<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="10/11/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,66,958,916" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Nov 09 2026 21:44:53 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261110T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="10112026-CBE-06" position.sequence="06" ex-ref="10112026-CBE-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup986365_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup986961_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="16.5">ப</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ல்­க­லைக்­க­ழ­கத் துணை­வேந்­தர் நிய­ம­னங்­க­ளுக்­கா­னப் பெயர்­க­ளைப் பரிந்­துரை செய்­யும் குழு­வில் மாநில அர­சின் உரி­மை­களை விட்­டுக் கொடுக்­கக்­கூ­டாது என்­ப­தில் திரா­விட மாடல் அரசு உறு­தி­யாக இருந்­தது. ஒன்­றிய அர­சின் நிலைப்­பாடோ, தேர்­வுக் குழு­வில் தன் தரப்­பின் கை ஓங்­கி­யி­ருக்க வேண்­டும் என்­ப­தும், தன்­னால் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­கின்­ற­வர்­க­ளையே துணை­வேந்­த­ராக நிய­மிக்க வேண்­டும் என்­ப­தும்­தான். அதை ஆளு­நர் மூல­மாக செயல்­ப­டுத்­து­வ­தற்கு முனைப்­பாக 
இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">துணை­வேந்­த­ருக்­கா­னப் பெயர்­க­ளைப் பரிந்­துரை செய்­யும் குழு­வில் பல்­க­லைக்­க­ழக மானி­யக் குழு­வின் (யு.ஜி.சி) உறுப்­பி­னர் இடம்­பெற வேண்­டும் என்று ஆளு­நர் மூலம் தரப்­பட்ட அழுத்­தத்தை திரா­விட மாடல் அரசு ஏற்­க­வில்லை. யு.ஜி.சி. பிர­தி­நி­தி­யைச் சேர்ப்­ப­தற்கு ஒப்­புக்­கொண்­டால், மாநில அர­சின் பிர­தி­நி­தித்­து­வம் பல­வீ­ன­ம­டை­யும். எண்­ணிக்­கை­யில் ஒன்­றிய அர­சின் சார்­பில் உள்­ள­வர்­களே அதி­க­ள­வில் இருப்­பார்­கள். அவர்­களே துணை­வேந்­தர் யார் என்­பதை முடிவு செய்­வார்­கள். மாநி­லங்­க­ளில் உள்ள பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளில் மாநில அரசு வேடிக்­கைப் பார்க்­கும் நிலை­மை­யில் இருக்­கக்­கூ­டாது என்ற உறு­தி­யு­டன் இருந்­தது திரா­விட மாடல் அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டில் ஆட்சி மாற்­றம் ஏற்­பட்ட நிலை­யில், துணை­வேந்­த­ரைப் பரிந்­து­ரைக்­கும் குழு­வில் யு.ஜி.சி. உறுப்­பி­னரை சேர்ப்­ப­தற்கு த.வெ.க அரசு சம்­ம­தித்­தது. இதன் மூலம் தமிழ்­நாடு அர­சின் பிரதி­ நிதித்து ­வத்­தை­விட ஆளு­ந­ரின் பிர­தி­நி­தித்­து­வம் வலிமை பெற வழி வகுத்­தது. தமிழ்­நாட்­டின் உரி­மை­யைத் தாரை வார்த்­தது. தேசிய கல்­விக் கொள்­கையை செயல்­ப­டுத்­தும் சி.பி.எஸ்.இ. பள்­ளி­க­ளுக்­கா­னத் தாரா­ள­மான அனு­மதி, உயர்­கல்­வியை முழு­மை­யா­கத் தனி­யார் மய­மாக்­கும் வகை­ யிலான நிகர்­நி­லைப் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளான நில அள­வுக் குறைப்பு உள்­ளிட்ட பல நட­வ­டிக்­கை­க­ளை­யும் ஒன்­றிய அர­சின் விருப்­பப்­ப­டியே நிறை­வேற்றி வரு­கி­றது விஜய் அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">மாநில உரி­மை­க­ளைப் போரா­டிப் பெறு­வ­தில் இந்­தி­யா­வுக்கே முன்­னோ­டி­யான மாநி­லம் தமிழ்­நாடு. சுதந்­திர தினத்­தில் முத­ல­மைச்­சர் விஜய், செயின்ட்­ஜார்ஜ் கோட்டை­ யில் கொடி­யேற்­றி­விட்டு, யாரையோ பார்த்து சல்­யூட் அடித்து, பதில் சல்­யூட் பெற்­றாரே, அந்த தேசி­யக் கொடியை ஏற்­றும் உரி­மை­யைப் பெற்­றுத் தந்­த­வர் முத்­தமி­ ழறி­ஞர் கலை­ஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆளு­நர்­களே குடி­ய­ரசு தினத்­தி­லும் சுதந்­திர தினத்­தி­லும் கொடி­யேற்றி வந்த நிலை­யில், ஒன்­றிய அர­சில் குடி­ய­ரசு தினத்­தில் குடி­ய­ரத்­த­லை­வ­ரும்-­­சு­தந்­திர தினத்­தில் பிர­த­ம­ரும் கொடி­யேற்­று­வது போல, மாநி­லங்­க­ளி­லும் சுதந்­திர தினத்­தில் முதல்­வர்­கள் கொடி­யேற்­றும் உரி­மையை பிர­த­மர் இந்­தி­ரா­காந்­தி­யி­டம் வலி­யு­றுத்­திப் பெற்­றுத் தந்­த­வர் கலை­ஞர். அத­னால்­தான்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">விஜய் மட்­டு­மல்ல, இதற்கு முன் தமிழ்­நாட்­டில் இருந்த முத­ல­மைச்­சர்­க­ளும், இந்­தி­யா­வின் அனைத்து மாநிங்­க­ளி­லும் உள்ள முத­ல­மைச்­சர்­க­ளும், குஜ­ராத்­தில் முத­ல­மைச்ச­ ராக இருந்த இன்­றைய பிர­த­மர் மோடி­யு­மே­கூட அவ­ர­வர் மாநி­லங்­க­ளில் சுதந்­திர தினத்­தில் தேசி­யக் கொடியை ஏற்ற முடிந்­தது. தமிழ்­நாட்­டிற்­கெ­னத் தனிக் கொடி­யை­யும் வடி­வ­மைத்து பிர­த­மர் இந்­தி­ரா­காந்­தி­யி­டம் வழங்­கி­ய­வர் கலை­ஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மாநில சுயாட்சி என்­பது பேர­றி­ஞர் அண்ணா காலத்­தில் தொடங்கி இன்­றைய கழ­கத் தலை­வர் வரை தி.மு.க. முன்­னெ­டுத்து வரும் தொடர் முயற்­சி­யா­கும். 1969ஆம் ஆண்டே நீதி­பதி ராஜ­மன்­னார் தலை­மை­யி­லா­னக் குழுவை அமைத்து மாநில சுயாட்சி க்கான முன்­னெ­டுப்­பைக் கலை­ஞர் மேற்­கொண்­டார். 1974ல் தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தில் வர­லாற்று சிறப்­பு­மிக்க  மாநில சுயாட்­சித் தீர்­மா­னத்தை நிறை­வேற்­றி­ய­வ­ரும் கலை­ஞர்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தி.மு.க மீண்­டும் பிரி­வி­னைக் கொள்­கை­யைக் கையில் எடுக்­கி­றதா எனக் கேட்­ட­வர்­க­ளுக்கு கலை­ஞர் சொன்ன பதில், “பிரி­வினை கேட்­க­வில்லை. இந்­திய துணைக் கண்­டத்­தில் இன்­னொரு பிரி­வி­னை­யைத் தடுப்­ப­தற்­கா­கத்­தான் மாநில சுயாட்­சி­யைக் கோரு
­­கி­றோம்”.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நாடா­ளு­மன்­றத்­தில் மாநில சுயாட்சி குறித்து பல முறை வலி­யு­றுத்­தி­ய­வர் முர­சொலி மாறன் எம்.பி. அவர்­கள். 1975ஆம் ஆண்டு இது குறித்து அவர் எழு­தி­ய­போது, “இன்று இம­யம் முதல் குமரி வரை அனைத்து பாமர மனி­த­ருக்­கும் தெரிந்­த­வர் பிர­த­மர் இந்­தி­ரா­காந்­தி­தான். இன்றே அர­சி­யல் சட்­டத்­தைத் திருத்தி, மாநி­லம் வாழ் மக்­க­ளுக்­குள்ள அவ­மா­னத்­தை­யும் அநீ­தி­யை­யும் போக்­கும் வகை­யில் அனை­வ­ரின் சுய­ம­ரி­யா­தை­யை­யும் மதிக்­கும் விதத்­தில் மாநில சுயாட்சி வழங்­குங்­கள். அப்­போ­து­தான் இந்­தியா காருள்ள அள­வும், கடல் நீருள்ள அள­வும் ஒரு அர­சி­யல் அமைப்­பாக இருக்­கும்” என்று அழுத்­த­மா­கக் குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தமிழ்­நாட்­டில் கலை­ஞர் தலை­மை­யி­லான தி.மு.க அர­சால் மாநில சுயாட்­சித் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்ட பிறகு, பல மாநி­லங்­க­ளும் தங்­கள் உரி­மைக்­கா­னக் குரல்­களை எழுப்­பின. ஜம்­மு-­­காஷ்­மீர் மாநி­லத்­தின் முத­ல­மைச்­ச­ராக இருந்த தேசிய மாநாட்­டுக் கட்­சி­யின் தலை­வர் ஃபரூக் அப்­ப­துல்லா அந்த மாநில சட்­ட­மன்­றத்­தில் மாநில சுயாட்சி தீர்­மா­னத்தை நிறை ­வேற்­றி­னார். மேற்கு வங்க முதல்­வ­ராக இருந்த மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் மூத்த தலை­வர் ஜோதி­பாசு, மாநில உரி­மை­களை வலி­யு­றுத்­தி­னார். கர்­நா­ட­கத்­தில் காங்­கி­ரஸ் கட்­சி­யின் முத­ல­மைச்­ச­ராக இருந்த சித்­த­ரா­மையா மாநில சுயாட்­சி­யின் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­தி­னார். வீரேந்­திரா பாட்­டீல் -­­என்.டி.ராம­ராவ் காலத்­தில் தொடங்கி, மம்தா பானர்ஜி வரை­யி­லான பல முத­ல­மைச்­சர்­கள் மாநி­லங்­க­ளின் அதி­கா­ரங்­க­ளும் உரி­மை­க­ளும் ஒன்­றிய அர­சி­டம் பறி­போய்­வி­டக்­கூ­டாது என்­ப­தைத் தொடர்ந்து வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்­ற­னர்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மாநில சுயாட்­சிக்­கான முதன்­மைக் குர­லா­க­வும்-­­வ­லி­மைக் குர­லா­க­வும் எப்­போ­தும் ஒலிப்­பது தி.மு.க.வின் குரல். அத­னால்­தான்,திரா­விட மாடல் ஆட்­சி­யில் 2025ஆம் ஆண்டு ஏப்­ரல் மாதத்­தில் ஒன்­றி­ய-­­மா­நில உற­வு­க­ளுக்­கான உயர்­நி­லைக் குழு அமைக்­கப்­பட்­டது. திரா­விட நாய­கர் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் இந்­தக் குழு­வின் தலை­வ­ராக ஓய்வு பெற்ற உச்­ச­நீ­தி­மன்ற நீதி­பதி குரி­யன் ஜோசப் அவர்­க­ளை­யும், உறுப்­பி­னர்­க­ளாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதி­காரி அசோக் வர­தன் ஷெட்டி, மாநில திட்­டக்­குழு முன்­னாள் துணைத்­த­லை­வர் பேரா­சி­ரி­யர் நாக­நா­தன் ஆகி­யோ­ரை­யும் நிய­மித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தற்­போ­தைய சூழ­லில் மாநி­லங்­க­ளுக்­குத் தேவை­யான அதி­கா­ரங்­கள் எவை, ஒன்­றிய அர­சி­ட­மி­ருந்து பெற­வேண்­டிய அதி­கா­ரங்­கள் எவை, நிதி சார்ந்த முடி­வு­கள், வளர்ச்­சித் திட்­டங்­கள் இவற்­றில் மாநில அர­சு­க­ளுக்கு இருக்­க­வேண்­டிய சுய­மான உரி­மை­கள் உள்­ளிட்ட பல­வும் குறித்து நீதி­பதி குரி­யன் ஜோசப் தலை­மை­யி­லான குழு  ஆராய்ந்து தனது முதல் கட்ட அறிக்­கையை 2026 பிப்­ர­வரி 16ந் தேதி வழங்­கி­யது. அடுத்­த­டுத்த கட்ட அறிக்­கை­க­ளுக்­கான ஆலோ­ச­னை­க­ளும் நடை­பெற்று வந்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">ஒன்­றிய பா.ஜ.க அர­சின் தலை­யாட்­டிப் பொம்­மை­யாக இருக்­கும் த.வெ.க தலை­வர் விஜய், திரா­விட மாடல் அரசு நிய­மித்த ஒன்­றி­ய-­­மா­நில உற­வு­க­ளுக்­கான உயர்­நி­லைக் குழு­வைக் கலைத்­து­விட்­டார். அது வழங்­கிய முதல் கட்ட அறிக்­கை­யை­யும் இணை­ய­த­ளத்­தி­லி­ருந்து எடுத்­து­விட்­டார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இது குறித்த த.வெ.க அர­சின் அர­சா­ணை­யில், இந்­தக் குழு தற்­சார்பு அமைப்­பாக இல்லை என்று கூறி, மாநில அர­சின் அதி­கா­ரங்­கள் குறித்துஇனி மாநில சட்­டக் கமி­ஷன் ஆரா­யும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மாநில சட்­டக் கமி­ஷனோ, தேசிய சட்­டக் கமி­ஷனோ தன்­னிச்­சை­யான அதி­கா­ரம் கொண்ட அமைப்­பு­க­ளல்ல. சொத்­தை­யான கார­ணத்­தைச் சொல்லி, மாநில உரி­மை­களை ஒன்­றிய அர­சி­டம் அட­மா­னம் வைக்க முடி­வெ­டுத்­து­விட்­டது விஜய் அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­தி­யா­வில் மாநி­லங்­க­ளுக்கு எந்­த­ள­வில் அதி­கா­ரம் இருக்­கும் என்­ப­து­டன், அர­ச­மைப்­புச் சட்­டத்­தின்­படி அமைந்த மாநி­லங்­கள் என்ற அமைப்பே இனி இருக்­குமா என்ற கேள்வி எழுந்­துள்­ளது. இந்­திய வரை­ப­டத்­தின் வட­மு­னை­யில் இருந்த மாநி­லம் ஜம்­மு-­­காஷ்­மீர். தலை­போன்ற தோற்­றத்­து­டன் அமைந்­தி­ருந்த பகுதி. இப்­போது அது மாநி­ல­மாக இல்லை. 2019ஆம் ஆண்­டில் ஒன்­றிய பா.ஜ.க. அரசு அதன் மாநி­லத் தகு­தியை ரத்து செய்து, ஜம்மு-­– காஷ்­மீரை ஒரு யூனி­யன் பிர­தே­ச­மா­க­வும், அத­னு­டன் இணைந்­தி­ருந்த லடாக் பகு­தியை மற்­றொரு யூனி­யன் பிர­தே­ச­மா­க­வும் அறி­வித்­தது. ராணு­வக் கட்­டுப்­பாட்­டு­டன் ஒன்­றிய அர­சின் நேர­டிக் கண்­கா­ணிப்­பி­லான ஆட்­சியை நடத்­தி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தனிச் சட்­டத்­து­டன் சிறப்பு அந்­தஸ்­து­க­ளைக் கொண்­டி­ருந்த மாநி­ல­மான ஜம்­மு-­­காஷ்­மீர் தற்­போது புதுச்­சேரி போன்ற அதி­கா­ர­மற்ற சட்­ட­மன்­றத்­தைக் கொண்ட பகு­தி­யாக மாற்­றப்­பட்­டு­விட்­டது. லடாக் பகு­திக்கு  சட்­ட­மன்­றத் தேர்­தல் நடை­மு­றை­யும் கிடை­யாது. துணை நிலை ஆளு­ந­ரின் நேர­டி­யான ஆட்­சி­மு­றை­தான். இதனை எதிர்த்து அங்­குள்ள மக்­கள் தொடர்ந்து போராடி வரு­கி­றார்­கள். ஒன்­றிய அரசு முன்­வைக்­கும் தீர்­வு­கள் மாநில உரி­மை­களை வழங்­கு­வ­தாக இல்லை என்­பதே மக்­க­ளின் குற்­றச்­சாட்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஜம்­மு-­­காஷ்­மீர் முதல்­வ­ரான ஒமர் அப்­துல்லா அரசு, தங்­க­ளுக்கு முழு­மை­யான மாநில அந்­தஸ்து வேண்­டும் என்று கோரி  சட்­ட­மன்­றத்­தில்2026 செப்­டம்­பர் 28 அன்று தீர்­மா­னம் நிறை­வேற்­றி­யது. சட்­ட­மன்­றத்­தில் உள்ள 90 உறுப்­பி­னர்­க­ளில் 60 உறுப்­பி­னர்­கள் இந்­தத் தீர்­மா­னத்தை ஆத­ரித்து நிறை­வேற்­றி­னர். பா.ஜ.க.வின் 29 எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்­புத் தெரி­வித்து வெளி­ந­டப்பு செய்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">லடாக் யூனி­யன் பிர­தே­சத்­தில் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட பிர­தி­நி­தி­க­ளைக் கொண்ட சட்­ட­மன்­றம் வேண்­டும் என்று லே உயர்­நி­லைக் குழு, கார்­கில் ஜன­நா­யக கூட்­டணி உள்­ளிட்ட அமைப்­பு­கள் போராடி வரு­கின்­றன. சமூக செயற்­பாட்­டா­ளர் சோனம் வான்­சுக் இதில் பங்­கெ­டுத்து செயல்­பட்டு வரு­கி­றார். ஆனால், ஒன்­றிய அர­சின் உள்­து­றை­யின் வரை­வுத் தீர்­மா­னங்­க­ளில் தங்­க­ளுக்­கான முழு­மை­யான அதி­கா­ரம் இல்லை என்று கூறி லடாக்­கின் இரண்டு அமைப்­பு­க­ளும் அந்த வரை­வுத் தீர்­மா­னங்­க­ளைப் புறக்­க­ணித்­து­விட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“நாங்­கள் கேட்­பது மக்­கள் பிர­தி­நி­தி­களு ­டனான அதி­கா­ரம் மிக்க சபை. ஆனால், வரை­வுத் தீர்­மா­னத்­தின்­படி சட்­டம், நிர்­வா­கம், நிதி உள்­ளிட்ட அனைத்­தும் துணை நிலை ஆளு­ந­ரின் அதி­கா­ரத்­தி­லேயே இருப்­பது போலத்­தான் வரை­வுத் தீர்­மா­னங்­கள்உள்­ளன. மலைக் கவுன்­சில்­களை அமைத்து உள்­ளாட்சி அதி­கா­ரத்தை மட்­டுமே வழங்க நினைக்­கி­றார்­கள். இதை ஏற்க முடி­யாது” என லடாக் அமைப்­பி­னர் போராட்­டத்­தைத் தொடர்ந்து வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆர்.எஸ்.எஸ். அமைப்­பின் நூற்றா ண்டுக்­காக பேர­ணி­களை நடத்த விஜய் அரசு தாராள அனு­ம­தியை வழங்கி தனது எஜ­மான விசு­வ­சாத்­தைக் காட்டி வரு­கி­றது. அந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்­புக்கு அண்­ணல் அம்­பேத்­கர் தலை­மை­யில் உரு­வான இந்­திய அர­ச­மைப்­பின் மீது நம்­பிக்கை கிடை­யாது. மாநி­லங்­கள் வலிமை ­யடை­வதை அது விரும்­புவ­ தில்லை. ஒன்­றிய அர­சு-­­மா­நில அர­சு­கள் என்ற நிலைக்­குப் பதில், மத்­தி­யில் ஒரே அர­சும்,  மாநி­லங்­க­ளைப் பல ‘மண்­டல்­கள்’ எனப் பிரித்து, மாந­க­ராட்­சி-­­ந­க­ராட்சி போன்ற குறைந்த அதி­கா­ரத்­து­டன் செயல்­ப­டச் செய்ய வேண்­டும் என்­ப­து­தான் அதன் நோக்­கம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">ஜம்­மு–­­காஷ்­மீ­ரின் மாநில அந்­தஸ்தை ரத்து செய்­த­தும், லடாக்­கில் மக்­கள் பிர­தி­நி­தித்­துவ அர­சுக்­குப் பதில் மலைக் கவுன்­சில்­களை உரு­வாக்­கு­வ­தில் ஒன்­றிய அரசு காட்­டு­கின்ற தீவி­ர­மும், அதி­கா­ர­மிக்க மாநி­லங்­களை வெறும் முனி­சி­பா­லிட்டி ­களாக்­கும் முயற்­சி­யின் தொடக்­கமே. இந்த ஆபத்தை உணர்ந்­து­தான் திரா­விட மாடல் அரசு ஒன்­றி­ய-­–­மா­நில உற­வு­க­ளுக்­கான உயர்­நி­லைக் குழுவை அமைத்­தது. அத­னைக் கலைத்து, அறிக்­கையை நீக்கி மாநில உரி­மை­க­ளைத் தனது டெல்லி எஜ­மா­னர்­க­ளுக்­குத் தலை­வ­ணங்­கித் தாரை வார்க்­கி­றது த.வெ.க அரசு.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>