<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="05/11/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,65,376,1496" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="1"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Nov 05 2026 03:50:29 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261105T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="05112026-VLR-02" position.sequence="02" ex-ref="05112026-VLR-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#0000ff" boxBorderWeight="1.97960263559774">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">மீனவர்கள்  எதிர்ப்பையும்  மீறி…!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup958220_02_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">1200</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">கோடி ரூபாய் மதிப்­பில் புதிய தலை­மைச் செய­ல­கம் கட்­டப்  போகி­றார் விஜய். அதற்­காக அவர் தேர்ந்­தெ­டுத்த இடம் கடல் பகுதி. அதி­லும் குறிப்­பாக மீன­வர்­கள் வாழ்­வி­டப் பகுதி. இங்கு தலை­மைச் செய­ல­கம் அமைக்க வேண்­டாம்  என்று மீனவ மக்­கள் ஒரு மாத கால­மாக போராட்­டம் நடத்தி 
வரு­கி­றார்­கள். அதைக் காதில்வாங்­கிக் கொள்­ளா­மல் தலை­மைச் செய­ல­கம் கட்­டு­வ­தற்­கான வேலை­க­ளைத்  தொடங்­கி­விட்­டது விஜய் அரசு. குறைந்­த­பட்­சம் அந்த மீனவ சமு­தாய மக்­களை, அமைப்­பி­னரை அழைத்­துப்  பேசி­னாரா  விஜய்? இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">சினி­மா­வில், ‘இந்த உப்பு மண்ணை விட்­டுப் போக மாட்­டோம், போகச் 
சொன்­னால் இங்­கேயே செத்­துப் போவோம்’ என்று டய­லாக் விட்­ட­வர்­தான் இந்த விஜய். இப்­போது அவரே மீனவ மக்­க­ளின் வாழ்க்­கை­யைச் சிதைக்­கத் தொடங்கி விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">புதிய தலை­மைச் செய­ல­கம் கட்ட திட்­ட­மிட்ட பகு­தி­யில் உள்ள வீட்டு வசதி வாரி­யக் குடி­யி­ருப்­பு­களை இடிக்க ஒப்­பந்­தப் புள்ளி கோரி இருக்­கி­றது விஜய் அரசு. தமிழ்­நாடு வீட்டு வச­தி­வா­ரி­யத்­தின் நந்­த­னம் கோட்­டத்­தின் சார்­பில் 
மயி­லாப்­பூர் பகு­தி­யில் உள்ள 96 குடி­யி­ருப்­பு­களை இடிக்க மின் ஒப்­பந்­தப்­புள்ளி அறி­விப்பை விஜய் அரசு இரண்டு நாட்­க­ளுக்கு முன் விட்­டுள்­ளது. இதனை மீனவ சமு­தாய மக்­கள் கடு­மை­யாக எதிர்த்­துள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">“எங்­கள் மறு­வாழ்­வுக்­காக கோரப்­பட்ட இடத்­தில் புதிய தலை­மைச் செய­ல­கம் கட்­டு­வ­தற்­கான அர­சா­ணையை ரத்து செய்­யா­ம­லும் கடற்­கரை ஒழுங்கு முறை மண்­டல அனு­மதி பெறா­ம­லும் இடிப்­புக்கு ஒப்­பந்­தம் கோரப்­பட்­டுள்­ளது. இதை 
மயி­லாப்­பூர் பகுதி பஞ்­சா­யத்­துக்­கா­ரர்­க­ளா­கிய நாங்­கள் வன்­மை­யா­கக்  கண்­டிக்­கி­றோம்’’ என்று அறிக்கை வெளி­யிட்­டுள்­ளார்­கள் மீனவ மக்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">எங்­கள் மறு­வாழ்­வுக்­காக நாங்­கள் இது­வரை கேட்ட 3.82 ஏக்­கர் இடம் இது­தான் என்­றும் மீனவ சங்­கங்­கள் சொல்லி இருக்­கின்­றன. கடற்­கரை ஒழுங்கு முறை மண்­டல அறி­விக்கை  2019 இன் கீழ் நீண்ட காலக்  குடி­யி­ருப்­புக்­கான  திட்­டப் பகு­தி­யாக இதை அறி­விக்க வேண்­டும் என்­ப­து­தான் அவர்­க­ளது கோரிக்கை. இந்த இடத்தை புதிய தலை­மைச் செய­ல­கம் கட்­டு­வ­தற்கு பயன்­படுத்­தக் கூடாது என்­றும் அவர்­கள் சொல்லி இருக்­கி­றார்­கள். புதிய தலை­மைச் செய­ல­கம் கட்­டு­வ­தற்­கான அர­சா­ணையை முழு­மை­யாக ரத்து செய்ய 
வேண்­டும் என்­ப­து­தான் அவர்­க­ளது கோரிக்கை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">புதிய தலை­மைச் செய­ல­கம் கட்­டு­வ­தற்­காக நேற்­றைய தினம் சென்னை மாவட்ட ஆட்­சி­யர் அலு­வ­ல­கக் கட்­ட­டத்­தில் ஒரு ஆலோ­ச­னைக் கூட்­டம் நடப்­ப­தா­க­வும், அதில் கலந்து கொள்ள வேண்­டும் என்­றும் மீனவ கிராம பஞ்­சா­யத்­தாருக்கு தக­வல் அனுப்­பப்­பட்­டது. இதில் கலந்து கொள்ள முடி­யாது என்று சில கிராம பஞ்­சா­யத்­தார் அறி­வித்­தார்­கள். இந்த நிலை­யில் அந்­தக் கூட்­டம் ரத்து செய்­யப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">முறை­யான எழுத்­துப்­பூர்­வ­மான அழைப்­பாக இல்­லா­மல் தங்­க­ளுக்கு  வேண்­டிய சில­ருக்கு மட்­டும்தொலை­பேசி மூல­மாக பேசி அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது என்று மீனவ அமைப்­பி­னர் சொல்­கி­றார்­கள். மயி­லாப்­பூர், திரு­வல்­லிக்­கேணி பகு­தி­யில் உள்ளஅனைத்­துப் பஞ்­சா­யத்­தார்க்­கும் முறை­யான எழுத்­துப்­பூர்­வ­மான அழைப்பு வருங்­கா­லத்­தில் விடுக்­கப்­பட வேண்­டும் என்­றும் அவர்­கள் சொல்லி இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">விஜய் அரசு எத்­த­கைய பித்­த­லாட்­டத்­தைச் செய்து வரு­கி­றது என்­பது இதன் மூலம் தெரி­கி­றது. ‘கட­லைப் பார்த்து முத­ல­மைச்­சர் அறை இருக்க வேண்­டும்’ என்று ஜோசி­யர் சொன்­ன­தற்­காக ரூ.1200 கோடி­யில் தலை­மைச் செய­ல­க­மும், சட்­ட­மன்­றக் கட்­ட­ட­மும் அமைக்­கி­றார்­கள் என்­றால் ‘தான்­தான் கால­மெல்­லாம் 
ஆட்­சி­யில் இருக்­கப் போகி­றோம்’ என்று நம்­பு­கி­றாரா விஜய்? ஐந்து மாதத்­தில் சந்தி சிரித்­துக் கொண்டு இருக்­கி­றது இந்த ஆட்சி. இது எங்கே ஐந்­தாண்­டு­கள் நீடிக்­கப் போகி­றது? ஊருக்­குள் அடிக்­கத் தொடங்கி இருக்­கும் நாற்­றம் இன்­னுமா முத­ல­மைச்­ச­ரின் மூக்­குக்கு வர­வில்லை? வந்து குமட்­ட­வில்லை?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">ரூ.6 கோடி­யில் தனக்கு அறை கட்­டி­ய­தி­லேயே எத்­தனை முறை­கே­டு­கள்? டெண்­டரே  விடா­மல் பணி­க­ளைத்  தொடங்­கி­யது நிறு­வ­னம். அதன்­பி­றகு தான் டெண்­டரே  விட்­டார்­கள். ஒரே ஒரு அறை அமைக்­கவே  விதி­மு­றை­க­ளைப்  
பின்­பற்­றா­மல் முறை­கே­டு­கள் செய்­தது விஜய் அரசு. ரூ.1200 கோடி­யில் என்­ன
­வெல்­லாம் செய்­வார்­கள் என்­பது இப்­போதே  தெரி­கி­றது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஒரு இடத்­தைத் தேர்வு செய்­வ­தில் தான் எத்­தனை குள­று­ப­டி­கள்? 
தலை­மைச் செய­ல­கம் கட்ட பட்­டி­னப்­பாக்­கம் இடத்தை தேர்வு செய்து அர­சா­ணை­யும் வெளி­யிட்­டார்­கள். அதற்கு எதிர்ப்பு வந்­த­தும், ‘முத­ல­மைச்­சர் இன்­னும் முடிவு செய்­ய­வில்லை’ என்று பல்டி அடித்­தார்­கள். முத­ல­மைச்­சர் 
முடி­வெ­டுக்­கா­மல் அர­சாணை வெளி­யிட்­ட­வர் யார்? முத­ல­மைச்­சரை விட அவர் பெரிய மனி­தரா? அவர்­தான் முத­ல­மைச்­சரை இயக்­கு­கி­றார?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">முத­லில் அர­சாணை என்­றால் என்ன என்­றா­வது தெரி­யுமா? அர­சாணை போடு­வ­தற்கு முன்­னால் எதை­யெல்­லாம் சிந்­தித்து அர­சாணை போட 
வேண்­டும் என்­ப­தா­வது தெரி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தலை­மைச் செய­ல­கம் கட்­டு­வ­தற்­கா­கத் தேர்வு செய்­துள்ள பட்­டி­னப்­பாக்­கம் என்­பது மீன­வர்­கள் காலம் கால­மாக வாழும் பூமி ஆகும்.  மொத்­தம் 12 குடி­யி­ருப்­புப் பகு­தி­கள் இரு மருங்­கி­லும் ஒரு கிலோ மீட்­ட­ருக்கு உள்­ளா­கவே 
உள்­ளன. இங்கு வசிப்­ப­வர்­க­ளில் பெரும்­பா­லா­ன­வர்­கள் மீனவ மக்­கள். இந்த  முள்­ளிக்­குப்­பம் பகு­தி­யில் 20 லட்­சம் சதுர அடி பரப்­ப­ள­வில் புதிய சட்­ட­மன்­றம், தலை­மைச் செய­ல­கக்  கட்­டட வளா­கம் அமைக்­கப் போவ­தாக விஜய் அரசு 
திட்­ட­மிட்­டுள்­ளது. இவ்­வ­ளவு பெரிய திட்­டம் வரும் போது அங்­குள்ள மக்­களை முன்­கூட்­டியே சந்­தித்து ஆலோ­ச­னைக்  கூட்­டம் நடத்தி அதன் அடிப்­ப­டை­யில் முடி­வு­கள் எடுத்து, அர­சா­ணை­கள் போட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">‘அர­சாணை போட்­டாச்சு, எல்­லா­ரும் இடத்­தைக் காலி பண்­ணுங்­கள்’ 
என்­ப­து­தான் மக்­கள் நல அரசா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">மக்­கள் எதிர்ப்பு ஒரு பக்­கம் இருக்­கட்­டும். 2004 ஆம் ஆண்டு டிசம்­பர் மாதம் சுனா­மி­யில் அதி­கம் பாதிக்­கப்­பட்ட இடம் இது.  இத்­த­கைய ஒரு கடற்­க­ரைப் 
பகு­தியை யாரா­வது தலை­மைச் செய­ல­கம் கட்­டத் தேர்வு செய்­வார்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">‘சுறா’ படத்­தில் ஒரு மாஃபியா வந்து மக்­கள் வாழும் பகு­தி­யைக் கப­ளீ­க­ரம் செய்­யும். அத்­த­கைய  மாஃபி­யா­வாக  இப்­போது மாறி இருக்­கி­றார் விஜய். 
படத்­தில் ஹீரோ­வாக நடித்­த­வர், அர­சி­ய­லில் வில்­ல­னாக வாழ்ந்து கொண்­டி­ருக்­கிறார். மாற்­றம் என்­றார்­களே இது­தான் மாற்­றம்.  விஜய் மூளை­யில் நடந்­தி­ருப்­பது­தான் மாற்­றம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>