<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/11/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,65,608,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Nov 07 2026 03:32:28 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261107T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="07112026-CBE-04" position.sequence="04" ex-ref="07112026-CBE-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="65">“ஒரு நூலகம் திறக்கப்படும்போது   </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="70">நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன!” </lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup978422_04_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">கோ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">வை­யில் திரா­வி­டர் கழ­கம் சார்­பில் நடை­பெற்ற ‘திரா­விட மாடல் நாய­க­ருக்­குப் பாராட்டு விழா’ என்ற பெய­ரில் ஆசி­ரி­யர் அய்யா கி. வீர­மணி அவர்­கள் தலை­மை­யில் மு.க. ஸ்டாலின் அவர்­க­ளின் சாத­னை­க­ளைப் பாராட்­டும் விதத்­தில் சிறப்­பாக நடந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">பெரி­யார் ‘புத்­த­கம் வாசிப்பு மற்­றும் நூல­கங்­கள்’ குறித்து மிகத் தெளி­வான பகுத்­த­றி­வுப் பூர்­வ­மான கருத்­துக்­க­ளைத் தெரி­வித்­துள்­ளார். ‘’நூல­கங்­க­ளுக்­குச் சென்று புத்­த­கங்­களை வாசிக்­கும் வாச­கர்­கள் எதை­யும் அப்­ப­டியே நம்­பா­மல், தங்­க­ளின் சுய சிந்­தனை மற்­றும் விமர்­ச­னப் பார்­வை­யோடு (Critical thinking) ஆராய்ந்து படிக்க வேண்­டும்” எனப் பெரி­யார் விரும்­பி­னார். பெரி­யா­ரின் இந்­தச் சிந்­த­னை­ க­ளைப் போற்­றும் வகை­யி­லும், அவ­ரது அறி­வி­யல் மற்­றும் பகுத்­த­றி­வுப் பார்வை அடுத்த தலை­மு­றைக்­குக் கொண்டு சேர்க்­கும் வகை­யி­லும், தற்­கா­லத்­தில் பெரி­யார் அறி­வு­ல­கம் போன்ற நவீன நூல­கங்­க­ளும், பெரி­யா­ரின் பகுத்­த­றிவு மின்­னணு நூல­கங்­க­ளும் உரு­வாக்­கப்­பட்டு செயல்­பட்டு வரு­கின்­றன. அவற்­றில் தி.மு.க. தலை­வர் தள­பதி ஸ்டாலி­னுக்கு முழு பங்­க­ளிப்­பும், காலச் செல­வும் உண்டு என்­பது தான் இந்­தப் ‘பெரி­யார் அறி­வு­ல­கம்’ எனும் நூல­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அறி­வி­யல் மற்­றும் சமூக சீர்­தி­ருத்த நூல்­களை வாசிப்­பது முக்­கி­யம். சீர்­தி­ருத்த நூல்­கள் என்­றால் அவற்றை வாங்கி வீட்­டில் அடுக்­கிப் பூட்டி வைத்­துக் கொள்­ளக் கூடாது; நாம் வாங்­கிப் படித்­த­தும், அத­னைப் பிற­ருக்­குப் படிக்­கும்­படி கொடுத்து விட வேண்­டும்; புத்­த­கங்­கள் வீட்­டில் முடங்­கிக் கிடக்­கா­மல் மக்­க­ளி­டையே சுற்­றிக்­கொண்டே இருக்க வேண்­டும்!”“”என்­பது அவ­ரது எண்­ணம். கரண்டி பிடிக்­கிற பெண்­கள் கையில், புத்­த­கங்­கள் கொடுத்­தால் போதும்; அவர்­க­ளின் கல்வி, வாசிப்­பும் சமூக விடு­த­லைக்கு அவர் கொடுத்த முக்­கி­யத்­து­வத்­தைக் கூறும். ‘மனத் தடை­களை நீக்­கும் அறி­வுத்­தொட்டி’ என்­றார் பெரி­யார்.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">புத்­த­கங்­க­ளைச் சேமித்து வைக்­கும் இடங்­களோ கிடங்­கு­கள் அல்ல;  அவை மனித இனத்தை மேம்­ப­டுத்­த­வும், மக்­க­ளின் மன­தில் இருக்­கும் அறி­யா­மை­யை­யும், மூட­நம்­பிக்கை போன்ற தடை­க­ளை­யும் நீக்­க­வும் பயன்­ப­டும் அறி­வுத் தொட்­டி­க­ளாக விளங்க வேண்­டும்”“” என்று பெரி­யார் வாசிப்­புச் சிறப்­பு­கள் பற்­றிக் கூறி­னார். அந்த வகை­யில் இன்று கோவை­யில் பெரி­யார் அறி­வு­ல­கம் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளால் உரு­வாக்­கப்­பட்டு இருக்­கி­றது. திரா­வி­டர் கழக தலை­வர் ஆசி­ரி­யர் அய்யா கி. வீர­மணி அவர்­கள் மிக­வும் ஆழ்ந்த மன உருக்­கத்­தோடு மு.க.ஸ்டாலின் அவர்­கள் எடுத்­துக் கொண்ட அய­ராத பெரு முயற்சி, பெருமை, அருமை, சாத­னை­க­ளைச் சுட்­டிக் காட்­டிப் பேசி உள்­ளார்* .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">மனித இனம் தன்­னு­டைய சிந்­த­னை­க­ளைத்- தான் சேர்த்த அறி­வுச் செல்­வத்­தைப் பிற­ருக்­கும், அடுத்­த­டுத்த தலை­மு­றை­க­ளுக்­கும் கொண்டு சேர்க்­கும் கருவி தான் புத்­த­கங்­கள்!. எனவே தமிழ்­நாட்­டில் இருக்­கின்ற ஒவ்­வொரு வீட்­டி­லும் வாசிப்பு மூலம் அறி­வுத்தீ பர­வட்­டும்”“” என்று மு.க.ஸ்டாலின் அவர்­கள் ஏற்­க­னவே அறை­கூ­வல் விடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">பெரி­யார் உரு­வாக்­கிய திரா­விட இயக்­கத்­தின் ஆணி வேராக - அண்­ணா­வின் தம்­பி­யாக - கலை­ஞ­ரின் வழித்­தோன்­ற­லாக -  கோவை­யில் ‘பெரி­யார் அறி­வு­ல­கம்’ கட்டி முடித்து மாண­வர் மற்­றும் கல்­வி­யா­ளர்­க­ளுக்கு  பயன்­பட செய்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இந்­தி­யா­வின் பதிப்­ப­கத் தலை­ந­க­ர­மா­கச் சென்னை உயர்ந்­தி­ருக்­கி­றது. முன்­னணி அறி­வுச் சமூ­க­மாக நமது தமிழ்­நாடு சமூ­கம் இருக்­கக் கார­ணம், தமிழ் மக்­கள் என்­றும் வாசிப்­பைக் கைவி­டா­மல் இருப்­பது தான்!”“” என்று உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் சென்­னைப் புத்­த­கக் காட்சி விழா­வில் தனது சிறப்­பு­ரை­யில் பதிவு செய்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">வீட்­டிற்­கோர் புத்­த­கச்­சாலை வேண்­டும் என்று அண்ணா அடிக்­கடி பங்­கேற்­கும்   நிகழ்ச்­சி­க­ளில்  சுட்­டிக் காட்­டிப் பேசி வந்­தார்­கள்.” நம் வீட்­டிலே சமை­ய­லறை,  படுக்கை அறை, குளி­ய­லறை, கழிப்­பறை என்­பன இருப்­பது போல, ஒவ்­வொ­ரு­வர் வீட்­டி­லும் படிக்­கின்ற புத்­த­கங்­கள் நிரம்­பிய நூல­கம் இருப்­பது அவ­சி­யம்” என்று அண்ணா அவர்­கள் சொன்­னார்­கள்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">உலக அறிவை உருப்­ப­டி­யான காரி­யத்­திற்­குப் பயன்­ப­டும் வகை­யில், அறிவை தரக்­கூ­டிய புத்­த­கங்­க­ளைச் சேக­ரிக்க வேண்­டும்; பழைய முறை­க­ளை­யும், மூட நம்­பிக்கை எண்­ணங்­க­ளை­யும், கேடு பயப்­பன நூல்­க­ளைத் தவிர்க்­கப்­பட வேண்­டும்; பூகோள சரித்­திர ஏடு­கள் நமக்கு உண்மை உல­கைக் காட்ட, நமக்கு ஒழுக்­கத்தை வாழ்­வுக்­கான வழி­க­ளைக் காட்ட வீட்­டிற்­கோர் திருக்­கு­றள் நூல் கட்­டா­ய­மாக இருக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தமி­ழ­கத்­தின் தனிச்­சி­றப்பு கூறும் சங்க இலக்­கிய சாரத்­தைத் தரும் நூல்­கள் மக்­கள், முன்­னேற்­றத்­திற் ­கும், வாழ்க்கை வச­திக்­கும் உத­வும் விஞ்­ஞா­னக் கண்­டு­பி­டிப்பு தக­வல் தெரி­விக்­கும் நூல்­கள், நாட்டு விடு­த­லைக்கு உழைத்­த­வர்­கள், மக்­கள் மாசு துடைத்­த­வர்­ கள், தொலைத் தேசங்­க­ளைத் கண்­ட­வர்­கள், வீரர்­கள், விவே­கி­கள், சாதனை படைத்த மனி­தர்­கள் ஆகி­யோ­ரின் வாழ்க்கை குறிப்­பு­கள் இருக்க வேண்­டும். இப்­ப­டிப்­பட்ட வீட்­டிற்­கோர் புத்­த­கச் சாலை அமைத்­துக் கொண்­டால், நாட்­டுக்கு நல்ல நிலை ஏற்­ப­டும். வீட்­டிற்கு ஒரு புத்­த­க­சாலை தேவை; ஆனால், கேட்­டினை நீக்­கி­டத் தக்க முறை­க­ளைத் தரும் ஏடு­கள் கொண்­ட­தாக இருக்க வேண்­டும்! வீட்­டிலே அமைக்­கும் புத்­தக சாலை­யா­னது மாந்­தர்க்கு வாழ்­வில் விடு­தலை ஏற்­ப­டுத்த வேண்­டி­ய­தாக அமைய வேண்­டும்!“ என்று அண்ணா அவர்­கள் நூல­கத்­தின் அருமை பெரு­மை­களை வரைந்­து­காட்­டிப் பேசி உள்­ளார் .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இதனை எடுத்­துக்­காட்­டும் விதத்­தில் தமிழ்­நாட்­டில் இருக்­கின்ற ஒவ்­வொரு வீட்­டி­லும் வாசிப்­பும் மூலம் அறி­வுத்தீ பர­வட்­டும் என்று மு.க.ஸ்டாலின் அவர்­கள் விளக்­கிக் காட்­டிப் பேசி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">கலை­ஞர் முத­ல­மைச்­ச­ரா­க­வும், தள­பதி மு.க. ஸ்டாலின் துணை முதல்­வ­ரா­க­வும் இருந்த போது, (2006–-2011) தமி­ழ­கத்­தில் 12,618 ஊராட்­சி­க­ளில்அனைத்­துக் கிராம அண்ணா மறு­ம­லர்ச்­சித் திட்­டம் பேராலே நூல­கங்­கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. அதற்­கான புதிய கட்­ட­டங்­கள் கட்டி  ஒவ்­வொரு நூல­கத்­தி­லும் ரூபாய் 50 ஆயி­ரம் மதிப்­புள்ள புத்­த­கங்­கள், சிறு­வர், இளை­ஞர்­க­ளுக்­கான நூல்­கள் இடம் பெற்­றன. தள­பதி மு.க.ஸ்டாலின் அவர்­க­ளின் தலை­மை­யி­லான தி.மு.க.  ஆட்­சி­யில் 2021 இல் அந் நூல­கக் கட்­டி­டங்­கள் யாவும் புன­ர­மைக்­கப்­பட்டு நிறைய நூல்­கள் இடம் பெறத் தக்க வகை­யில்  தொடர்ந்து செயல்­பட்டு வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இத்­தாலி நாட்­டில் லுனி­சி­யானா மலைப் பகு­தி­யில், ‘மவுண்ட் ரெஜியோ” என்ற  பசுமை நிறைந்த சிறிய மலைக் கிரா­மம் உள்­ளது. இது­தான் புத்­த­கங்­க­ளின் அருமை பெரு­மை­களை உல­கிற்கு முதன்­மு­த­லாக உணர்த்­திக் கொண்­டி­ருக்­கிற ஊரா­கும்.. இந்த கிரா­மத் ­தில் இருந்து புறப்­பட்ட சபாஷ்­டீ­யானோ என்ற இளை­ஞன் 15 ஆம் நூற்­றாண்­டில்  வட இத்­தா­லி­யில் ஒரு முக்­கிய நக­ரில் மிலான் நக­ருக்­குச் சென்று அச்­சுக்­க­லை­ யைக் கற்று, பின்பு இவர் தொடங்­கிய புத்­தக வியா­பா­ரம்­தான் இன்­றைக்கு இத்­தா­லி­யைத் தாண்டி  ஜெர்­மனி, ரஷ்யா, பிரான்ஸ், இங்­கி­லாந்து போன்ற நாடு­க­ளில் புத்­த­கச் சந்­தை­கள் தொடங்கி இருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ஒருங்­கி­ணைந்த இத்­தா­லி­யாக உரு­வாக்க சுதந்­தி­ரப் போராட்­டம் நடத்­தி­டக் கார­ணம். இந்­தப் புத்­தக வியா­பா­ரி­கள் கொண்டு சேர்த்த கருத்­துப் பெட்­ட­கங்­கள் தான்! இன்­றும் அங்­குள்ள தெருக்­க­ளில் ஆண்­டு­தோ­றும் ஆகஸ்ட் மாதம் புத்­த­கத் திரு­விழா நடக்­கி­றது. உல­கம் முழு­வ­தும் வாச­கர்­களை இங்­குக் கொண்டு வந்து சேர்க்­கி­றது. 1952 முதல்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">பிரே­மியோ பான்­சு­ரெல்லா”” எனும் விரு­தா­னது இந்த ஊரின் இலக்­கி­யப் பெரு­மை­களை உல­கிற்கு எடுத்­துச் சொல்­லு­கி­றது. சுற்­று­லாப் பய­ணி­கள் அனை­வ­ரை­யும் இங்கு ஈர்த்­துப் புத்­த­கம் வாங்­கக்­கூ­டிய சூழ்­நிலை உரு­வாக்கி வரு­கி­றது. இன்­றைக்கு அதே போன்ற ஓர் அரிய, பெரிய சூழ்­நி­லை­யைத் தமிழ்­நாடு முன்­னாள் முதல்­வர் மு.க. ஸ்டாலின் அவர்­கள் ஏற்­ப­டுத்­திக் காட்­டி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ஒரு நூல­கம் திறக்­கப்­ப­டும் போது 100 சிறைச் ­சா­லை­கள் மூடப்­ப­டு­கின்­றன”“” (when a library opens Hundred prisons close) என்­றார் புகழ்­பெற்ற பிரஞ்சு எழுத்­தா­ளர் விக்­டர் ஹியுகோ (Victor Hugo) என்ற ஓர் அறி­ஞன். இதன்­மூ­லம் கல்வி அறிவு, பொருள் அறிவு பரப்­பு­வ­தால் குற்­றங்­கள். குறை­கின் ­றன. நூல­கங்­கள் மக்­கள் அறி­வைப் பெருக்­கி­டும் வழி­காட்­டு­த­லா­க­வும், மேம்­பாடு தரக்­கூ­டி­ய­வை­யா­க­வும் அமை­கின்­றன. நூல­கங்­கள் அறி­வுத் தேடலை நிறைவு செய்­கின்­றன. வாசிப்­பும், வாசிப்­பின் வழியே உரு­வா­கிற எண்­ணங்­க­ளை­யும் நம்மை சிறப்­பான மேம்­பாட்­டிற்கு அழைத்­துச் செல்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ஐரோப்­பிய நாட்­டின் மாவீ­ரன் நெப்­போ­லி­யன் தன் படை­வீ­ரர்­க­ளுக்கு மத்­தி­யில் உரை­யாற்­றும்­போது,</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">எதி­ரி­க­ளைப் பந்­தா­டுங்­கள்! சொத்­துக்­க­ளைச் சூறை­யா­டுங்­கள்! ஆனால் ஒரு­போ­தும், எகிப்த்­தில் உள்ள ‘அலெக்­ஸாண்ட்­ரியா’ என்ற நூல­கத்­தின் பெரு­மை­க­ளைச் சிதைத்து விடா­தீர்­கள்!”“” என்று கட்­ட­ளை­யிட்­டான். இதற்கு மாறாக, ஈழத்­தில் தமி­ழர்­க­ளால் உயிர்க் கரு­வூல ஓவி­ய­மாக  அமைக்­கப்­பட்­டி­ருந்த யாழ்ப்­பாண நூல­கத்­தில் 97 ஆயி­ரம் நூல்­கள் தீக்கு இரை­யாக்­கப்­பட்­டன. ஒரு மொழி­யின் முக்­கி­யத்­து­வம் அதன் இனத்­தின் அடை­யா­ள­மாக, இருக்­கி­றது. பண்­பாட்­டின் வளர்ச்­சி­யாக, கலாச்­சா­ரத்­தின் தொட்­டி­லா­கப் பாது­காக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ஓர் இனத்தை அழிக்க வேண்­டும் என்­றால்,அதன் மொழியை அழித்­து­விடு“”” என்று சோவி­யத் யூனி­ய­னில் மொழிக் கொள்கை பற்றி விவா­தம் வந்­த­போது,  சோவி­யத் கல்­வி­யா­ள­ரும் சமூ­கச் சேவ­க­ரு­மான ஆண்­டன் மெக்­க­ரன்கோ (Anton Makarenko) போன்ற அறி­ஞர்­க­ளால் சொல்­லப்­பட்­டது . எனவே,  நூல­கங்­கள்  இன வழித் தோன்­ற­லுக்கு வழி­கோலி மனித வளர்ச்­சிக்கு பெரி­தும் பங்­காற்றி வரு­கின்­றன .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">உல­கத் தலை­வர்­கள் எல்­லா­ரும் புத்­த­கம் படிப்­ப­தன் மூலம் நூல்­க­ளின் பெரு­மை­க­ளை­யும், நூல­கத்­தின் சிறப்­பு­க­ளை­யும் அறி­வ­தோடு, ஒவ்­வொ­ரு­வ­ரும்  நூல் நிலை­யங்­கள் அமைத்­துக் கொள்ள  வேண்­டும் என்று குறிப்­பிட்­டுள்­ள­னர். புத்­த­கம் வாசிப்­ப­தில் அதிக அக்­கறை கொண்­ட­வர் பேர­றி­ஞர் அண்ணா. அவ­ரின் பேனா­வை­யும், செந்­நா­வை­யும் பேசாத உலக நாடு­க­ளில்லை. பல்­வேறு நூல­கங்­கள் சென்று வரு­வ­து­போல், அவ­ரது வரு­கையை அடிக்­கடி சென்னை கன்­னி­மேரா நூல­க­மும்  பதிவு செய்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அண்­ணா­வைப் போல அவ­ரின் தம்பி கலை­ஞ­ரும் வெறும் வாச­கர் மட்­டு­மல்ல; படைப்­பா­ளர் கூட! அவர்­கள் இரு­வ­ரும் தீட்­டிய எழுத்து ஓவி­யங்­க­ளைப் படித்­துப் பல, பல மாண­வர்­கள் பல்­வேறு பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளில் எம்.பில்; பி.ஹெச்.டி,வாங்­கி­ய­கள் நூற்­றுக்கு மேற்­பட்­ட­வர்­கள் ஆவார்­கள் . அண்­ணா­வை­யும், கலை­ஞ­ரை­யும் நூல்­கள்இல்­லாத துணை­யைப் பார்க்க முடி­யாது. வெளி­யூர் செல்­லக் கார், இர­யில் போன்ற பய­ணங்­கள் மேற்­கொள்­ளும் போதும் அவர்­க­ளு­டன் ஏறிச் செல்­லு­வது நூல்­கள் தாம். போராட்­டங்­க­ளில் கலந்து கொண்டு  சிறைச்­சா­லைக்­குள் சென்ற போதும், வெளி­யில் இருந்து நூல்­கள் கொண்டு கொடுக்­கப்­ப­டும். அதைப் போல் சிறைச்­சா­லை­யில் உள்ள நூல­கங்­க­ளும் அவர்­க­ளது கை விரல்­க­ளும், மனச் சிற­கு­க­ளும் விரிக்­காத ஏடு­கள் ஏதும் இல்லை. அத­னால், பலப் பலக் கட்­டு­ரை­கள், கவி­தை­கள், நாட­கங்­கள், திரைக் கதை­கள், கடி­தங்­கள், அர­சி­யல் விமர்­ச­னங்­கள் எனப் பல்­வேறு வடி­வங்­கள் பெற்று அவர்­கள் இரு­வ­ரால் உரு­வாக்­கப்­பட்டு இருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அண்­ணா­வின் நாடக எழுத்­தோ­வி­யத்­தைக் கண்டு வியந்து விளித்த கல்கி கிருஷ்­ண­மூர்த்தி போன்­றோ­ரால் இங்­கர்­சால், இப்­சன், பெர்­னாட்ஷா என்­றெல்­லாம் பாராட்­டிப் பேசி­யது உண்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சென்னை கிண்டி கோட்­டூர்­பு­ரத்­தில் அண்ணா  நூற்றாண்டு நூல­கம் எனக் கலை­ஞர் பெயர் வைத்­தார். அதைப்­போல, கோவை­யில் பெரி­யார் நூல­கம் என்­றும், மது­ரை­யில் கலை­ஞர் நூல­கம் என்­றும், திருச்­சி­யில் பெருந்­த­லை­வர்  காம­ரா­ஜர் நூல­கம் என்­றும் நெல்­லை­யில் காயிதே மில்­லத் நூல­கம் என பல நூல­கங்­களை மு.க.ஸ்டாலின் அவர்­கள் உரு­வாக்கி நூல­கங்­க­ளின் பெரு­மை­யைப் பேச வைத்­துள்­ளார். அத­னால் பல்­லா­யி­ரக்­க­ணக்­கில்மருத்­து­வம், பொறி­யி­யல், சட்­டம், விஞ்­ஞா­னம், பொரு­ளி­யல், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்­வு­க­ளில் கலந்து கொள்­ப­வர்­க­ளாக  பயிற்சி பெற்று உரு­வாக்­கப்­பட்டு வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தி.மு.க. தலை­வர் கலை­ஞர் அண்ணா அறி­வா­ல­யத்­தில்  ‘பேரா­சி­ரி­யர் அன்­ப­ழ­க­னார் ஆய்­வக  நூல்­நி­லை­யம் ‘ என்று உரு­வாக்கி வைத்­துள்­ள­தால், பல்­வேறு பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள், ஆய்­வா­ளர்­கள் என உரு­வாகி வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சென்னை பெரி­யார் திட­லில், பெரி­யார்  96- ஆவது பிறந்த நாளான 1974 செப்­டம்­பர் 17-இல் முதல்­வர் கலை­ஞ­ரால் திறந்து வைக்­கப்­பட்ட ‘பெரி­யார் பகுத்­த­றிவு டிஜிட்­டல் நூல­கம் மற்­றும் ஆய்வு மையம்’ இயங்கி வரு­கி­றது. இங்கு ஏறத்­தாழ 1,00,000த்திற்­கும் மேற்­பட்ட புத்­த­கங் ­கள், பெரி­யார் சொற்­பொ­ழி­வு­கள், எழுத்­து­கள், பகுத்­த­றிவு நூல்­கள், சுமார் 100 ஆண்­டு­க­ளுக்­கும் மேற்­பட்ட வர­லாற்று நூல்­கள் பல இடம் பெற்­றி­ருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">கம்­யூ­னிஸ்ட்­டின் தந்தை காரல் மார்க்ஸ் ‘டாஸ் கேப்­பிட்­டல்’ (Das Kapital) எனும் மூல­தன நூலை எழு­து­வ­தற்­குக் கார­ண­மாக அமைந்­தது பிரிட்­டிஷ் அருங்­காட்­சி­யம் நூல­கம் (British museum Reading Room ) தான். காரல் மார்க்­ஸைப் பற்றி அவ­ரின் நண்­பர் பிர­டெ­ரிக் ஏங்­கல்ஸ் 1883 மார்ச் 14 இல் அறிக்கை வெளி­யிட்டு, மார்க்­ஸின் அடக்­கத்­தின் போது அவர் ஆற்­றிய உரை­யில், “மனித குலத்­தின் பெரிய சிந்­த­னை­யா­ளர் சிந்­திப்­பதை இன்று நிறுத்­திக் கொண்­டார்” என்று சிறப்­பு­டன் கூறி­யி­ருந்­தார்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அர­சி­யல் அமைப்­புச் சட்­டத்தை உரு­வாக்­கி­ய­வ­ரும், நான் ஒரு இந்­து­வா­கச் சாக மாட்­டேன் என்று உறு­தி­மொழி எடுத்­த­வ­ரு­மான புரட்­சி­யா­ளர் டாக்­டர் அம்­பேத்­கார், இள­மைக் காலத்­தில் அமெ­ரிக்கா சென்று படித்­துத் திரும்­பிய நேரத்­தில் 1917 ஜூலை-20 இல் தான் வாங்­கிப் படித்த சுமார் 20,000 மேற்­பட்ட  நூல்­க­ளும்,  மற்­றும் ஆய்­வுக் கட்­டு­ரை­க­ளும் இந்­தி­யா­வுக்­குக் கப்­ப­லில் அனுப்பி வைத்­தி­ருந்­தார். ஆனால் நூல்­களை ஏற்றி வந்த கப்­பல் போர் விபத்­தில் சிக்கி, கட­லில் மூழ்கி போனது. வருத்­தப்­பட்­டார் எனி­னும் அதன் பின்­னர் தனது</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இராஜ்­கி­ரக”“” (Rajgriha) நூல­கத்­தில் 69,000  நூல்­கள் சேர்த்து வைத்து ஒரு தனி நபரே படித்து வந்த பெருமை அவ­ரைச்  சாரும். அவர் மறை­வுக்­குப் பின்பு சித்­தார்த்தா கல்­லூரி, டாக்­டர் பாபா சாகிப் அம்­பேத்­கர் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு அந்­நூல்­கள் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இன்­றைக்கு ஆயி­ரக்­க­ணக்­கான மாண­வர்­கள் அங்­குப் படித்­துச் சென்று கொண்­டி­ருக்­கி­றார்­கள் .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">என்­னைப் பார்க்க வரும் நண்­பர்­கள், கழ­கத் தோழர்­கள் யாவ­ரும்  ‘பூங்­கொத்து வேண்­டாம்; பொன்­னாடை வேண்­டாம்; மாலை, வேட்டி, துண்டு, சால்­வை­கள் எனப் போட வேண்­டாம்; புத்­த­கம் கொடுத்­தால் போதும்!“””  என்று முன்­னாள் முதல்­வர் மு.க. ஸ்டாலின் அவர்­கள் கூறி­னார். இன்று பல இலட்­சம் நூல்­கள் தன்­னைக் காண வரும் தோழர்­க­ளால் வழங்­கப்­பட்டு, அவை அனைத்­தும் தமிழ்­நாடு பள்­ளிக்­கூ­டங்­கள், கல்­லூ­ரி­கள், பல்­க­லைக்­க­ழ­கங்­கள் மற்­றும் வெளி­நா­டு­க­ளில் உள்ள கல்­லூ­ரி­க­ளில் உள்ள நூல் நிலை­யங்­கள், பல்­க­லைக் கழ­கங்­க­ளுக்­கும் அனுப்­பப்­பட்டு, வாசிக்­கப்­பட்டு வரு­கின்­றன . உலக வர­லாற்­றில்  இது­போல எந்த ஒரு தலை­வ­ரும், எந்த ஓர் இயக்­க­மும் இது­வரை செய்­யாத  நிலை­யில் தள­பதி மு.க ஸ்டாலின்  செய்து வரும் அறி­வுப் பணி­யா­னது மாபெ­ரும் சாத­னை­யா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ரஷ்ய எழுத்­தா­ளர் டால்ஸ்­டாய் ‘திருக்­கு­ற­ளைப் படி­யுங்­கள்; நூல­கங்­கள் செல்­லுங்­கள்’ என்று காந்­திக்கு அவ்­வப்­போது கடி­தத் தொடர்­பில் பதில் எழு­திக் கொண்­டி­ருந்­தார் .’என்­னைச் சந்­திக்க வரு­ப­வர்­கள், ஏதா­வது நான் படிக்­காத நல்ல நூல்­கள் கொடுத்­தால், அதை நான் பெரு­மை­யாக கரு­து­வேன்’ என்று சொன்­ன­வர் தான் மகாத்மா காந்தி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அதைப்­போல ஆங்­கி­லேய அரசை எதிர்த்து இந்­திய பாரா­ளு­மன்­றக் படிக்­கட்­டில் வெடி குண்டு வீசிய  விடு­தலை வீரன் பகத்­சிங் சிறைக் கொட்­ட­டிக்­குள் அடைக்­கப் பெற்று விசா­ர­ணை­யின் போது தூக்­குத் தண்­டனை உறுதி செய்­யப்­பட்­டது.  அவ­னுக்­கான தூக்கு போடும் நேரம் நெருங்­கி­யது. அதனை நினை­வுப்­ப­டுத்த வந்த சிறை அதி­காரி “உங்­க­ளுக்­கான நேரம் வந்­து­விட்­டது; நீங்­கள் தயா­ரா­குங்­கள்” என்று சொன்­னான். ஆனால், பகத்­சிங்கோ நான் முக்­கி­ய­மான நூல் ஒன்­றைப் படித்­துக் கொண்­டி­ருக்­கி­றேன். அதில் சில பக்­கங்­கள் மட்­டுமே இருக்­கின்­றன. அவற்­றைப் படித்து விட்டு வரு­கி­றேன்; எனக்கு அதற்­கான நேரம் ஒதுக்­கித் தாருங்­கள்” என்று கேட்­டான் பகத்­சிங். தான் சற்று நேரத்­தில் தூக்­குக் கயிற்றை முத்­த­மிட்­டுத் தொங்­கப் போகி­றோம் எனத் தெரிந்­தும் படிக்­கிற தாகத்தை விட்­டா­னில்லை அந்த மாவீ­ரன் பகத்­சிங்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11"> லெனின் எழு­திய “அர­சும், புரட்­சி­யும்” (State and Revolution ) அல்­லது ‘லெனின் நினை­வு­கள் ‘(Reminiscences of  Lenin) எனும் நூலைத்­தான் பகத்­சிங் படித்­துக் கொண்­டி­ருந்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">முதன் முத­லில் 1578 ல் இந்­தி­யா­வில் அச்­சி­டப்­பட்டு வெளி­யி­டப்­பட்ட (Doctorina Christm) எனும் நூல் தமி­ழில் வெளி­வந்­த­தா­கும் இப்­போது இந்த புத்­த­கம் இந்­தி­யா­வில் இல்லை. இது அமெ­ரிக்க ஹார்­வாட் பல்­க­லைக்­க­ழக கல்­லூ­ரி­யில் மட்­டுமே உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">நமது தாய் மொழி­யான  தமிழ் மொழி­தான் உல­கில் தோன்­றிய மூத்த மொழி! - முதல் மொழி! இந்த மொழி­யில் இடம் பெற்ற நூல்­க­ளில் அரிய கருத்­துக்­கள், இலக்­கி­யங்­கள், பண்­பாடு, கலாச்­சா­ரத்­தைக் கூறும் வர­லாற்று நூல்­கள் இவை அனைத்­தும் ஆவ­ணங்­க­ளாக  உல­கத்­திற்­குக் கொண்டு செல்ல வேண்­டும். இதற்­கான ஆளு­மை­யை­த­தான் நம் கழ­கத்­த­லை­வர்   மு.க. ஸ்டாலின் வெளி­யிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">காந்தி அடி­கள், தில­கர், நேரு, இரா­ஜாஜி, வ.உ.சி, பேர­றி­ஞர் அண்ணா, முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் முத­லா­னோர் சிறை­யில் இருந்­த­வாறு பல்­வேறு புத்­த­கங்­களை எழு­திப் பெரு­மைப்­ப­டுத்­தி­யுள்­ள­னர். அவர்­கள் உல­குக்கு நூல்­கள் மூலம் கருத்­து­க­ளாக விருந்­த­ளித் 
­துள்­ள­னர் .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">புகழ்­பெற்ற ஃபிரான்சு கவி­ஞ­ரும், பத்­தி­ரிக்­கை­யா­ள­ரும், நாவ­ல­ரி­சி­ரி­ய­ரு­மா­ன­வர் அறி­ஞர் அனல் டோல் பிரான்ஸ். 1921 இல்  இலக்­கி­யத்­திற்­கான  நோபல் பரிசு பெற்­ற­வர். இவர் சிறந்த நூல­கர் என்­ப­தால் பல்­வேறு நூல்­கள், புத்­த­கங்­க­ளைப் பற்றி விமர்­ச­னம் செய்­த­வர்.  இவ­ரது படைப்­பு­கள் சில தமிழ் மொழி­பெ­யர்ப்பு செய்­யப்­பட்­டுள்­ளன. ‘தாசி­யும், தப­சி­யும்’ என்ற நாவல் பிர­ப­ல­மா­னது.  “புத்­த­கங்­களை இர­வ­லாக யாருக்­கும் கொடுக்­கா­தீர்­கள்; யாரும் திருப்­பித் தரு­வ­தில்லை. என்­னி­டம் உள்ள புத்­த­கங்­கள் யாவும் பிற­ரி­டம் இருந்து இர­வல் பெற்­றவை” என அவர் கூறி­யுள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>