏன்? முத­ல­மைச்­ச­ரான விஜய்­தான் இதற்­கும் பொறுப்­பேற்­றுக்­கொள்ள வேண்­டும். பாலி­யல் குற்­றங்­க­ளில் அவர் கட்­சி­யி­னர் தொடர்ந்து சிக்­கு­கி­றார்­கள். அவர்­க­ளுக்கு இவர் இது­வரை அறி­வு­றுத்­தல் ஏதா­வது கொடுத்­தாரா? லாக்–­­அப் மர­ணங்­க­ளைப் பற்றி வாய் திறந்­தாரா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">பல­வீ­ன­மான முதல்­வர்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு பார்த்­ததே இல்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளைப் பார்த்­தாலே பயந்து ஓடு­ப­வ­ராக முத­ல­மைச்­சர் விஜய் இருக்­கி­றார். இவ்­வ­ளவு பல­வீ­ன­மான முத­ல­மைச்­சரை தமிழ்­நாடு இது­வரை பார்த்­ததே இல்லை. கார­ணம், ஊட­கங்­க­ளைச் சந்­தித்­தால் அவர்­கள் என்ன கேட்­கி­றார்­கள் என்றே இவ­ருக்­குப் புரி­யாது. அப்­போது இன்­னும் எக்ஸ்­போஸ் ஆகி­வி­டு­வோம் என்று நடுங்­கு­கி­றார் அவர். ஆனால், அவர் இப்­போது நடி­கர் விஜய் கிடை­யாது. முத­ல­மைச்­சர் விஜய்! “மக்­க­ளின் எந்­தக் கேள்­வி­க­ளுக்­கும் பதில் சொல்ல மாட்­டேன்” என்று, அவர் இருக்க முடி­யாது. அவ­ருக்கு எந்த வாய்ப்­பும் கிடை­யாது. பதில் சொல்­வது அவ­ரு­டைய கடமை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நன்­றாக ரிகர்­சல் பார்த்­து­விட்டு, வாக­னத்­தின் மேல் ஏறி நின்று ஆடிக்கு ஒரு­த­டவை, அமா­வா­சைக்கு ஒரு­த­ட­வை­தான் பேசு­கி­றார். இவர் பேச வேண்­டும் என்­றால், மாதம் ஒரு­முறை இடைத்­தேர்­தல் நடத்த வேண்­டுமா? அப்­போது கூட அவர் வாயி­லி­ருந்து பதில் எது­வும் வராது. எதைக் கேட்­டா­லும் அவ­ரி­டம் இருக்­கும் ஒரே பதில், தி.மு.க. – தி.மு.க. – தி.மு.க.! பாதி இர­வில் யாரா­வது யாரா­வது எழுப்பி கேட்­டால்­கூட, ‘தி.மு.க.’ என்று சொல்­லி­விட்­டு­தான் எழு­வார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்டு மக்­களை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">மீண்­டும் ஏமாற்ற முடி­யாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">த.வெ.க. அமைச்­சர்­கள் அனை­வ­ரும் என்ன செய்­கி­றார்­கள் என்று மக்­கள் பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். இதற்­கு­முன், தி.மு.க. ஆட்­சி­யில் வேலை­கள் எப்­படி வேக­மாக நடந்­தன என்­றும் இப்­போது ஒப்­பிட்­டுப்­பே­சத் தொடங்­கி­விட்­டார்­கள். சி.எம். சார், சினி­மா­வில் நடிக்­கும்­போது ஒரு ஃபார்­முலா வைத்­தி­ருந்­தார்... என்ன ஃபார்­முலா தெரி­யுமா? தன்­னு­டைய ‘ஆன்­லைன் விஷ­மி­கள்’ மூல­மாக, சக நடி­கர்­கள் மீது அவ­தூ­று­களை கிளப்­பி­விட்டு, அவர் வெற்­றி­பெ­று­வார். அதே ‘ரூட்’–­­இல், அர­சி­ய­லில் ஒரு­முறை வெற்­றி­பெற்­று­விட்­டார். தமிழ்­நாட்டு மக்­களை இரண்­டா­வது முறை­யும் அவ­ரால் உறு­தி­யாக ஏமாற்ற முடி­யாது! மக்­கள் ஏமாற மாட்­டார்­கள் என்று நான் நம்­பு­கி­றேன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மின்­கட்­டண உயர்வு, விலை­வாசி உயர்வு போன்ற கார­ணங்­க­ளால், தமிழ்­நாட்­டின் ஏழை­க­ளும், நடுத்­தர வர்க்க மக்­க­ளும் மாதம் 5 ஆயி­ரம் முதல் பத்­தா­யி­ரம் ரூபாய் வரை, கூடு­த­லா­கச் செலவு செய்ய வேண்­டிய கஷ்­டத்­தில் இப்­போது இருக்­கி­றார்­கள். ஒரு கொத்­த­மல்­லிக் கட்டு இப்­போது 30 முதல் 50 ரூபாய்க்­குச் சென்­று­விட்­டது. அரிசி, காய்­க­றி­கள் வாங்­கு­வ­தற்கே மக்­க­ளால் முடி­ய­வில்லை. பண்­டி­கைக் காலத்­தில்­கூட அவர்­க­ளால் கூடு­த­லாக செலவு செய்ய முடி­ய­வில்லை. அவர்­க­ளின் கண்­ணீரே இந்த ஆட்­சியை முடித்து வைத்­து­வி­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இந்த ஆட்சி நீடிப்­பது தமிழ்­நாட்டு மக்­க­ளுக்­கும் – தமிழ்­நாட்­டின் எதிர்­கா­லத்­திற்­கும் நல்­ல­தல்ல. இயற்கை பேரி­டர் வந்­தால் மஞ்­சள் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட் விடுப்­பது போல, த.வெ.க. ஆட்­சி­யில் தமிழ்­நாட்­டிற்கே ‘ரெட் அலெர்ட்’ விடப்­பட்­டி­ருக்­கி­றது! கூடிய விரை­வில் இந்த ஆட்­சிக்கு முற்­றுப்­புள்ளி வைப்­ப­து­தான் தமிழ்­நாடு எனும் அறி­வு­ல­கத்­திற்கு நல்­லது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">மக்­க­ளுக்­குப் புரிய வையுங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இங்கே இளை­ஞர்­கள் வந்­தி­ருக்­கி­றீர்­கள்... இந்­தத் தேர்­த­லில் பல இளை­ஞர்­கள் மாற்­றம்... மாற்­றம் என்று சொல்லி, வீட்­டில் இருப்­ப­வர்­களை வாக்கு செலுத்த வைத்­தார்­கள். ஆனால், கொலை­யும் – பாலி­யல் வன்­மு­றை­யு­மாக இருக்­கும் இந்த ஆட்சி, தமிழ்­நாட்­டில் ஏற்­பட்­டி­ருக்­கும் தவ­றான மாற்­றம் என்று அவர்­க­ளுக்­குப் புரி­யும் வகை­யில் எடுத்­துச் சொல்­லுங்­கள்! நிறைய பேர் அர­சி­யல் பேச ஆரம்­பித்­து­விட்­டார்­கள் என்று சொல்­கி­றார்­கள்... அவ­தூ­று­க­ளை­யும் – பொய்­க­ளை­யும் – போலி வீடி­யோக்­க­ளை­யும் பரப்பி, ஆளுங்­கட்சி செய்­து­கொண்­டி­ருப்­பது – ‘Healthy Politics’ அல்ல; ‘Filthy Politics’ என்று மக்­க­ளுக்­குப் புரிய வையுங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இன்­றைக்கு ஃபோனில்­தான் இளை­ஞர்­கள், பெண்­கள் அதிக நேரம் செல­வ­ழிக்­கி­றார்­கள்... நம்­மு­டைய ஃபோனுக்கு வரும் மெசேஜ்­க­ளும், இன்ஃப்­ளு­யன்­ஸர் வீடி­யோக்­க­ளும், வெறும் தக­வல்­கள் மட்­டும்­தான். தக­வ­லைத் தெரிந்­து­கொள்­வ­தற்­கும் உண்­மை­யைப் புரிந்­து­கொள்­வ­தற்­கும் நிறைய வேறு­பாடு இருக்­கி­றது! அதை குழந்­தை­கள் – இளை­ஞர்­கள் – பெரி­ய­வர்­கள் என அனை­வ­ரும் உணர வேண்­டும்! உண்­மை­யைப் பார்த்­துப் பொய் பயப்­ப­டும், வெளிச்­சத்­தைப் பார்த்து இருள் பயப்­ப­டும்! அது­போ­லத்­தான் த.வெ.க. மூடர் கூட­மும் அறி­வுச் செயல்­பா­டு­க­ளை­யும், நூல­கங்­க­ளை­யும் பார்த்­துப் பயப்­ப­டு­கி­றார்­கள். தமிழ்­நாட்­டின் சமூ­க­நீ­திப் பார்­வை­யும், தனித்­தன்­மை­யும் மழுங்­கி­வி­டா­மல், பெரி­யார் அறி­வு­ல­கம் போன்ற நூல­கங்­கள் பாது­காக்­கட்­டும்!அறி­வி­யல் பார்வை தழைக்­கட்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மீண்­டும் ஒரு­முறை, திரா­வி­டர் கழ­கத் தலை­வர் அய்யா ஆசி­ரி­யர் அவர்­க­ளுக்­கும் – துணைத் தலை­வர் கலி. பூங்­குன்­றன் அவர்­க­ளுக்­கும் – பொதுச்­செ­ய­லா­ளர் தம்பி அன்­பு­ராஜ் அவர்­க­ளுக்­கும் – திரா­வி­டர் கழ­கத்­தின் தோழர்­கள் அத்­தனை பேருக்­கும் – கருஞ்­சட்டை வீரர்­கள் உங்­க­ளுக்­கும், அதே­போல திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்தை முன்­னோ­டி­கள் – நிர்­வா­கி­கள் அத்­தனை பேருக்­கும், இந்த நிகழ்ச்­கிக்கு வருகை தந்து சிறப்­பித்­துக் கொண்­டி­ருக்­கும் பெரி­யோர்­கள் – தாய்­மார்­கள், ஒரே­வ­ரி­யில் சொல்ல வேண்­டும் என்­றால், தலை­வர் கலை­ஞ­ரின் உயி­ரி­னும் உயி­ரான அன்பு உடன்­பி­றப்­பு­க­ளுக்கு, நன்றி, நன்றி, நன்றி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இவ்­வாறு கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் 
அவர்­கள் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>