<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="06/11/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,67,957,923" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Nov 06 2026 03:36:04 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261106T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="06112026-CBE-06" position.sequence="06" ex-ref="06112026-CBE-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="79">திருவிழாக் காலங்களில் ஏற்றப்படும் அலங்கார தீபம் அல்ல தி.மு.க.</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup977964_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="15">உ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">லக வர­லாற்­றில் மனி­த­குல நாக­ரி­கத்­தின் சிக­ர­மா­கத் திகழ்ந்த தமி­ழி­னத்­தின் கலை, கலாச்­சா­ரம், பண்­பாடு ஆகி­ய­வற்­றின் விழு­மி­யங்­கள் ஆரி­யர் வரு­கை­யால் வட­வர் ஆதிக்­கத்­தால் சிதைக்­கப்­பட்டு புராண இதி­கா­சங்­கள் பொய்­யும் புரட்­டு­மாக புனை­யப்­பட்டு அறி­யாமை இருள்­சூழ்ந்த சமு­தா­ய­மாக தமிழ்ச்­ச­மூ­கம் கட்­ட­மைக்­கப்­பட்­டது. அதன்­படி ஆரி­யர்­க­ளின் சூதும், வஞ்­ச­னை­யும் புராண இதி­கா­சங்­க­ளில் கருப்­பொ­ரு­ளாகி அவர்­க­ளால் திட்­ட­மி­டப்­பட்டு தமிழ் சமு­தா­யத்­தின்­மீது திணிக்­கப்­பட்­டன‌‌.  இதற்­கான அர­சி­யல் அதி­கா­ரத்தை  மன்­னர்­களை தங்­கள் சூழ்ச்­சி­யால் கைப்­பா­வை­க­ளாக்கி அவர்­க­ளது கருத்­துக்­களை அரங்­கேற்­றி­னர். அவர்­க­ளின் வாழ்­வா­தா­ரம் மற்­றும் பொரு­ளா­தா­ரத் தேவை­க­ளுக்­காக ஆல­யங்­களை உரு­வாக்கி அவற்­றில் அர்ச்­ச­கர்­க­ளாகி அவர்­க­ளால் கற்­பி­தம் செய்­யப்­பட்ட சமஸ்­கி­ரு­தம் மட்­டுமே ஆண்­ட­வனை அர்ச்­சிக்க உகந்த மொழி என்­றும், அவர்­கள் கட­வு­ளின் தூது­வர்­கள் என­வும் கல்­வி­ய­றி­வற்ற கடை­நி­லை­யில் வாழ்ந்த தமிழ்­மக்­களை தன்­வ­யப்­ப­டுத்தி நம்­ப­வைத்­த­னர். ஆரி­யர்­க­ளின் கைப்­பா­வை­க­ளாக செயல்­பட்ட மன்­னர்­களை அவர்­க­ளின் கருத்­துக்­க­ளுக்கு ஆத­ர­வாக அர­சா­ணை­யிட பணித்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆரி­யர்­க­ளின் இந்த வஞ்­சக நட­வ­டிக்கை என்­பது பல்­லா­யி­ரம் ஆண்­டு­கள் தொடர்ந்­த­தால் உல­கம் சிறக்க வாழ்ந்த தமி­ழி­னம் அறி­யா­மை­யில் சிக்கி, வறு­மை­யில் வீழ்ந்து, மூட­நம்­பிக்­கை­யில் மூழ்­கி­யது. இவ்­வாறு இருண்ட வாழ்க்கை இடை­வெ­ளி­யின்றி நூற்­றாண்­டு­க­ளாக தொடர்ந்த நிலை­யில், அவர்­க­ளது இறப்­பிற்­குப் பின்­னர் மோட்­சத்­திற்கு வழி­காட்­டும் தூது­வர்­கள் நாங்­கள்­தான் என ஆரி­யர்­கள் நம்­ப­வைத்து அறி­யா­மை­யில் மூழ்­கிய தமி­ழர்­களை தங்­கள் பக்­கம் ஈர்த்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆரி­ய­ரின் அறி­வு­ரையை கேட்­கா­விட்­டால் நர­கம் உறு­தி­யென அச்­சு­றுத்­தி­ய­தால் படிப்­ப­றி­வில்­லாத பாம­ர­மக்­கள் ஆசி­ரி­யர் கூட்­டத்­தி­டம் அடி­மை­க­ளாக வாழத்­தொ­டங்­கி­னர். இந்­தச் சூழ்­நி­லை­யில் அடித்­தட்டு மக்­க­ளின் ஒட்­டு­மொத்த எதிர்ப்­பும் வந்­து­வி­டக்­கூ­டாது என்­ப­தற்­காக ஆரி­யர்­கள் வர்­ணா­சி­ரம தர்­மத்­தின் அடிப்­ப­டை­யில், பிறப்­பால் மனி­தர்­களை பிரித்­தா­லும் சூழ்ச்­சி­யைக் கையாண்­டார்­கள். அதன் உச்­ச­கட்­ட­மாக நான்­காம் வர்­ண­மக்­க­ளான, “சூத்­தி­ர­னுக்கு எதைக்­கொ­டுத்­தா­லும் கல்­வியை மட்­டும் கொடுக்­காதே” என்­ப­தில் கண்­ணும் கருத்­து­மாக இருந்­த­னர். இதைத்­தான் ஒரு­முறை தமி­ழக சட்­ட­மன்­றத்­தில் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் முத­ல­மைச்­ச­ராக இருந்­த­போது எதிர்க்­கட்சி வரி­சை­யில் இருந்த டாக்­டர் ஹண்டே இது மூன்­றாம் தர ஆட்சி என்று சொன்­னார். அதற்­குப் பதி­ல­ளித்த கலை­ஞர் இது நான்­காம் தர ஆட்சி (சூத்­தி­ரர் ஆட்சி) என்று குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இத்­த­கைய இருண்­ட­கால சுழற்­சி­யில் பல்­லா­யி­ரம் ஆண்­டு­கள் கல்வி மறுக்­கப்­பட்ட மக்­க­ளாக தமி­ழக மக்­கள் ஆரி­யர்­க­ளின் வஞ்­ச­னை­யால், ஏழ்­மை­யி­லும், வறு­மை­யி­லும், அறி­யா­மை­யி­லும் மூழ்­கித் தவித்­த­னர். காலப்­போக்­கில் பதி­னே­ழாம் – பதி­னெட்­டாம் நூற்­றாண்­டு­க­ளில் வணி­கம் செய்­வ­தற்­காக இந்­தி­யா­விற்கு வந்த ஐரோப்­பி­யர்­களை தொடர்ந்து ஆட்சி அதி­கா­ரத்தை கைப்­பற்­றிய ஆங்­கி­லே­யர்­க­ளால் 19ஆம் நூற்­றாண்­டின் தொடக்­கத்­தில் கல்­வி­ய­றிவு என்­பது அனைத்து மக்­க­ளுக்­கும் பொது­ வா­னது என்ற பொது­வு­டமை கோட்­பாட்­டின் அடிப்­ப­டை­யில் அனைத்து தரப்பு மக்­க­ளுக்­கும் கல்­வி­ப­யி­லும் வாய்ப்பு கிட்­டு­கிறவகை­யில் பள்­ளிக்­கூ­டங்­க­ளை­யும், கல்­லூ­ரி­ க­ளை­யும் திறந்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனா­லும், ஆங்­கி­லேய ஆட்­சி­யில் “எல்­லோ­ருக்­கும் கல்வி” என்­றக் கோட்­பாட்டை  ஆரி­யர்­கள் தங்­க­ளு­டைய செல்­வாக்கை பயன்­ப­டுத்தி சிதைக்­க­வும், தடுக்­க­வும் திசை­மாற்­றி­னர் என்­பது கடந்­த­கால வர­லா­றா­கும்.  ஆரி­யர்­க­ளின் இத்­த­கைய சூழ்ச்­சி­யின் இன்­னொரு வடி­வம்­தான் தமிழ்­நாட்­டின் மூத­றி­ஞர் ராஜாஜி கொண்டு வந்த “குலக்­கல்வி திட்­ட­மா­கும்”.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தந்தை பெரி­யார் காங்­கி­ரஸ் கட்­சி­யில் பணி­யாற்­றிய பொழுது காங்­கி­ரஸ் தேசிய விடு­தலை இயக்­கம் என்று சொல்­லப்­பட்­டா­லும், அதில் ஆரி­யர்­க­ளின் அதி­கா­ரம் தலை­தூக்­கி­ய­தோடு சனா­தன கோட்­பாடு கோலோச்­சி­ய­தால் 1925 ஆம் ஆண்டு சுய­ம­ரி­யாதை இயக்­கத்தை தொடங்­கி­னார். அதன்­மூ­லம் வர்­ணா­சி­ர­மக் கோட்­பா­டு­கள் தகர்த்து தரை­மட்­ட­மாக்­கப்­பட வேண்­டும் என்று நாடு முழுக்க ஊர்­ஊ­ரா­கச் சென்று முழங்­கி­னார். மேலும், இளை­ஞர்­களை நோக்கி எந்­தக் கருத்­தை­யும் யார் சொன்­னா­லும் அப்­ப­டியே ஏற்­றுக்­கொள்­வது மூட­நம்­பிக்கை. அந்­தக் கருத்­துக்­கான கார­ண­கா­ரி­யங்­களை ஏன்? எதற்கு? எப்­படி? என்­ப­தற்­கான விளக்­கங்­களை பெற்று ஏற்­றுக்­கொள்­வ­து­தான் அறி­வு­டை­மை­யா­கும். அது­தான் பகுத்­த­றிவு என்று அறி­வுரை வழங்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவ­ரு­டைய இத்­த­கைய பகுத்­த­றிவு பிரச்­சா­ரத்­தால் லட்­சக்­க­ணக்­கான இளை­ஞர்­கள் தந்தை பெரி­யா­ரின் கொள்­கை­களை ஏற்று சுய­ம­ரி­யாதை இயக்­கத்தை பின்­பற்றி, அவர் இட்ட கட்­ட­ளை­களை செயல்­ப­டுத்த தொடங்­கி­னார்­கள். இன்­றைய நவீன தமி­ழ­கத்­தின் அறி­வி­யல் வளர்ச்­சிக்­காக தொடக்­கப்­புள்ளி வைத்து அக­ரம் தீட்­டி­ய­வர் தந்தை பெரி­யா­ரும் அவரை அடி­யொற்றி வீரு­நடை போற்ற பகுத்­த­றி­வா­ளர்­கள்­தான் என்­பதை யாரா­லும் மறுக்க இய­லாது. ஆம்! திரா­விட இயக்­கம்­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இத­னைத் தொடர்ந்து அடுத்­த­கட்­ட­மாக 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்­கள் 15ஆம் நாள் இந்­திய துணைக்­கண்­டம் விடு­த­லை­பெற்ற போது காஞ்­சிக் கரு­வூ­லம் பேர­றி­ஞர் அண்­ணா­விற்­கும், ஈரோட்­டுப் பக­ல­வன் தந்தை பெரி­யா­ருக்­கும் ஏற்­பட்ட கருத்து முரண்­பாட்­டில் 1949ஆம் ஆண்டு செப்­டம்­பர் திங்­கள் 17ஆம் நாள் அறி­ஞர் பெருந்­தகை அண்ணா அவர்­கள் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் என்­கின்ற மகத்­தான இயக்­கத்தை தொடங்­கி­னார். அதன்­நோக்­கம் பெரி­யா­ரின் கருத்­துக்­க­ளுக்­கும், சிந்­த­னை­க­ளுக்­கும் விடு­த­லை­பெற்ற இந்­தி­யா­வின் ஜன­நா­யக ஆட்­சி­மு­றை­யில் சட்­ட­வ­டி­வம் கொடுக்க வேண்­டும் என்­பதே மிக முக்­கி­ய­மான நோக்­க­மா­கும். இந்­தச் சிந்­த­னை­யின் பிர­தி­ப­லிப்­பா­கத்­தான் பேர­றி­ஞர் அண்ணா 1967–ல் தமி­ழக முத­ல­மைச்­ச­ராக ஆட்­சிப்­பொ­றுப்­பிற்கு வந்­த­வு­டன் தமி­ழர்­க­ளின் தன்­மான பிர­தி­ப­லிப்­பாக மூன்று அறி­விப்­பு­களை சட்­ட­ச­பை­யில் நிறை­வேற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">1. சென்னை மாகா­ணம் என்­பது “தமிழ்­நாடு” என பெயர் மாற்­றப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">2. சுய­ம­ரி­யா­தைத் திரு­ம­ணங்­கள் சட்­டப்­படி செல்­லு­படி ஆக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">3. தமிழ்–­ஆங்­கி­லம் என்ற இரு­மொ­ழிக் கொள்­கை­தான் தமி­ழக அர­சின் மொழிக்­கொள்கை என வரை­ய­றுக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த அறி­விப்­பிற்கு முந்­தைய காலக்­கட்­டத்­தில் தந்தை பெரி­யார் வழி­யில்,பேர­றி­ஞர் அண்ணா வழி­யில், முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் வழி­யில் “தமிழ்­நாடு” என பெயர் மாற்­றக்­கோரி பல­லட்­சக்­க­ணக்­கான பல கோடி கணக்­கான இளை­ஞர்­கள் போரா­டி­னார்­கள். உயிரை துச்­ச­மென மதித்து களத்­திலே நின்­றார்­கள், களப்­ப­லிக்கு ஆளா­னார்­கள். ஆரிய ஆதிக்­கத்­தால் முடை­நாற்­றம் வீசிய தமிழ்­மண்ணை வீரி­யப் படுத்த இளை­ஞர்­கள், மாண­வர்­கள் தங்­கள் ரத்­தத்தை தாரை­வார்த்து தந்­தார்­கள் என்­பது திரா­விட இயக்­கத்­தின் நெடிய வர­லாற்­றில் ஓர் முக்­கி­ய­மான மைல் கல்­லா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அந்­தக் காலத்­தில் பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள் “காஞ்சி”, “திரா­வி­ட­நாடு” போன்ற ஏடு­க­ளில் “தம்­பிக்கு” என விழித்து நாட்­டு ­ந­டப்­பை­யும், உலக அர­சி­யல் நில­வ­ரங்­­ களை­யும்,  கொள்கை  கோட்­பா­டு­க­ளை­யும் விளக்கி கடி­தம் எழு­தி­னார்­கள். அதில், “தம்பி உடை­யான் படைக்கு அஞ்­சான்”, “இப்­படை தோற்­கின் எப்­படை வெல்­லும்” போன்ற      முத்­தாய்ப்­பான    வாச­கங்­கள்­­மூலம் இளை­ஞர்­களை ஈர்த்­தார். அத­னால்­தான் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்தை “அர­சி­யல்­கட்சி” என்று சொல்­வதை விட தமி­ழி­னத்­திற்­கான ஓர் “அர­சி­யல் இயக்­கம்” என்று குறிப்­பிட்­டார். அவ­ரைத் தொடர்ந்து முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் பேர­றி­ஞர் அண்ணா வழி­யில், முர­சொ­லி­யில் தன்­னு­டைய கடி­தத்தை “உடன்­பி­றப்பு” என்று எழு­தத் தொடங்­கி­னார். அதில் அவர் கையாண்ட உணர்ச்­சி­மி­குந்த சொல்­லாட்சி படித்­த­வர்­க­ளை­யும், பாம­ரர்­க­ளை­யும் படிக்­கத் தூண்டி கவர்ந்து இழுத்­தது. இவ்­வாறு பேர­றி­ஞர் அண்ணா அவர்­க­ளும், முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளும் தங்­க­ளு­டைய எழுத்­தால், ஆற்­றல்­மி­குந்த பேச்­சால், நாட­கங்­க­ளால், திரைப்­ப­டங்­க­ளால் திரா­விட இயக்­கத்­திற்கு இளை­ஞர்­க­ளை­யும் மற்­றும் அடித்­தட்டு மக்­க­ளை­யும் வெகு­வாக ஈர்த்­த­னர். அதன்­வி­ளை­வாக இளை­ஞர்­க­ளும், மாண­வர்­க­ளும் இனம், மொழி, பண்­பாடு, பகுத்­த­றிவு, ஜன­நா­ய­கம் போன்ற சமூக வாழ்க்­கை­யின் அடித்­தள சிந்­த­னை­க­ளைச் சீர்­தூக்­கிப் பார்த்து அவற்றை நிலை­நாட்­டு­ வ­தி­லும், பாது­காப்­ப­தி­லும் பேர­றி­ஞர் அண்­ணா­விற்­குப் பின்­னால், முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞ­ருக்­குப் பின்­னால் திரா­விட இயக்­கத்­திற்கு அணி­தி­ரண்­ட­னர் என்­பது வர­லாற்­றின் திருப்­பு­மு­னை­யா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் இந்த அடிப்­ப­டைக் கோட்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­ தற்­கும் நிலை­நி­றுத்தி வெற்­றிக்­கொடி நாட்­டு­வ­தற்­கும்  நீதி­மன்­றத்­தில் வாதா­டு­வ­தற்­கும், மக்­கள் மன்­றத்­தில் போரா­டு­வ­தற்­கும் முனைப்­பா­க­வும் ஆயத்­த­மா­க­வும் உள்­ளது என்­பதை சமீ­பத்­தில் கழ­கத் தலை­வர் தள­பதி மு.க.ஸ்டாலின் பசும்­பொன்­னில் தேவர் பெரு­ம­க­னா­ருக்கு அஞ்­சலி செலுத்­தி­விட்டு, பத்­தி­ரிக்கை ஊட­கங்­க­ளைச் சந்­தித்­த­போது அடக்­கு­மு­றை­க­ளைக் கண்டு அஞ்­ச­மாட்­டோம். நெருக்­க­டி­களை “மிசா”, “தடா”, “பொடா” போன்ற சட்­டங்­களை சந்­தித்­த­வர்­கள் நாங்­கள் என்று உறு­தி­ப­டக் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எனவே,  இளை­ஞர்­கள், மாண­வர்­கள் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தில் தங்­களை இணைத்­துக் கொண்டு திரா­விட இயக்க சிந்­த­னை­க­ளை­யும், தங்­கள் 
அறி­வாற்­ற­லை­யும் கூர்­தீட்டி கடந்­து­வந்த வர­லாற்று பாதையை திரும்­பிப் பார்த்­தும் தமிழ்­நாட்­டுக்­கும் தமிழ்­நாட்டு மக்­க­ளுக்­கும் தேவை­யான அறி­வுப் பாசறை 
திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் என்­ப­தை­யும் அதன் தலை­மை­ய­கம் “அண்ணா அறி­வா­ல­யம்” என்­ப­தை­யும் பறை­சாற்ற வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஏனெ­னில், மத­வாத சனா­தன சக்­தி­கள் இணைந்து ஒன்­றிய ஆட்சி அதி­கா­ரத்­தைக் கைப்­பற்றி தங்­கள் திட்­டங்­களை பர­வ­லாக்கி “ஒரே நாடு–­ஒரே தேர்­தல்” என்ற முயற்­சியை மேற்­கொண்­டி­ருக்­கும் இன்­றை­யக் கால­கட்­டத்­தில் தமிழ்­நாட்­டி­னு­டைய நலன்­க­ளை­யும் தமிழ் மக்­க­ளின் கலை, கலாச்­சா­ரம், நாக­ரி­கம், பண்­பாடு ஆகி­ய­வற்றை பாது­காக்க உரு­வாக்­கப்­பட்ட உயி­ரோட்­ட­முள்ள இயக்­கம்­தான் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் என்­பதை உணர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆம்! திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் உல­கம் உள்­ள­வரை தமி­ழி­னத்­தின் அர­ணா­க­வும் அக­ழி­யா­க­வும் பயன்­ப­டும் நிரந்­த­ரக் கட்­ட­மைப்­பா­கும். அந்­த­வ­கை­யில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் என்­பது 
“திரு­வி­ழாக் காலங்­க­ளில் ஏற்­றப்­ப­டும் அலங்­கார விளக்­கு­கள் அல்ல, மாறாக 
அறி­யாமை இருள் அகற்றி திரா­விட மாடல் ஆட்­சி­யின் என்­றும் அணை­யாத அகல் விளக்­கா­கும்” எதிர்­கால தமி­ழி­னத்­திற்கு திசை­காட்­டும்  கலங்­கரை விளக்­க­மு­மா­கும் என்­பதை உல­கிற்கு உணர்த்த வாருங்­கள் இளை­ஞர்­களே! இயக்­கத்­தில் பணி­யாற்­றிட, நம் இனம், மொழி காத்­திட கழ­கத் தலை­வர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் தலை­மை­யில் அணி­வ­குப்­போம்! அவர் காட்­டும் திசை­யில் பணி முடிப்­போம்!!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>