<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="10/11/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,269,609,1180" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Nov 10 2026 03:39:02 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261110T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="10112026-CHN-06" position.sequence="06" ex-ref="10112026-CHN-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">புதுடெல்லியில் போராட்டக்காரர்களை தாக்குவதா?</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="22"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="27">மாநிலங்களின் பாதுகாப்புக்கு காவல்துறை இருக்க ‘குடிமைப் பாதுகாப்பு வலைப்பின்னல்’ யாருக்காக? </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="veeramani_06_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">சென்னை, நவ.10–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">திரா­வி­டர் கழ­கத் தலை­வர் கி.வீர­மணி அவர்­கள் அறிக்கை வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">எல்லா மாவட்­டங்­க­ளில் இருந்­தும் நக்­சல்­களை ஒழித்­து­விட்­ட­தா­க­வும், உள்­நாட்­டுப் பாது­காப்­புக்கு எந்­த­வித அச்­சு­றுத்­த­லும் இல்லை என்­றும் நேற்று (8.11.2026) சட்­டீஸ்­க­ரில் கோப்ரா படை­யி­ன­ரு­டன் பங்­கேற்ற நிகழ்ச்­சி­ யில் பிர­த­மர் நரேந்­திர மோடி பேசி­யி­ருக்­கி­றார். கடந்த ஆகஸ்ட் 15 அன்று, டில்­லி­யில் பேசும்­போ­தும், இதே போன்­று­தான் பிர­த­மர் பேசி­னார். ஆனால், ‘அறி­வு­ஜீவி நக்­சல்­கள்’ (திமாகி நக்­சல்) என்று ஓர் அடை­யா­ளத்­தைச் சூட்டி, யாரெல்­லாம் தங்­கள் அர­சுக்கு எதி­ரா­கப் பேசு­கி­றார்­களோ, சிந்­திக்­கி­றார்­களோ அவர்­களை எல்­லாம் சாடி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">உள்­நாட்­டுப்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">பாது­காப்­புக்­கென்று</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">தனிப்­ப­டையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">12 ஆண்­டு­கால ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் மக்­கள் விரோ­தச் செயல்­பா­டு­க­ளை­யும், திட்­டங்­க ­ளை­யும், ஜும்­லாக்­க­ளை­ யும் ‘புதிய இந்­தியா பிறந்­து­விட்­டது’ என்­றும், ‘சர்­ஜிக்­கல் ஸ்ட்ரைக்’ என்­றும் நம்­பிக் கொண்­டி­ருந்த மக்­கள் தற்­போது விழிப்­ப­ டைந்து கொண்­டி­ருக்­கின்­ற­னர். தமிழ்­நாட்­டில் இருந்த விழிப்­பு­ணர்வு இப்­போது வட புலத்­தி­லும் வரத் தொடங்­கி­யி­ருப்­ப­தன் அடை­யா­ள­மாக, நீட் திணிப்பு, எஸ்.அய்.ஆர். மூலம் வாக்­கு­ரி­மைப் பறிப்பு போன்ற அநீ­தி­களை எதிர்த்து நாடெங்­கும் அற­வ­ழி­யி­லான மக்­கள் போராட்­டங்­கள் நடை­பெற்­று­வ­ரும் இச் சூழ­லில், உள்­நாட்­டுப் பாது­காப்­புக்­கென்று ஒரு படை உரு­வாக்­கப்­பட இருப்­ப­தாக இந்­திய அர­சின் உள்­துறை அறி­வித்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">உள்­நாட்­டுப் பாது­காப்­புக்கு எந்த அச்­சு­றுத்­த­லும் இல்லை என்று பேசிக் கொண்டே, இன்­னொரு புறம் இப்­ப­டி­யொரு வலைப்­பின்­னலை உரு­வாக்க வேண்­டிய அவ­சி­யம் என்ன என்ற கேள்வி எழு­கி­றது. கடந்த அக்­டோ­பர் 23 அன்று இது குறித்த அறி­விப்பு வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இந்­திய ராணு­வத்­து­டன் இணைந்து,  உள்­துறை அமைச்­ச­கம் ஒரு முன்­னோ­டித் திட்­ட­மாக (Pilot Project) 12 மாநி­லங்­கள் மற்­றும் யூனி­யன் பிர­தே­சங்­க ­ளில் சுமார் 60 ஆயி­ரம் தன்­னார்­வ­லர்­க­ளைக் கொண்ட குடி­மைப் பாது­காப்பு வலை­ய­மைப்பை (Civil Defence Network) உரு­வாக்க உள்­ளது என்று அச் செய்தி தெரி­விக்­கி­றது. முதற்­கட்­ட­மாக, இந்த 12 மாநி­லங்­கள் மற்­றும் யூனி­யன் பிர­தே­சங்­க­ ளைச் சேர்ந்த குடி­மைப் பாது­காப்பு முதன்­மைப் பயிற்­சி­யா­ளர்­க­ளுக்கு மூன்று நாள் சிறப்­புப் பயிற்சி அளிக்­கப்­ப­டும். ஒவ்­வொரு மாநி­லம் அல்­லது யூனி­யன் பிர­தே­சத்­தி­ லி­ருந்­தும் தலா 50 பேர் வீதம், மொத்­தம் 600 முதன்­மைப் பயிற்­சி­யா­ளர்­கள் இந்­திய ராணு­வத்­தின் குறிப் பிட்ட பயிற்சி மய்­யங்­க­ளில் நவம்­பர் மாதத்­தின் இரண்­டா­வது வாரத்­தில் இந்­தப் பயிற்­சி­யைப் பெறு­வார்­கள் என்­றும் குறிப்­பி­டும் அந்­தச் செய்தி, மேலும் முக்­கி­ய­ மான ஒன்­றைக் காட்­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">பிர­த­மர் மோடி­யின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">தொலை­நோக்­குப் பார்­வையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">‘பிர­த­மர் நரேந்­திர மோடி தனது சுதந்­திர தின உரை­யின் போது, நவீன அமைப்­பு­க­ளும், மேம்­பட்ட தொழில்­நுட்­பங்­க­ளும், தற்­போ­தைய காலத்­திற்கு ஏற்ற தயார்­நி­லைத் திறன்­க­ளு­டன் கூடிய ஒரு வலு­வான குடி­மைப் பாது­காப்பு வலை­ய­மைப்பை உரு­வாக்க வேண்­டும் என்று தொலை­நோக்­குப் பார்­வை­யு­டன் சொன்­ன­தன் அடிப்­ப­டை­யி­லேயே இந்த முயற்சி மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது’ என்று அச் செய்தி குறிப்­பி­டு­கி­றது. இந்­திய ஒன்­றிய அர­சின் கட்­டுப்­பாட்­டில் ராணு­வம் (முப்­படை) இருக்­கி­றது; உள்­நாட்டு, எல்­லைப் பாது­காப்­புக்­கான பிற படை­கள், சிறப்பு அதி­ர­டிப் படை­கள் இருக்­கின்­றன. அவற்­றில் சேரு­வ­தற்­கான தகு­தி­கள், முறை­ யான பயிற்­சி­கள், அதற்­கான பயிற்சி மய்­யங்­கள் எல்­லாம் ஏரா­ள­மாக செலவு செய்­யப்­பட்டு உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. மாநி­லங்­க­ளில் அந்­தந்த மாநில அர­சு­க­ளின் கீழ் காவல்­துறை இருக்­கி­றது. அதில் தேவைக்­கேற்ப சிறப்­புப் படைப்­பி­ரி­வு­கள் இருக்­கின்­றன.  ஏற்­கெ­னவே, குடி­மக்­கள் பங்­கேற்­கும் அமைப்­பு­கள் ஊர்­கா­வல் படை (ஹோம்­ஹார்டு) என்ற பெய­ரில் சில இடங்­க­ளில் இருக்­கின்­றன. பேரி­டர் மீட்­புப் படை­கள் இருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இவற்­றைத் தவிர்த்து, எதற்­காக இப்­போது ஒரு குடி­மைப் பாது­காப்பு வலைப்­பின்­னல்? அது­வும் ‘தயார் நிலை­கள்’, ‘நவீன அமைப்­பு­கள்’ என்­றெல்­லாம் சந்­தே­க­மூட்­டும் சொல்­லா­டல்­கள் என்ன சொல்ல வரு­கின்­றன? உள்­நாட்டு அச்­சு­றுத்­தல் இல்லை என்று சொல்­லி­விட்டு, எதற்­காக இந்­தப் படை­யணி?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இதில் யார் சேர்க்­கப்­ப­ட­வி­ருக்­கி­றார்­கள்? என்ன வித­மான பயிற்­சி­கள் வழங்­கப்­ப­ட­வி­ருக்­கின்­றன? இதற்­கான தேவை என்ன? இவர்­க­ளின் அதி­கா­ரங்­கள் என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">ஆர்.எஸ்.எஸ்.சுக்­குத்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">துணை செய்­வ­தற்கா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">ஆர்.எஸ்.எஸ்.சும், அந்த ஆக்­டோ­ப­சின் கரங்­க­ளான பல அடி­யாள் படை­க­ளும், நாட்­டின் பல பகு­தி­க­ளி­லும் பசு­வ­தைத் தடுப்பு, மத­மாற்­றத் தடுப்பு, கலாச்­சா­ரப் பாது­காப்பு என்ற பெய­ரில் தாக்­கு­தல்­கள், கொலை­கள், தீ வைப்­பு­கள், வன்­மு­றை­கள், வழி­பாட்­டுத் தலங்­கள் – வீடு­கள் இடிப்பு, கொள்­ளை­கள் என்று அட்­டூ­ழி­யங்­க­ளில் ஈடு­பட்­டு­வ­ரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இவர்­க­ளுக்­கெல்­லாம் பயிற்­சி­யும், அங்­கீ­கா­ர­மும் தரும் சூழ்ச்­சி­யாக இந்த ‘சிவில் டிபன்ஸ் நெட்­வொர்க்’ அமை­யுமோ என்ற சந்­தே­கம் வலு­வாக எழுந்­துள்­ளது. தமிழ்­நாட்­டில் இப்­படி உரு­வாக்­கப்­பட்ட ‘ஃபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ என்­னும் குழுக்­கள் பல இடங்­க­ளில் உண்­டாக்­கிய பிரச்­சி­னை­ கள், அதி­கா­ரத்­தைக் கையில் எடுத்­துக் கொண்டு அவர்­கள் செய்த செயல்­கள், சாத்­தான்­கு­ளம் காவல் மர­ணங்­க­ளைத் தொடர்ந்து இவ் வமைப்­பின் செயல்­பா­டு­கள் நிறுத்­தப்­பட்­டன. இந்த அமைப்­பிற்­குள்­ளும் அப்­போதே இந்­துத்­து­வா­வி­ன­ரின் ஊடு­ரு­வல் இருந்­த­தா­கச் சந்­தே­கம் எழுந்­தது. இப்­படி பல எதிர்­ம­றை­யான, மக்­கள் விரோ­த­மான நிகழ்­வு­களே வர­லாற்­றில் உள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">நக்­ச­லைட்­டு­களை அழிக்­கி­றோம் என்ற பெய­ரில் உரு­வாக்­கப்­பட்ட சல்­வார் ஜுடூம் படை­கள், பழங்­குடி மக்­கள் மீது நிகழ்த்­திய கொடு­மை­களை நாடு அறி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">புது­டில்­லி­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">போராட்­டக்­கா­ரர்­க­ளைத் தாக்­கி­ய­வர்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">புது­தில்­லி­யில் நடந்த போராட்­டங்­க­ளின் போது, பேட்ச் அணி­யாத, காவல்­து­றை­யி­னர் தானா என்று உறு­தி­செய்ய முடி­யாத குண்­டர்­கள் பலர் போராட்­டக் கா­ரர்­க­ளைத் தாக்­கி­ய­தும், சீருடை அணி­யாத பலர் காவல்­து­றை­யி­னர் என்ற பெய­ரில் செய்த அத்­து­மீ­றல்­க­ளும் உச்­ச­நீ­தி­மன்­றத்­தா­லேயே கண்­டிக்­கப்­பட்­டன. ஆனா­லும், அதன் பின்­னும் தொடர்­கின்­றன. இது தானே ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் போக்கு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இரா­ணு­வ­மும், காவல்­து­றை­யும் அரசை நடத்­தத் தேவை­யா­னவை என்­றா­லும், அதி­கா­ரம் கையில் கிடைக்­கும்­போது யார் எப்­படி மாறு­வார்­கள் என்­ப­தற்கு மோச­மான பல நிகழ்­வு­கள் உல­கம் முழு­வ­தும், இந்­தியா, தமிழ்­நாடு என எங்­கும் நடந்­துள்­ளன. முறை­யான கட்­டுப்­பா­டு­கள், பயிற்சி உள்ள அமைப்­பு­க­ளுக்கே இது­தான் நிலைமை என்­றால், மற்ற அமைப்­பு­க­ளுக்கு அதி­கா­ரம் வழங்­கி­னால் நிலைமை என்ன ஆகும்? மறை­மு­க­மாக, இந்­துத்­து­வக் குண்­டர்­க­ளைக் கொண்ட படை­யாக இதனை உரு­வாக்­கு­ வது ஒன்­றிய அர­சின் நோக்­க­மாக இருக்­காது என்று மறுக்க முடி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">‘இந்­துத்­து­வா’­வின் தத்­து­வக் கர்த்­தா­வான வி.டி.சாவர்க்­கர் எழு­திய ‘Hinduise Military; Militarise Hindudom’ என்­பதே ஆர்.எஸ்.எஸ்.சின் திட்­டம். ‘இரா­ணு­வத்தை இந்­து­ம­ய­மாக்கு; இந்­துவை இரா­ணு­வ­ம­ய­மாக்­கும்’ என்­ப­தன் முதல் பாதியை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­குப் பெரும் முயற்சி மேற்­கொள்­ளப்­பட்­டு­வ­ரு­கி­றது. அக்­னி­பாத் வீரர்­கள் என்­னும் பெய­ரில் கொண்­டு­வ­ரப்­பட்ட திட்­டம், அத்­த­கை­ய­தொரு முயற்­சியா என்­னும் கேள்வி கார­ண­மா­க­வும் அத் திட்­டம் எதிர்க்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">மேலும், மாநி­லங்­க­ளில் தேவை­யான பாது­காப்பு ஏற்­பா­டு­களை மேற்­கொள்­வது மாநில அர­சின் பட்­டி­ய­லுக்­குட்­பட்ட காவல்­து­றை­யின் கடமை. அதனை மீறியமற்­றோர் இணை அமைப்பு உரு­வாக்­கப்­ப­டு­வதை எப்­படி அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டப்­படி ஏற்க முடி­யும்? உள்­நாட்­டுப் பாது­காப்பு என்ற பெய­ரில், மாநி­லங்­க­ளின் கட்­டுப்­பாட்டை மெல்ல மெல்ல ஆக்­கி­ர­மிக்­கக் கூடா­ரத்­துக்­குள் புகுந்த ஒட்­ட­கத்­தின் கதை­யாக, ஒன்­றிய அரசு மேற்­கொள்­ளும் அதி­கார அத்­து­மீ­றல் அல்­லவா இது? இதனை மாநில உரிமை என்­னும் நோக்­கி­லும் ஏற்க முடி­யுமா? இதனை மாநில அரசு கண்­டிக்க வேண்­டாமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. வின் திட்­டங்­கள், எத்­த­கைய உள்­நோக்­கங்­கள் கொண்­டவை என்­ப­தைப் பல பிரச்­சி­னை­க­ளில் நாம் வெளிக்­கொண்டு வந்­துள்­ளோம். அதி­கா­ரத்­தை­யும், ஆயு­தத்­தை­யும் ஒரே நேரத்­தில் தங்­கள் கைக­ளில் கொண்­டு­வர அவர்­கள் சுற்­றிச் சுற்றி வலை பின்­னிக் கொண்டே இருக்­கின்­ற­னர். அர­சி­ய­லை­மைப்­புச் சட்­டப்­படி உரு­வாக்­கப்­பட்ட அமைப்­பு­க­ளைத் தங்­கள் கைக­ளில் கொண்­டு­வ­ரு­கின்­ற­னர். அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­திற்கு முர­ணா­கப் பல விச­யங்­க­ளில் செயல்­ப­டு­கின்­ற­னர். சட்­டத்­தைத் திருத்தி, தங்­க­ளுக்­குச் சார்­பா­ன­தாக, சர்­வா­தி­கா­ரத்தை நோக்கி நகர்த்­து­வ­தற்­கான முயற்­சி­க­ளைச் செய்­து­வ­ரு­கின்­ற­னர். இந்­நி­லை­யில், அதன் இன்­னொரு முயற்­சியே இந்த ‘குடி­மைப் பாது­காப்பு வலைப்­பின்­னல்’ என்­பது சந்­தே­கத்­திற்­கி­ட­மில்­லா­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">புதிய வலைப் பின்­னலை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">அனை­வ­ரும் எதிர்க்க வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இந்­தி­யா­வின் ஜன­நா­ய­கத்­திற்கு எதி­ராக, மாநில உரி­மை­க­ளைப் பறித்து, குடி­மக்­க­ளின் உரி­மை­யைக் கேள்­விக்­கு­றி­யாக்­கும் ஒன்­றிய அர­சின் இந்த முயற்­சியை அனை­வ­ரும் எதிர்க்க வேண்­டும்! ஜன­நா­ய­க­வா­தி­கள் எதிர்க்க வேண்­டும்!  குறிப்­பாக மாநில அர­சு­கள் எதிர்க்க வேண்­டும்! இது அவ­சி­யம் – அவ­ச­ரம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இவ்­வாறு திரா­வி­டர் கழ­கத் தலை­வர் கி.வீர­மணி தமது அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>